Sunday, August 10, 2008

உதிரிக் குறிப்புகள் 2

படத்தில் இருக்கும் இந்த நபரை யாரென்று அடையாளம் தெரிகிறதா? பார்க்க யாரோ பாத்திரக் கடை முதலாளி போல சாதுவாகத் தோன்றும் இவர் உண்மையில் படுவில்லங்கமான ஆள். இவரை ஒருவிதத்தில் நம் எல்லருக்கும் தெரிந்திருக்கும், உண்மைப்பெயரில் அல்ல, வேறு ஒரு நிழல் பெயரில். இவர் யாரென்பதை பதிவின் இறுதில் காண்க.


இவரைப் பற்றி ஒரு கார்(மகிழ்வுந்து!!) ஓட்டுனர் கூறியது:

'இவருக்கு நான் சுமார் 50 தடவைகளுக்கு மேல் கார் ஓட்டியிருக்கிறேன். கண்கள் சிவந்து தீப்பிழம்பு போல் இருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் இடி போல இறங்கும். இது போல ஒளிபொருந்திய உக்கிரமான முகத்தை நான் வாழ்நாளில் பார்த்தது கிடையாது'


-
********மால்புவா - ரப்ரி
-

எனக்கு இனிப்புப் பண்டங்கள் என்றால் பிடிக்காது(ஒரு சிலவற்றைத் தவிர).அலுவலகத்தில் எங்கள் டீமில் பெங்காலி, மராட்டி, குஜராத்தி என பலமாநிலத்தவரும் உண்டு. ஒவ்வொருமுறை ஊருக்கு போய்விட்டு வரும்போது அவரவர் அந்தந்த மாநிலத்தின் புகழ் பெற்ற இனிப்புவகையினை வாங்கிவரவேண்டும். அந்தமதிரி இனிப்புகள் வரும் நாட்களில் "conference room"ல் அடிதடியே நடக்கும்.நான் இவற்றை பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். அதாவது மேசை, மார்க்கர் பேனா போல இனிப்பும் ஒரு வஸ்த்து அவ்வளவே. இனிப்பு பிரியரான என் பெங்காலி மேனேஜருக்கு என்னைப்பார்ர்து ஒரே ஆச்சரியம், என்னைத் தனியே அழைத்து 'இளம் வயதில் சர்ர்க்கரை நோய்வருவது இப்போதெல்லாம் சகஜம் தான். நன் உனக்கு "Sugar free "இனிப்புகள் வாங்கிவருகிறேன் என்றார்."யோவ் எனக்கு சர்க்கரை நோயெல்லாம் இல்லை" என்று சொன்னால் நம்ப மறுத்தார்கள். இப்படி இருக்கையில் ஒருநாள் "டீம் லஞ்சிற்கு" இங்கிருக்கும் ஒரு பிரபல உணவகத்திற்கு சென்றிருந்தோம். அங்கு மால்புவா என்ற ஒரு இனிப்புவகையை ஆர்டர் செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட நம்மவூர் அப்பம் போன்ற நிறத்தில் அதேசமயம் அவ்வளவு தடிமனாக இல்லாமல் மெல்லிய இழைபோல இருந்தது. ஜீராவில்ருந்து எடுத்து வைத்திருந்தார்கள். அருகே ஒருகின்ணத்தில் ரப்ரி என்று சொல்லப்படும் வெள்ளைநிற திரவமும் இருந்தது.பாசந்தியை மிதக்கவிடும் பால்கலந்த ஜீரா(?) போல இருந்தது. சாப்பிட ஆவலைத் தூண்டியதால் ஒரு விள்ளலை எடுத்து அந்த ரப்ரியில் முக்கி மெதுவாக வாயில் போட்டேன். ஆஹா!! மால்புவா ரப்ரியுடன் சேர்ந்து தொண்டையில் வழுக்கிக் கொண்டு போனபோது ஒரு பரவச நிலையை அடைந்தேன். சொர்க்கம் அருகில் தட்டுப்படுவது போன்ற ஒரு உணர்வு. இப்படி ஒரு சுவையான ஒரு பண்டத்தினை என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதே இல்லை விசாரித்ததில் இதன் பூர்வீகம் மேற்கு வங்கம் என அறிந்தேன். ரசகுல்லாவும் குலப் ஜாமுனும் இதன் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. அதன் பிறகு அந்த உணவகத்திற்கு அடிக்கடி செல்லத் துவங்கியுள்ளேன். இங்கு மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டால் எனது உள்ளாடை வரை கழற்றிக் கொடுக்க வேண்டும்(Costly) என்பதால் டீஜென்டாக மால்புவா மட்டும் சாப்பிட்டுவிட்டு அகன்றுவிடுவேன். இந்த உணவகத்தில் நடிகர் ஓம் புரி மற்றும் பாடகி ஆஷா போஸ்லே பொன்ற பிரபலங்களைச் சந்திது ஆட்டொகிராஃப் பெற்றது உபரி சந்தொஷம்.
********புத்தகக் குப்பை

-நான் குடியிருக்கும் வீட்ட்டிற்கு எதிர் வீட்டில் நாங்கு வட இந்தியர்கள் குடியிருந்தார்கள். நான் பணிபுரியும் அதே அலுவலகம் என்பதால் ஒரளவுக்குப் பழக்கமுண்டு.அந்தவீட்டில் இரண்டுபேர் ரொம்ப காலமாகக் குடியிருக்கிறார்கள், மற்ற இருவர் மாறிக்கொண்டே இருந்தார்கள்.சில மாதங்களுக்கு முன் அந்த நாங்குபேருமே பணி மாற்றம் காரணமாக வெவ்வேறு ஊர்களுக்கு/நாடுகளுக்கு செல்லவேண்டிய நிலைமை.அப்போது ஒரு சிறு மூட்டையுடன் எங்கள் வீட்டுக்கு வந்தான் ஒருவன்."பலகாலமாக இந்த வீட்டில் இருந்தவர்கள் வாங்கிய புத்தகங்கள் இவை. நீ முடிந்தால் எடைக்கு போட்டுவிடு, இல்லையென்றால் தூக்கி எறிந்துவிடு.என்னதான் செய்வது இந்தகுப்பையை வைத்துக்கொண்டு" என்று சொல்லிவிட்டு சென்றது அந்த கற்பூர வாசம் தெரியாத கழுதை.எதாவது CAT, GRE தேர்வுகளுக்கான புத்தகங்களாக இருக்கும் என நினைத்து பிரித்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அந்த மூட்டையிலிருந்த புத்தகங்களின் பட்டியலை இங்கு தருகிறேன், எடைக்கு போட்டால் எவ்வளவு தேறும் என்று சொல்லுங்கள்.1. Great Expectations - Charles Dickens (Qty2)

2. Animal Farm - George Orwell

3.The Prophet - Khalil Gibran

4.The fountain head - Ayn Rand

5.The catcher in the rye - J.D.Salinger

6. Selected essays of swami vivekananda

7.Zen and the Art of Motorcycle Maintenance - Robert M. Pirsig

8.The Alchemist - Paulo Coelho

9.To Kill a Mockingbird - Harper Lee

10.India Unbound - Gurcharan Das

11. Jack: Straight from the Gut - Jack Welch

12.Oxford dictionary(Qty2)

13. In Search of Excellence - Tom Peters

(இன்னும் நான்கைந்து புத்தகங்களின் பெயர்கள் நினைவிலில்லை)


டபரா, கிண்ணம் வரை packers & movers வைத்து பேக் செய்யத் தெரிந்தவனுக்கு இந்த குப்பைகளை எடுத்துப் போக மனமில்லை பாவம்.இந்தக் குப்பையில் " Letters to Penthouse" போன்ற சில மாணிக்கங்கள் கிடைத்ததை நான் இங்கு குறிப்பிடவில்லை :-)
-

********


பதிவின் துவக்கத்தில் நீங்கள் பார்த்தது "வரதராஜன் முன்னுசாமி முதலியார்" என்பவரின் படத்தைத்தான். மாடூங்கா, தாராவி மக்களுக்குச் செல்லமாக வர்தா பாய்(வரதா அல்ல). மும்பையின் முதல் நிழலுலக தாவாக அறியப்படும் இந்த மதுரைக்காரர், மும்பை விக்டோரியா டெர்மினஸில் ஒரு கூலியாக தனது வாழ்க்கையைத் துவங்கியவர். பின் மெதுமெதுவாக "பூட் லெக்கிங்" என்று சொல்லப்படும் போதைமருந்து கடத்தல், பணத்திற்கு ஆட்களைக் கொல்லுதல்(contract killing) என பெரும் தாதாவாகி ஒரு குறிப்பிட்டகாலகட்டத்தில்(1968 - 1980) மும்பையையே தனது பிடியில் வைத்திருந்தார். ஹாஜி மஸ்தான், லால கரீம் போன்றவர்கள் சமகாலங்களில் தோன்றியவர்கள். நீதிமன்றங்கள் ஒருபுறம் செயல் பட்டுக்கொண்டிருக்க, வர்தாபாயின் சொந்த (அ)நீதிமன்றம் ஒருபுறம் செயல் பட்டுக்கொண்டிருக்குமாம். உண்மையில் தண்டனை பெறப் போகிறவர்களைத் தீர்மானிப்பவர் அவர்தான்.

1980 வாக்கில் மும்பையின் கமிஷ்னராகப் பதவியேற்றுக்கொண்ட Y.C.பவார் வரதராஜனின் ஆட்கள் அனைவரையும் கைது செய்து அவரது நடவடிக்கைகள அனைத்தயும் முடக்கினார். வேறுவழியின்றி சென்னைக்கு தப்பி வந்த வரதராஜன் சிறிது காலம் வாழ்ந்தபின் தன் 62 அவது வயதில் காலமானார்."கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு" என்ற பழமொழியெல்லாம் வரதா பாயிடம் எடுபடவில்லை. வாழ்க்கையின் சுவாரஸியமும், சூட்சமும் அதன் பொதுப்படுத்த முடியாத தன்மையில்தானே அடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் மாடூங்காவில் விநாயக சதுர்தியை பெரியவிழாவாகக் அமர்க்களப்படுத்துவது வரதராஜனுக்குப் பிடிக்கும்(பணத்தை அள்ளி வீசும் வைபோகமெல்லாம் உண்டு). இன்றும் வரதராஜனின் குடும்பத்தினர் மாடூங்காவில் உள்ள அந்த குறிப்பிட்ட கணபதி மண்டலத்திற்கு வருடந்தோறும் விழா நடத்த பணம் அனுப்பி வருகிறார்கள்.

********
இன்றுடன் எனது நட்சத்திர வாரம் நிறைவடைகிறது. எனகு நட்சத்திர அந்தஸ்தை அளித்து என்னை எழுதத் தூண்டிய தமிழ்மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் பதிவுகளைப்ப் படித்து ,பின்னுட்டம் இட்டு என்னை உற்சாகப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

_/\_ .

17 comments:

தம்பி said...

அப்போ உள்ளாடை முதல்கொண்டு காஸ்டிலியாக அணிபவர் மட்டுமே அங்கே மால்புவா சாப்பிடவேண்டுமா!

தட்டுல இருக்கறது நம்ம ஊரு அதுர்சம் மாதிரி இருக்குதே!

Prakash said...

நாலு வருஷத்துக்கு முந்தின என்னைப் பாத்த மாதிரி இருக்கு :-)

கோவி.கண்ணன் said...

இதுவும் நிறைவான பதிவு, உண்மை நாயகனைப்பற்றியும் அறிந்து கொண்டேன்.

பரத் said...

தம்பி,
//அப்போ உள்ளாடை முதல்கொண்டு காஸ்டிலியாக அணிபவர் மட்டுமே அங்கே மால்புவா சாப்பிடவேண்டுமா!
//
உண்மைதான் தம்பி. கம்பெனி செலவில் அல்லது ஸேட் நண்பனின் பிறந்த நாள் பார்டியின் போது மட்டுமே இந்த ஹோடல்களுக்கு போகவேண்டும்.
ஒரு ப்ளேட் மால்புவாவின் விலை இங்கு 125 ரூபாய். உங்கள் உள்ளாடயின் விலையோடு ஒப்பிட்டுக் கொள்ளவும் :)))

பார்ர்க்க அதிரசம் போலத்தான் இருந்தது. ஆனால் மெல்லிசாக

பரத் said...

Prakash,
ஆஹா........... :))))))))))

பரத் said...

கோவி.கண்ணன்,
//இதுவும் நிறைவான பதிவு//

கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி கண்ணன் :-)

பரத் said...

Prakash,
Got it!! thanks :-)

King... said...

நல்ல பதிவு பரத்...

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் பரத்.
நல்லவேளை அடிச்சுப்புடிச்சுக் கடைசி நாளுலேயாவது வந்துட்டேன்.

ஐயோ...இப்படி மால்புவா எல்லாம் சொல்லி......

இனிப்புன்னதும் ஓடிவந்தேன்:-)

பூனா எப்படி இருக்கு?

இனிமேல்தான் உங்க வாரத்தைப் படிக்கணும்.

ஸ்ரீதர் நாராயணன் said...

//புத்தகக் குப்பை //

இப்படி எனக்கும் ஒரு அனுபவம். பெங்களூருவில் பக்கத்து அறையை காலிசெய்து ஒரு புத்தக மூட்டையை கொண்டு வந்து காண்பித்தார்கள். 50 ரூபாய்க்கு நான் அள்ளிக் கொண்ட சில புத்தகங்கள் - RK Lakshman cartoons - 3 பகுதிகள்; குஷ்வந்த் சிங்கின் கதைகள் மற்றும் பயோகிராஃபி இன்னமும் சில புத்தகங்கள். :-))

Lakshmi Sahambari said...

Good wrk from u ! All the five posts were impressive :-)))))

Way to go !

பரத் said...

Kings,
நன்றி :)

பரத் said...

துளசி கோபால்,
வாங்க துளசி டீச்சர்,
வாழ்த்துக்களுக்கு நன்றி :)
பூனாவில் நல்ல மழை
படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க

பரத் said...

ஸ்ரீதர் நாராயணன்,
// RK Lakshman cartoons - 3 பகுதிகள்; குஷ்வந்த் சிங்கின் கதைகள் மற்றும் பயோகிராஃபி இன்னமும் சில புத்தகங்கள். :-))
//
நல்ல வேட்டை தான் :))

பரத் said...

Lakshmi Sahambari,
ஆதரவுக்கு நன்றி லக்ஷ்மி. :-)

Anonymous said...

Barath,

Enjoyed Reading your Post.

Keep Blogging.

Kudiya Seekaram , Naanum Oxford um nu Oru Post Ezhuthu...Eagery Waiting for that..

Vijay

Anonymous said...

CHECK THIS UNIQUE SITE
www.nodahej.com Matrimonial Site is the worlds only Matrimonial Site for peoples who don't want to take and give dowries for their marriages.its total free site.Add your Free Matrimonial Profile Now.
http://nodahej.com