
மணிசித்திரத்தாள் என்ற அருமையான மலையாளப்படத்தை ஹீரோயிச மசாலாக்கள் சேர்த்து கன்னடத்திலும் தமிழிலும் குடலாப்பரேஷன் செய்தாயிற்று.இப்போது ஹிந்திக்காரர்களின் முறை.இருக்கவே இருக்கிறார் ரீமேக் மன்னன் ப்ரியதர்ஷன்.எந்தப் படத்தை ரீமேக் பண்ணப்போகிறோம் என்று முடிவுசெய்வதற்கு முன்னமே பர்வேஷ்ராவல்,அக்ஷய் குமார் இருவரிடமும் கால்ஷீட் வாங்கி வைத்துக்கொள்வாராம் :))
"Bhool Bhulaiya " என்ற பெயரில் முழு நீள நகைச்சுவைப் படமாக வெளிவரவிருக்கிறது மணிசித்திரத்தாள்.
ஆக மோகன்லால்,ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்(தேவுடா)
ஷோபனா நடித்த கதாபாத்திரத்தி வித்யா பாலன் ...

மொழி மாநிலங்களை கடந்த "பேய் இருக்கிறதா இல்லையா?" என்ற வசீகரமான பிரச்சனையும் , சுவாரஸியமான கடைசி இருபது நிமிஷங்களும் இந்த படத்தை எல்லா மொழிகளிலும் வெற்றியடையச் செய்கின்றன.
அடுத்து போஜ்பூரியில் நக்மாவை வைத்துகூட ரீமேக் செய்யப்படலாம்,யார்கண்டார்கள்!.
அடுத்து போஜ்பூரியில் நக்மாவை வைத்துகூட ரீமேக் செய்யப்படலாம்,யார்கண்டார்கள்!.
No comments:
Post a Comment