Wednesday, June 28, 2006

வீடு


"வீடு பட சிடி இருக்கா? "

அந்த (வாடகை)சிடி கடைக்காரர் ஏற இறங்கப் பார்த்தார். "இல்லைங்களே அடுத்தவாரம் சென்னை போகும்போது வாங்கிட்டு வறேன்" என்று சொல்லி பெயரைக்குறித்துக்கொண்டார்.
அருகில் இரு பெண்கள் கஜினி சிடி ரிட்டர்ன் செய்வதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் என்னை ஒரு Intellectual என்று நினைத்திருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டு ஒரு look விட்டேன்(மேட்டுக்குடி படத்தில் கவுண்டமணி விடுவது போல).ஆனால் ஏதோ ஒரு ஜந்துவைப்பார்ப்பது போல அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.மெதுவாக அங்கிருந்து நடையைக்கட்டினேன் .

இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது,ஒருகாலத்தில் இந்தப்படத்தின் பெயரைக்கேட்டாலே தலைதெறிக்க ஓடுவேன்.நான் 2nd std அல்லது 3rd std படிக்கும் போது இந்தப்படம் வெளியானது என்று நினைக்கிறென்.தேசிய விருது வாங்கி சீக்கிரமே DDக்கு உடைமையாகிவிட்ட படமிது.பிராந்திய மொழிப்பட வரிசையிலும்,ஞாயிரு மாலைப் படவரிசையிலும் மாறி மாறி ஒளிபரப்பி இம்சித்தார்கள். அப்போதெல்லாம் (பெயர் தெரியாத படமாக இருந்தால் )Title போடும்போது உன்னிப்பாக கவனிப்பேன்.சண்டைப்பயிற்சி என்ற slide வந்தால் சரி இது பார்ப்பதற்கு உகந்த படம் என்று முடிவு செய்து விடுவேன்.படதில் இடம்பெற்றிருக்கும் மொத்த சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கையைக்கொண்டு தான் அதன் தரத்தை நிர்ணயிப்பேன்.அந்த அளவுகோலின் படி 'வீடு' நான் பார்ப்பதற்கு அருகதயற்ற படம்.அதுவும் இந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியோ,ஒரு நகைச்சுவைக்காட்சியோ கூடக்கிடையாது.அப்போது இந்தப்படத்தைப்பற்றிய என் கருத்து "இது மிகவும் மெதுவான படம்,எல்லாரும் மெதுவாகப் பேசுவார்கள்,மெதுவாக நடப்பார்கள்,அதுவும் அந்த தாத்தா ரொம்ப slow, அவ்வளவுதான்.
அப்போது மதியம் மாநில மொழிப்படங்களை Alphabetic ordaரில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்,அதாவது மராத்தி,ஒரியா,பஞ்ஜாபி,தமிழ்,தெலுகு என்று.இதில் தமிழும் தெலுங்கும் விதிவிலக்கு.தமிழும் தெலுங்கும் மாறி மாறி முதலில் வரும்.பெரும்பாலும் தமிழ் முதலில் வரும்.அந்தவாரம் என்ன படம் என்று ஞாயிரு காலை அறிவிப்புகளில் தான் தெரிய வரும்.அந்த வரிசயில் வீடு,சந்தியாராகம் இதெல்லாம் ஒளிபரப்பப்பட்டால்,பயங்கரமாகக்கோபம் வரும்.

ஆனால் இப்போது ரசனையெல்லாம் மாறி அல்லது மேம்பட்டு(கண்டுகாதீங்க!) மகேந்திரன்,பாலுமகேந்திரா படமெல்லாம் பார்க்கத்தோன்றுகிறது.1988-ல் வெளியான இந்தப்படம் பாலு மகேந்திராவின் masterpiece என்று வர்ணிக்கப்படுகிறது.படத்தின் கருவும்,காட்சியமைப்புகளும் நிஜத்திற்கு ஆருகில் இருந்தது என்று சொல்வதைக்காடிலும் நிஜமாக இருந்தது என்றே சொல்லாம்.வேலைக்குப்போகும் ஒரு Lower middle class பெண் வீடுகட்ட ஆசைப்பட்டு,அதற்காக அவள் படும் கஷ்ட்டங்களை மிக இயல்பாக விவரிக்கும் படம் .அர்ச்சனா,சொக்கலிங்க பாகவதரின் நடிப்புகள் சிறப்பாகப் பேசப்பட்டன.அர்ச்சனா சிறந்த நடிகைக்கான தெசிய விருதினை இந்தப்படத்தின் மூலம் பெற்றார்.இளையராஜாவின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுவும் "How to name it" ஆல்பத்திலிருந்து சில பகுதிகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி இப்படத்தைப்பார்க்கும் ஆவலை மேலும் தூண்டுகிறது.பாலு மகேந்திரா commercial சமரசங்கள் (சில்க் dance)எதுவும் செய்துகொள்ளாமல் எடுத்த படமிது.

மீண்டும் ஒரு தரம் முதல் தடவையாக இந்தப்படத்தைப் பார்க்கப்போகிறேன்!!

11 comments:

Syam said...

//Lower middle class பெண் வீடுகட்ட ஆசைப்பட்டு//

அத தான் இப்போ modernize பன்னி கோலங்கள்ல் வேறு angle ல காட்டராங்களே, என்ன தான் ரசனை மேம்பட்டாலும் அதுக்குனு இப்பிடியா :-)

Gopalan Ramasubbu said...

நானும் சின்ன வயசுல சன்டைக் காட்சி இருக்கும் படங்களை மட்டும் தான் விரும்பி பார்ப்பேன். எனக்கு வீடு படத்தில் பிடித்த விஷயம் இளையராஜாவின் பின்னனி இசையும்,பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவும்.பிடிக்காத விஷயம் அளவுக்கதிகமான சோகம்.இந்தப் படத்தைப் பார்த்து வீடுகட்ட பயந்தவர்கள் ஏராளம்.

Ms Congeniality said...

//மீண்டும் ஒரு தரம் முதல் தடவையாக இந்தப்படத்தைப் பார்க்கப்போகிறேன்!!//
Enjoiii.. :-)

பரத் said...

syam,
ஏங்க பாலுமகேந்திராவோட வீடும்..திருச்செல்வத்தோட கோலங்கலும் ஒண்ண??over சென்டிமென்ட்+அபத்தமான logic இத்ல்லாம்தான் மெகா சீரியல்..

அதுசெரி,மெகாசீரியல் தவறாம பாப்பீங்க போல இருக்கு!!!

Gops,
//இந்தப் படத்தைப் பார்த்து வீடுகட்ட பயந்தவர்கள் ஏராளம்.//
நானும் இதை கேள்விப்பட்டிருக்கேன்

MsCongeniality ,
dankx :))

Sumithra said...

It is indeed a very good movie - but a little too depressing.. I just stmbled upon your blog and liked it very much. Keep writing.

பரத் said...

sunshine,
Thanks for visiting my blog and and for your encouragement..

Manivannan P said...

barath, we used to talk about the film a week back. In these days, a tamil film can't be directed with out a knife, axe, bomp and many more weapons.

But, its wondering to see such films (veedu), directed simply centering on a house. This is the kind of film we expect; this is the dareness of director, we always welcome! :)

பரத் said...

manivannan,
//In these days, a tamil film can't be directed with out a knife, axe, bomp and many more weapons//
very true
thanks for visiting my blog

Veda,
Intha maathiri padangalai encourage pannanum
Thanks for your comments

ragasiyamaai said...

Hey
Nice post,
I cannot forget the scene in the movie when the thatha leaves his kodai in the bus and bus moves by..... no one can stop their tears seeing that.
I hope you would have seen another movie Anthimanthaarai,
I think it is also a very similar movie, portraying only edhartham and no compromises,
It is also from another great director, Barathiraja
again a supreme performance by the artists in the movie,
If you have not seen the movie, please do.

பரத் said...

//the thatha leaves his kodai in the bus and bus moves by..... //
Yeah..It was a verygood scene.Thanks for pointed out.
And I havn't watched Anthimanthaarai.Sure I will try to watch it soon.
Thanks for visiting my blog

~பாண்டியன் said...

பரத்,

நீங்கள் DD-ல் அந்தக்காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பான வெளிநாட்டுப் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியான ஒரு சைனீஸ் அல்லது கொரியன் படத்தின் பெயர் மறந்து விட்டது. உங்களுக்கு ஞாபகம் இருந்தால் சொல்லுங்களேன். அந்த படம் ஒரு சிறுவனைப் பற்றியது. ஒரு வாத்துடன் அந்த சிறுவன் நடந்து செல்லும் முதல் அல்லது கடைசி காட்சி மட்டும் தான் இப்போது நினைவில் உள்ளது. Who Am I என்று படத்தின் தலைப்பு என்று நினைக்கிறேன். ஆனால் கூகிளில் அப்படி ஏதும் படம் கிடைக்கவில்லை. தெரிந்தால் தனி மின்னஞ்சலில் சொல்லுங்களேன்.

அன்புடன்,
பாண்டியன்.
http://valartamil.blogspot.com