Monday, September 03, 2007

ஜானகி அம்மாள்




கணித மேதை ராமானுஜன் இங்கிலாந்தில கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது ஒரு முறை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார்.அவரைப் பார்க்க அவரின் நண்பரும் , கணித மேதையுமான ஹார்டி வாடகைக்காரில் வந்திறங்கினார்.அவர் பயணித்த கார் எண் 1729.அவர் கணித மேதையில்லையா..அதனால் வரும் வழியெல்லாம் அந்த எண்ணின் சிறப்பைப்பற்றி ஆராய்ந்து கொண்டேவந்தார்.ராமானுஜத்தை சந்தித்தபோது இந்த எண்ணைக் குறிப்பிட்டு "இந்த எண்ணிற்கு எந்த சிறப்புமே இல்லை.போரிங் நம்பர்" என்று சொல்லியிருக்கிறார்.ஒரு விநாடி யோசித்த ராமானுஜன்"நீங்கள் சொல்வது தவறு.இது மிகவும் சுவாரஸியமான எண்" என்றாராம்.இந்த எண்ணின் சிறப்பாக ராமானுஜன் என்ன சொல்லியிருப்பார் என்று இப்பதிவின் இறுதிவரை யோசித்துப் பாருங்கள்.


*******************************************

ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டுகையில்,அவரது துணைவியார் ஜானகி அம்மாள் பற்றிய செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன.10வயதில் திருமணம்,திருமணம் என்றால் என்ன என்று புரியத்துவங்கும் முன்னரே(21) விதவைக்கோலம்.சொற்பகாலமே வாழ்ந்த ராமானுஜனுக்கு எதிப்பதமாக கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலம்(94 வயதுவரை)வாழ்ந்து மறைந்திருக்கிறார்,தனிமையில்.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,ஆச்சாரமான ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒரு இளம் விதவையின் விதி எவ்வாறு அமையும் என்பது நன்றாகவே தெரியும்.அப்பெண் தன் பெற்றோரையோ,சகோதரனையோ அண்டி,ராமா ராமா என்று ஜெபித்தபடி தன் மிதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான்.ஆனால் ஜானகி தன் வாழ்க்கை அவ்வாறு அமைய அனுமதிக்கவில்லை.கணவன் இறந்தபின் பம்பாய்யில் தன் சகோதரனின் வீட்டில் தங்கி முறையாக தையலும்,ஆங்கிலமும் பயின்றிருக்கிறார்.பின் சென்னை வந்து அனுமந்தராவ் தெருவில் குடியேறிய ஜானகி அடுத்து வந்த 50 ஆண்டுகளை தனியாக இல்லை தனித்து வாழ்ந்திருக்கிறார்.அவர் பயின்ற தையல் தொழில் அவருக்கு நல்ல பொருள் ஈட்டித்தந்திருக்கிறது.இதற்கிடையில் அவரது தோழி ஒருவர் திடீரென்று இறந்து போக,அவரின் குழந்தையை தத்தெடுத்து படிப்பு செலவு முழுமையையும் ஏற்றிருக்கிறார்.ஏழ்மைகாரணமாக படிப்பைத்தொடரமுடியாத பலருக்கு பொருள் கொடுத்து உதவியிருக்கிறார்.
ராமனுஜருக்கு சிலை ஒன்று வைக்கக் கோரிக்கை விடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Dear Sir,
I understand from Mr. Richard Askey,
Wisconsin, U.S.A., that you have contributed
for the sculpture in memory of
my late husband Mr. Srinivasa Ramanujan.
I am happy over this event.
I thank you very much for your good
gesture and wish you success in all your
endeavours.
Yours faithfully,
Signed S. Janaki Ammal
மறுமணம் செய்துகொள்வதைவிட ஒரு பெண் தனியாக வாழ்ந்துகாட்டுவது இன்னும் புரட்சிகரமானதாகத் தோன்றுகிறது.மறுமணம் செய்துகொள்ளும் போது மறுபடியும் ஒரு ஆணைசார்ந்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.ஆனால் எவருடைய துணையுமின்றி தனியாக வாழ அதிக மன உறுதியும்,தன்னம்பிக்கையும் தேவைப்படுகிறது.பெண்விடுதலை,பெண்ணுரிமை என்று எந்தவித முழக்கங்களுமின்றி அதேசமயம் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்திருக்கும் ஜானகி, சந்தேகத்திற்கிடமின்றி பாரதியின் புதுமைப் பெண்களுள் ஒருவர்.

********************************************
1729 சிறப்பு:

இரண்டு கன சதுரங்களின் கூட்டுத்தொகையாக இருவேறு முறைகளில் சொல்லக் கூடிய மிகச்சிறிய எண்.புரியும்படி சொன்னால்

"It is the smallest number expressible as the sum of two cubes in two different ways."

two different ways

1) 10X10X10 + 9X9X9 = 1729

2) 12X12X12 + 1X1X1 = 1729

1729 ராமானுஜன் எண் என்று அழைக்கப் படுகிறது.

8 comments:

வடுவூர் குமார் said...

அருமையான தகவல்.
நன்றி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இராமானுஜனின் பல எண்கள் சம்பந்தமான கண்டுபிடிப்புகள்,கட்டுரைகள் எப்பொழுதும் ஆச்சரியப்படுத்துபவை.
எண்களின் காதலர் அவர்....
சிந்திக்க வைத்த பதிவு..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

விஷயங்கள் சுவாரசியமாக இருக்கின்றன உங்கள் திட்டில்...
நல்ல முயற்சி.

Anonymous said...

What a wonderful lady she was. Thank you for posting this post.

Rumya

MSATHIA said...

நல்ல தகவல் மற்றும் பதிவு. இராமனுஜம் எண் பற்றி தெரிந்தாலும் நீங்கள் சொன்ன கதை சுவாரசியம்.

butterfly Surya said...

Xlent posting..

Keep it up.

Surya
Chennai

பரத் said...

வடுவூர் குமார்,
கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி குமார்

சங்கப் பலகை,

//இராமானுஜனின் பல எண்கள் சம்பந்தமான கண்டுபிடிப்புகள்,கட்டுரைகள் எப்பொழுதும் ஆச்சரியப்படுத்துபவை.
//
உண்மை.அவரது வாழ்க்கை செய்திகளைப் படிக்கும்போது அதை உணர்ந்தேன்.பை(pi) க்கு மதிப்பு கண்டுபிடிக்கும் முறைகூட அவர் கண்டறிந்ததுதான் என்பதை அறிந்து ஆசாரியமடைந்தேன்
கருத்துக்களுக்கு நன்றி

ரும்யா,
Thanks

சத்யா,
கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி

சூர்யா,
thanks Surya :)

விபின் said...

இராமனுஜம் பற்றிய சுவையான தகவலுக்கு நன்றி பரத்.