Saturday, March 27, 2010

அங்காடித் தெரு



சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களின் விலை சொல்லும் சிறுமி, ஹோட்டலில் தண்ணீர் வைக்கும் சிறுவன், சிக்னலில் டிவி கவர் வாங்கசொல்லி நச்சரிக்கும் சிறுவன் இவர்களைப்பார்க்கும் போதெல்லாம் , ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று தோன்றும். வாழ சரியான வாய்ப்புகள் வழங்கப்படாத இவர்களின் எதிர்காலம் என்ன என்ற அச்சமும், குற்றவுணர்வும் தோன்றும். அதுபோன்ற சமயங்களில் சட்டென்று கவனத்தைக் கலைத்துக் கொண்டு சொந்தவேலைகளில் மூழ்கிப்போவேன்(வோம்). இவர்களின் வாழ்க்கையை வலியுடன் திரையில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார் வசந்தபாலன். குறைகளென்று தேடிச்சொல்ல நிறைய இருந்தாலும், மிகச்சிறந்த படங்களின் வரிசையில் சந்தேகத்திற்கிடமின்றி இடம் பிடிக்கிறது ’அங்காடித்தெரு’. படம் பற்றிய எண்ணங்கள் மனதை அலைக்கழிப்பதால் “கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்” என்பதை மட்டும் சொல்லி பதிவை முடிக்கிறேன்.

3 comments:

Barath said...

Expectations are rising big time for this movie since I've seen reviews from your blog and the other blogs that you had shared. Interestingly the blog about Angaadi theru & Naan Kadavul had the same opinion as mine. Bala, undoubtedly one of the best screenplay writer/director who has an originality of his own, always had a super-power hero who can kick bad people instantly and punish them on his own will. Only reason this one fades away because of the way other characters and relationships were dealt with. Bala is one guy who I respect more than anyone else in tamil and hence would be glad if he comes out of his super-hero stories. Hope Angaadi theru had a deep impact on you to the extent of not letting you write a detailed review.Eager to watch it soon!!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பரத் said...

பரத்,
கருத்துக்களுக்கு நன்றி. கிட்டத்தட்ட பாலா பற்றிய உங்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். அங்காடித் தெரு சாகச நாயகர்கள் இல்லாத எதார்த்த படம் என்பதாலேயே மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்துவிட்டு உஙளின் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
sorry for the delay in responding to your comments.