Saturday, March 31, 2007

The Namesake - விமர்சனம்'சலாம் பாம்பே' மூலம் ஹாலிவுட்டின் கவனம் கலைத்த மீரா நாயருக்கு இது அடுத்த படி. ஜும்ப்பா லஹிரியின் புழ்பெற்ற நாவலை அதே பெயரில் திரைக்கு மொழிமாற்றியிருக்கிறார்.நான் நாவலை படிக்கவில்லை என்பதால் "என்னயிருந்தாலும் புத்தகம் அளவுக்கு படம் சிறப்பா இல்லை" போன்ற கிளிஷே புலம்பலைத் தவிர்க்க முடிந்தது.நாவல் முழுமையையும் திரையில் சொல்லிவிடவேண்டும் என்ற பதட்டம் எந்த பிரேமிலும்(frame) தெரியாதது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

எவ்வளவு யோசித்தும் கதையை ஒரே பாராவில் சொல்வது எப்படி என விளங்கவில்லை.காரணம் அதிரடித் திருப்பங்களின்றி அதீத இயல்புத்தன்மையுடன் பயணிக்கிறது படம்(ஆதவன் கதை போல).எழுபதுகளின் துவக்கத்தில் நியூயார்க் சென்று குடியேறும் பெங்காலி குடும்பத்தைப் பற்றியது கதை.அங்கு பிறக்கும் அவர்களின் குழந்தைகள் சந்திக்கும் Cross-Culture குழப்பங்களையும்,Identity குறித்தான வினாக்களையும் எழுப்பிச்செல்கிறது படம்.

பெங்காலி தம்பதிகளாக இர்பான் கான்(Irfan Khan), தபு(Tabu) நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள்.அதுவும் இர்பான் கானின் சின்ன சின்ன முகபாவ மாற்றங்கள் கூட அருமை(அட யாருப்பா அங்க,இவர தமிழுக்கு கூட்டீட்டு வாங்க).இவர்களின் மகனாக வரும் கால் பென்னும்(Kal Penn) நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை மிகைப்படுத்தி ஜல்லியடிக்கும் வழக்கமான 'இந்திய-ஆங்கில' படம் போலன்றி உள்ளபடி காட்டியதற்கு பாராட்டலாம்.அதே சமயம் அஷோக் கங்கூலி அனாமத்தாக இறந்துபோகும் போது சற்று கிலி ஏற்படுகிறது.குறிப்பாக அவர் இறந்து போவதை விஸ்தாரமாகக் காட்டாமல் ஒரு செய்தியாகக் குறிப்பிடுவது நிகழ்வின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது(சலாம் மீரா!).

வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.திருமணமாகி பலவருடங்கள் கழித்து தாஜ்மஹால் வருகிறார்கள் தபுவும் இர்பானும்,
இர்பான்:ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைசேன்.பொண்ணுபாக்க வந்தப்ப என்ன பிடிசிருக்குன்னு ஏன் சொன்ன?
தபு:என்ன பாக்க வந்தவங்கள்ள நீ தான் Best.ஒரு கை மட்டும் இருந்த கார்டூனிஸ்ட்,ரெண்டு குழந்தைங்களோட வந்த விடோவர் இவங்களுக்கு நீ பரவால்ல.அதுவும் நீ போட்டுகிட்டு வந்த அமெரிக்கன் ஷூ எனக்கு ரொம்ப பிடிசிருந்தது
(இர்பான் ஏமாற்றத்தோட பாக்க)
தபு:ஏன் அமெரிக்க காரங்க மாதிரி "I Love You" சொல்லுவேன்னு பாத்தியா?

3.5/5 . கண்டிப்பாகப் பார்க்கலாம்.குரூர மான சிந்தனைகளுக்கு விரட்டிச் செல்லாத சாதாரணமான அமைதியான விடுமுறை நாளை வேண்டுபவர்கள் பார்க்க நான் பரிந்துரைக்கும் மற்றொரு படம் "The Pursuit of happyness"