Friday, September 21, 2007

உதிரிக் குறிப்புகள்

இந்தக் கலைநயமிக்க புகைப்படத்தை எடுத்த தமிழ் நடிகர் யார் என்று கண்டுபிடியுங்கள்.விடை இறுதியில்


*போலி,போலியல்லாத,கருப்பு,சிவப்பு மற்றும் ஜாதீயப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவிட்டு,கடந்த இரண்டுநாட்களாக அத்தகைய பதிவுகள் எதுவும் சூடான இடுகைகளில் காணக்கிடைக்காத போது கைநடுக்கம் ஏற்பட்டது.


*வாராவாரம் (மெனக்கெட்டு) "ராஸ்தா பேட்" வரை சென்று விகடன் வாங்கிவர எனக்கு மீதமிருந்த ஒரு காரணமும் தீர்ந்து போனது(க.பெ).


*சமீபத்தில் படித்த இரண்டு புத்தகங்கள் ரொம்பவும் வெறுமையை உணரச்செய்தன.


(1)Metamorphosis(Kafka)

ஒரு நாவலுக்கு இவ்வளவு அருமையான துவக்க வரிகள் அமைவது அபூர்வம்.

"As Gregor Samsa awoke one morning from uneasy dreams he found himself transformed in his bed into a gigantic insect."


(2)நாளை மற்றுமொரு நாளே(ஜி.நாகராஜன்)


"உங்களுக்கு வாழ்க்கையில லட்சியம் என்னண்ணே?" என்றான் முத்துசாமி.

"அப்படீன்னா?" என்றான் கந்தன்.

"நீங்க வாழ்க்கையில எதை சாதிக்கணூம்னு திட்டம் போட்டிருக்கீங்க?"

கந்தன் சிரித்தான்."எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துல வந்து பொறந்தேன்?"என்றுவிட்டு மீண்டும் சிரித்தான்.


பின்நவீனத்துவமாக சொல்கிறேன் பேர்விழி என்று சாதாரண விஷயங்களைக் கூட குழப்பியடித்து படிப்பவனை மண்டைகாயவைக்கும் நூல்கள் ஒருபுறமிருக்க, நா.ம.நா போன்ற நாவல்கள் "இருத்தலியல்" போன்ற பெரிய தத்துவங்களைக்கூட அதன் பளு தெரியாமல் வாசகனுக்குள் இறக்கி வைத்துவிடுகின்றன.
தஞ்சை பிரகாஷின் "கள்ளம்" இந்த நாவலுடன் நிறைய ஒப்புமைகளைக் கொண்டிருக்கிறது.கள்ளம் இந்த நாவலுக்குப் பின்னால் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.


* "சக்தே இண்டியா" இரண்டாவதுமுறை பார்த்தபோது,திரைக்கதை நேர்த்தியும்,படம் ரியலிஸ்டிக்காக இருக்கவேண்டும் என்பதில் இயக்குனருக்கிருந்த சிரத்தையும் வியக்கவைத்தன.ஆண்கள் அணியுடன் பெண்கள் அணி மோதும் காட்சி இதற்கு உதாரணம்.பெண்கள் அணி வலுவானது என்று காட்ட வேண்டும் அதேசமயம் ஆண்கள் அணியைத் தோற்கடிப்பது போன்றும் காட்டமுடியாது,அபத்தமாக இருக்கும்.ஒரே ஒரு கோல்(Goal) குறைவாக இருப்பதுபோல ஆட்டத்தை முடிப்பது புத்திசாலித்தனம். 'அப் தக் சப்பன்' பட டிவிடியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.


* ஷாருக் கான் "ஓம் ஷாந்தி ஓம்" படத்திற்காக உடம்பை கல்லாக இறுக்கியிருப்பது பிரமிக்க வைக்கிறது.இப்படத்தில் வரும் "Aanhko mein teri " பாடலைக் கேட்டீர்களா?அதில் கேகே வின் குரல் மயிலிறகால் வருடுவது போலுள்ளது.

ஆரம்பக் கேள்விக்கான பதில்: கமல் ஹாசன்

6 comments:

Anonymous said...

//இந்தக் கலைநயமிக்க புகைப்படத்தை எடுத்த தமிழ் நடிகர் யார் என்று கண்டுபிடியுங்கள்//

போஸ் குடுத்தவர் யார் என்றும் சொல்லி இருக்கலாம். வாணி கணபதி :-)

Anonymous said...

The photo of sharuk khan in 'Om shanthi...' is fake. It s very obvious buddy...

பரத் said...

ஓ...ஆமா..வாணி கணபதிதான்!!!!!!!!!!!
முதலில் எனக்கு அடையாளம் தெரியல்ல
நன்றி பிரகாஷ்

பரத் said...

Anony,

பாஸ் இந்த பாடல் காட்சி முழுமையையும் MTVயிலும் Vசேனலிலும் போடுகிறார்கள்..உண்மை போலத்தான் தெரிகிறது.இங்கு ஒரு எட்டு போய் பாத்துட்டு வாங்க
http://www.xtremedesi.com/view_video.php?viewkey=150c77bda2eda01ae484

Blogeswari said...

Six Yuck Khan looks sad, Bharat.. I mean mugamellam mutthi poi, moonji odungi.. abs mattum packed-a .. looks like a robot, kali-mann bommai..

SIX YUCK KHAN!!

பரத் said...

உண்மைதான்.வயதானது மூஞ்சியில் நன்றாகத் தெரிகிறது.DDLJ காலத்திலேயே இதயெல்லாம் முயற்சி செய்திருக்கலாம் ஷாருக்.Anyway அவரது உழைப்பிற்கு ஒரு "ஓ".

Thanks for visiting