Sunday, July 02, 2006

6பதிவு

என்னை ஆறு விளையாட்டுக்கு டேகிய(taggia) அனுசுயா வுக்கு dankx(அப்பாடா எப்டியோ ஒரு பதிவு ஒப்பேத்தியாச்சு).எனக்கு பிடித்த ஆறு பிரபலங்களைப்பற்றி இந்தப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

(1)சுப்பிரமணிய பாரதி



தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என இறுமாப்புடன் கேட்டதோடன்றி காலத்தின் பக்கங்களில் தன் பெயரை அழியாஎழுத்துக்களால் எழுதியும் சென்றவன்."எமக்குத்தொழில் கவிதை" எனசொன்னாலும் தன் வாழ்க்கையையே கவிதை போல வாழ்ந்தவன்.அல்பாயுசுக்கும் மேதைமைக்குமான தொடர்பு இவன் விஷயத்தில் மீண்டும் ஒருமுரை நிரூபணமானது.வாழ்ந்தகாலதில் சரியான முறையில் அங்கீகரிக்காமல் இறந்தபின் விழா எடுத்துக்கொண்டாடும் தமிழர்களை (மேலுலகத்திலிருந்து) இவன் பார்க்க நேர்ந்தால் ஒரு ஏளனப் புன்னகையை வீசக்கூடும்.


(2)எம்.எஸ்.சுப்புலட்சுமி



"குறை ஒன்றும் இல்லை" என்ற இவரது பாடலுக்கு உருகாதவர் எவரும் இருக்க முடியாது.கர்நாடக சங்கீதத்தை பற்றிய அடிப்படை ஞானம் எதுவும் இல்லதவர்களைக்கூட அந்த இசையை கேட்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.கருணையும் சாந்தமும் ததும்பி வழியும் இவரது உருவம் பெண்மையின் அடையாளம்.

(3)சுஜாதா

"இவர் வீட்டு Laundry பில்லை ப்ரசுரித்தால் கூட படிக்க ஒரு கூட்டம் இருக்கிறது" ஒரு வலைதளத்தில் விளையாட்டாக இப்படி குறிப்பிட்டிருந்தார்கள்.என்னைக்கேட்டால் இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட உண்மை அவ்வளவே.நவீன கதை சொல்லலின் தந்தை என இவரை சொல்லலாம்.எழுத்துக்கான உயர்ந்த விருதுகளை பெருமைப்படுத்த நினைத்தால்,அவற்றை இவருக்குக் கொடுக்கலாம்.இவர் தமிழ் எழுத்துலக சூப்பர் ஸ்டார்.

(4)எஸ்.பி.பி

"தேன் வந்து பாயுது காதினிலே"இப்டீன்னா என்னன்னு யாராவது கேட்டால் இவர் குரலைக் கேட்க சொல்லலாம்.பாடல்களை உதட்டிலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து பாடுபவர்.ஒண்ணுமே இல்லாத சில சப்பையான பாடல்கள் இவர் பாடியதால் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன.பாடல் களுக்கு நடுவில் இரும,சிரிக்க,பேசக்கூட முடியும் என செய்து காடியவர்(அதை இவர் செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும்).பாடகர் மட்டுமல்ல இசையமைப்பாளர்,சிறந்த நடிகர்.


(5)கமல் ஹாசன்

இவர் செய்த ஒரே தவறு நம்ம நாட்டில் பிறந்தது தான்.

கேள்வி:அன்பே சிவம்,குருதிப்புனல்,மகாநதி இந்த படமெல்லாம் ஏன் நன்றாக ஓடவில்லை?பதில்:திருப்பாச்சி-200நாள்,சிவகாசி-100நாள்,ஆஅ-75 நாள் .....

பொக்ரான் அணுகுண்டு சோதனையினால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியன்.இவரது நற்பணி மன்றங்கள் மூலமாக இதுவரை 5000லிட்டருக்கும் மேல் ரத்ததானம் செய்யப்பட்டுள்ளது.தன் உடல் உறுப்புக்கள் அனைத்தயும் தானமாக தர ஒப்புக்கொண்ட நடிகர்.ஆயிரக்கணக்கில் இதுவரை புத்தகங்களை நூலகங்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.உயிருள்ள கண்கள் என்று சொல்லுவார்களே அது இவருக்குப் பொருந்தும்.

(6)இளையராஜா

இவரது சோகப்பாடல்களைக் கேட்டால் அழுகை வரும்.உற்சாக பாடலைக்கேட்டால் குதூகலம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்,குத்துப்பாடலைக்கேட்டால் ஆடத் தோன்றும்,தாலாட்டுப்பாடலைக்கேட்டால் தூக்கம் வரும்...ஆம் இவர் ஒரு மந்திரவாதிதான்.இளையராஜாவால் கூட அவரது இசையின் தாக்கத்தை,வீச்சை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.அந்த அளவுக்கு இரண்டு தலைமுறையினரை பாதித்துவிட்ட இசை இவருடையது.

இவர்களை 6 பதிவுக்கு அழைக்கிறேன்

(1)Gopalan Ramasubbu

(6)mscongeniality

15 comments:

அனுசுயா said...

அருமை பரத் மிக அருமையான ஆறு பேரை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆறு பேருமே தமிழ்நாட்டின் ஆறு வைரங்கள். பல தரப்பட்ட வாழ்க்கை சூழலிலும் சுடர்விட்டு ஒளி வீசியவர்கள். நல்ல பதிவு.

Gopalan Ramasubbu said...

//சரியான முறையில் அங்கீகரிக்காமல் இறந்தபின் விழா எடுத்துக்கொண்டாடும் தமிழர்களை (மேலுலகத்திலிருந்து) இவன் பார்க்க நேர்ந்தால் ஒரு ஏளனப் புன்னகையை வீசக்கூடும்.//

கண்டிப்பா.

அருமையான பதிவு பரத்

Anonymous said...

"தேன் வந்து பாயுது காதினிலே" இப்டீன்னா என்னன்னு யாராவது கேட்டால் இவர்(எஸ்.பி.பி) குரலைக் கேட்க சொல்லலாம்-நல்ல எடுத்துக்காட்டு, நல்ல சிந்தனை...வர வர உன் எழுத்து திறமை அதிகமாகிட்டே போகுது...கலக்கற பரத்...

- தோழன்

Ms Congeniality said...

\\குறை ஒன்றும் இல்லை\\
Enaku romba pudicha paatu..
and all the six that u've selected are great!!!

Syam said...

அசத்தல் ஆறு, சுஜாதா எப்ப பார்த்தாலும் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்னு சொல்வாரே அத பத்தி தெரியுமா :-)

பரத் said...

Anusuya
//ஆறு பேருமே தமிழ்நாட்டின் ஆறு வைரங்கள்//
உண்மைதான்.
நன்றி.

Gops,Veda,Ms.Congeniality,
Thanks :)

தோழன் ,
Thankx
இப்டியெல்லாம் புகழ்ந்தா நானே வேற பேர்ல எழுதிக்கறேன்னு நெனைப்பாங்க.பேர் கொஞ்சம் போட்ருங்க.

Syam,
இப்ப அவர் எழுதிகிட்டு இருக்கற சில்வியா தொடர்ல கூட அத பத்தி குறிப்பிட்டுர்ந்தாரு.அந்த Joke வசந்துக்கே வெளிச்சம்

Syam said...

அந்த ஜோக் ஏதோ ஒரு blog ல படிச்சேன்...எங்கனு மறந்து போச்சு...

Manivannan P said...

cool bharath.... I had a chance to recall the bharathi's poem at your blog...

Great.. great...

பரத் said...

Syam,
send the link if you have....
:)

Manivannan,
Thankx..

கதிர் said...

கேள்வி:அன்பே சிவம்,குருதிப்புனல்,மகாநதி இந்த படமெல்லாம் ஏன் நன்றாக ஓடவில்லை?பதில்:திருப்பாச்சி-200நாள்,சிவகாசி-100நாள்,ஆஅ-75 நாள் .....

நியாயமான ஆதங்கம்தான் எனக்கும் இதே கேள்வி மனதில் எழுந்தது.
அருமையான ஆறு பதிவு மற்றும் வித்யாசமான ஆறா போட்டு கலக்கிட்டிங்க.

பி.கு.: "பொக்ரான் அணுகுண்டு சோதனையினால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியன்"

இது எனக்கு புரியலையே. நேரமிருந்தால் தனி மின்னஞ்சலில் விளக்க முடியுமா?
flashkathir@gmail.com

அன்புடன்
தம்பி

Syam said...

http://agnisiragu.blogspot.com/2006/06/blog-post_13.html

itho neengakal ketta sakthi, gilli la refer pannirundhaanga,so enna thitta koodathu :-)

பரத் said...
This comment has been removed by a blog administrator.
பரத் said...

syam,
hee...hee
:))

தம்பி,
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
மருத நாயகம் (மிக)பெரிய budget படம் என்பதால் அதை இந்திய பண்த்தில் மட்டுமே தயாரிக்க முடியாது என முடிவு செய்து படதிற்காகும் செலவை அந்நிய முதலீடாக பெற அதாவது டாலராகப் பெற ஏற்பாடு செய்திருந்தார் கமல்.அந்த நேரத்தில் இந்த அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டது.அதனால் அமெரிக்கா அந்நிய முதலீடு குறித்த தன் பிடிகளை இறுக்கியது. இதன்விளைவாக வரவேண்டிய பணம் தடை பட்டு..இந்தக் கலைஞனின் கனவுப் படைப்பு தடைபட்டது.அதனால் தான் அப்படி குறிப்பிட்டிருந்தேன்.

கதிர் said...

பரத்.

தகவலுக்கு நன்றி பரத்.

இதுவரை எடுத்த அரைமணி நேர படத்தை (மருதநாயகம்) தொகுத்து அதை சினிமா ஆர்வலர்களுக்கு காண்பித்து நிதி திரட்ட போவதாக ஒரு செய்தியில் படித்ததாக ஞாபகம். அதைப்பற்றியும் முடிந்தால் எழுதுங்கள்.

அன்புடன்
தம்பி

பரத் said...

thambi,
kandippa...adhu pathi full details kedachudane..eluthidren.
thanks for the encouragement