Tuesday, July 25, 2006

நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி......

நடிகை பிரமீளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு என்று ஒரு பத்திரிக்கை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது.பிரமீளாவுக்கு நகம்கடிக்கும் பழக்கம் இருந்தால் என்ன?வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என்று ஒருவரும் கேட்பதில்லை.கேள்வி கேட்காமல் இந்த Trivia அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு படித்துக்கொண்டிருக்கிறோம்.இதைவிட அதிகமாக ஒரு ஜனக்கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன்.

- சுஜாதா,கணையாளி,1973 ஆகஸ்ட்




* ரீமசென் ஐந்து கிலோ எடையை குறைத்திருக்கிறார்

* அஸினுக்கு பிடித்தமான உணவு பொறித்த ஆற்று மீன் தான்

* படப்பிடிப்பின் போது கிடைக்கும் இடைவேளையில் நடிகை சதா அவரது தந்தையின் மடியில் தலை வைத்துத் தூங்குகிறார்

-குமுதம்,2006,ஜுலை



இந்த 33 வருடங்களில், பதிரிக்கை தொழில்நுட்பத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.ஆனால் அதன் உள்ளடக்கத்தில் எவ்வித முன்னேற்றமும்
இல்லை.பின்னோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.குமுதம் போன்று விற்பனையில் முன்னணியில் இருக்கும் வார இதழ்களின் 90% பக்கங்களை ஆக்கிரமிப்பது நடிகைகளின் தொப்புள்களும் அவர்களைப்பற்றிய செய்தியும் தான்.சினிமா செய்திகளே வெளியிடக்கூடாது என்று சொல்லவில்லை.ஏனெனில் தமிழகம் போன்று சினிமாவுடன் மக்கள்பிணைப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் இது சாத்தியமற்ற ஒன்று.மேலும் உ.வெ.சாமிநாதைய்யரின் படத்தையோ,அருந்ததிராயின் படத்தையோ அட்டைப்படமாகப் போட்டால் நானே வாங்க மாட்டேன்.ஆனால் எதற்கும் அளவு, வரைமுறை வேண்டாமா?
இந்தவார குமுதம் பத்திரிக்கையின் உள்ளடக்கம் என்ன தெரியுமா?


*நடிகை நமீதா ஒரு படப்பிடிபில் நடனக்காட்சியில் எவ்வாறு குத்தாட்டம் போட்டார் என்பதை விவரிக்கும் கட்டுரை.

*ரீமாசென் நடிகர் விஷாலைக் காதலிக்கிறாரா? என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விக்கு விடையைக் கண்டறிய அவருடன் ஒரு பேட்டி.

*நடிகர் விஜயின் அடுத்தபடத்தின் கதை என்னவாயிருக்கும் என்ற நாட்டின் தலையாய பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஒரு கட்டுரை.அப்படத்தில் வரும் பன்ச் டயலாக் தான் கட்டுரையின் தலைப்பு."நான் முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்".(உன் பேச்சை நீயே கேக்க மாட்டேன்னா...நீ என்ன லூஸா??)

*டி.வி நடிகர் ஒருவர் சண்டை போட்டுப்பிரிந்த தன் மனைவியுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான கதை.

*நான்கு இளம் பெண்கள் நடிகர் சூர்யாவை 108வது தடவையாகப் பேட்டிகண்டு,109தடவையாக "நீங்க எப்டி இவ்ளவு handsome-ஆ இர்க்கீங்க?" என்ற அற்புதமான கேள்வியைக்கேட்கும் பேட்டி.

*நடிகை மீனவின் பேட்டி. இது தவிர லைட்ஸ் ஆன்,சினிமா விமர்சனம்,சினிமாத்துணுக்குகள்.

கடைசீ பக்கத்துக்கு முந்தின பக்கத்தில் மும்பை குண்டு வெடிப்பு பற்றிய சிறியகட்டுரை.இதில் காமெடியே தலையங்கம் தான்.புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட செய்திகளை நிறைத்துக்கொண்டு, நாட்டில் அரசியல் வாதிகள் எப்படி நாட்டுப்பற்றுடன் செயல் படவேண்டும் என்று எழுதுகிறார்கள்.இதை எழுத இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை.

2039ஆம் வருடம் ஜூலை இதழில் கீழ் கண்டது போன்ற செய்தி வெளியானால்,முகத்தில் எவ்வித ஆச்சரிய ரேகையும் தோன்றாமல் படித்து முடிப்போமாக!

"நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி இரண்டு வாரமாக மஞ்சள் நிறத்தில் மூச்சா போவதால், நடிகை மிகவும் கவலையாக உள்ளார்"


28 comments:

பாலசந்தர் கணேசன். said...

ஏற்கனவே அந்த மாதிரியான செய்திகள் வந்துள்ளன. 2039 வரை காத்திருக்க வேண்டாம்.

நாமக்கல் சிபி said...

//"நடிகை ஜலஜாவின் நாய்க்குட்டி இரண்டு வாரமாக மஞ்சள் நிறத்தில் மூச்சா போவதால், நடிகை மிகவும் கவலையாக உள்ளார்//

கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு ரசிகர்.

:)

Anonymous said...

that is our fate. they write about dogs. but they cannot to write about us. sometime they irritate us. they are news sellers. " seithi
porukkikal"

Ceylon Tamilan

Anonymous said...

We have tons of serious problems and issues in our real life. We need some breather on its way. Kumudam acts like a breather, when you read it you don't need to think or analyze its data. It is just for passing time.

கதிர் said...

குமுதம் படிச்சுட்டு என்னடா ஒரு உருப்படியான செய்தி எதையும் காணுமே, வளைச்சு வளைச்சு சினிமாகாரங்க பத்தியே போட்டுருக்காங்க. அப்படியே காட்டமா ஒரு பதிவை போடலாம்னு பாத்தேன் முந்திகிட்டிங்க.

சிறப்பாகவே பத்திரிக்கையின் எதிர்காலத்தை பத்தி கவலைபட்டு இருக்கிங்க.

//நான் முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்//

இதுக்கும் கைதட்டுவான் நம்ம ரசிகன்.

அனுசுயா said...

இத பத்தி நான் முதல்லியே செய்தி பஞ்சம்னு தலைப்புல எழுதியிருந்தேன்.

//உன் பேச்சை நீயே கேக்க மாட்டேன்னா...நீ என்ன லூஸா??)//
இப்டியெல்லாம் சொன்னா வீட்டுக்கு ஆட்டோ வரும்ங்னா :)

Ms Congeniality said...

naa adhanaala dhaan andha maadhiri magazines e padikardhu illa..tooooooooooo stupid for words!!!!!!!!
Nalla comedy aa ezhudhirkeenga :-)

Gopalan Ramasubbu said...

நீங்கள் குமுதம் பற்றி எழுதியிருப்பது சரிதான். இதற்கு குமுதம் போன்ற பத்திரிக்கைகளை மட்டுமே குறை சொல்ல முடியாது. குமுதம் நிறுவனத்திலிருந்து, குமுதம் ஜங்சன் என்றொரு பத்திரிக்கை ஆரம்பித்தார்கள். மிக நல்ல கட்டுரைகளும்,தொடர்களும் வந்தன. சினிமா செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் வெளிவந்த பத்திரிக்கை அது.ஆனால் யாரும் அது போன்ற பத்திரிக்கைகளை வாங்க முன்வருவதில்லை.ஒரே வருடம்தான் நடத்தினார்கள். இப்போது தீராநதி என்று ஒரு பத்திரிக்கை குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருகிறது. நல்ல கட்டுரைகளும், இலக்கிய சிந்தனைகளும் இடம்பெறுகிறது. ஆனால் யாரும் அது போன்ற பத்திரிக்கைகளை விரும்பிப் படிப்பதில்லை. இன்னும் எத்தனை பதிப்புகள் தீராநதி வெளிவரும் என்று தெரியவில்லை. பத்திரிக்கைகள் மக்களின் ரசனைகளைத்தான் பிரதிபலிக்கின்றன.(Marketers base)

கமல் கூட குமுதத்தில் வந்த ஒரு பேட்டியில் இப்படி சொன்னார்,

" நீங்கள் குமுதத்தில் எழுதமுடியாத விஷயங்களை எப்படி தீராநதி, ஜங்சன் போன்ற பத்திரிக்கைகளில் எழுதுகிறீர்களோ அது போலத்தான் நானும் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் சொல்ல முடியாத விஷயங்களை நான் சொந்தமாகத் தயாரிக்கும் படங்களில் சொல்கிறேன்"

Syam said...

கோபாலன் சொன்னது மிகவும் சரி, பரத் உங்கள் நியாமான கோபம் புரிகிறது, ஆனால் பத்திரிக்கைகாரைகளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை, நீங்களே நினைத்து பாருங்கள் சினிமா இல்லாத எத்தனயோ பத்திரிக்கைகள் உள்ளன ஆனால் மக்கள் சீந்துவதே இல்லை...

ஜூனியர் விகடன் திறந்தா நான் முதன் முதலில் பார்பது ஜில்லுனு ஒரு ஜலஜா படமோ, சிக்குனு ஒரு சிம்ரன் படமோதான் அப்புறம் தான் மற்ற செய்திகள்... :-)

பரத் said...
This comment has been removed by a blog administrator.
அனுசுயா said...

தீராநதினு ஒரு பத்திரிக்கை வருவதே கோபாலன் சொல்லிதான் தெரியும் இது வரை கேள்விப்பட்டதில்லை.

பரத் said...

பாலசந்தர் கணேசன்,
ஓ அப்படியா?
2039ல் இதைவிட அல்ப்பமாக செய்தி
வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி

நாமக்கல் சிபி,
//கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்து பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு ரசிகர்.

அட இது நல்லாயிருக்கே.இது தோணாம போச்சே எனக்கு!!
வருகைக்கு நன்றி.

Ceylon Tamilan ,
உண்மைதான்.
வருகைக்கு நன்றி.

mycomments,
சரிதான்,ஆனால் சினிமா மட்டுமே breather இல்லயே.
ஒரு நல்ல கவிதை படிப்பதும்,நல்ல எழுத்தாளரின் கதையைப் படிப்பதும்,
relaxation தான்.பத்திரிக்கை என்ற powerful mediaவை நல்ல விஷயத்தை சொல்வதற்கும் பயன்படுத்தலாமே!

வருகைக்கு நன்றி.

பரத் said...

thambi,Ms.Congeniality ,
மிக்க நன்றி

அனுசுயா,
உங்களின் செய்திப்பஞ்சம் கட்டுரை படித்தேன்.இருவரும் ஒரேவிஷயத்தைத்தான் எழுதியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
//இப்டியெல்லாம் சொன்னா வீட்டுக்கு ஆட்டோ வரும்ங்னா
ரொம்ப தூரத்துல இருகிறேங்கர தைரியம்தான் :)

Gopalan Ramasubbu,
சரிதான்,குமுதத்தின் மற்ற புத்தகங்களான ஜோதிடம்,சினேகிதி...எதுவும் சரியாகப்போவதில்லை.முழுவதுமே இலக்கியமாகவோ,அறிவியலாகவோ எழுதினால் எல்லாருக்குமே போரடித்துவிடும்.'சினிமா எக்ஸ்பிரஸ்' என்று ஒரு பத்திரிக்கை வருகிறது உங்களுக்குத்தெரியுமா??சினிமாபற்றிதான் எல்லாரும் படிப்பார்கள் என்றால்
அந்தப் பத்திரிக்கைதான் அதிகம் விற்க வேண்டும்.ஆனால் அப்படியில்லயே!
குமுதத்திற்கு என்று ஒரு BrandName இருக்கிறது.நாலுவாரம் தொடர்ந்து குப்பையாக எழுத்தித்தள்ளினாலும் ஐந்தாவது வாரம் வாங்க ஆளிருக்கிறது.இந்த பலத்தை அவர்கள் கொஞ்சமாகவாவது நல்லசெஇதியை சொல்ல பயன்படுத்தலாமே.உலக இலக்கியங்களை நமக்கு அறிமுகப்படுத்தலாம்.தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு ஈழப்பிரச்சனை பற்றி முழுமையாகத்தெரியும் என்று நினைக்கிறீர்கள்?
அக்னிசிறகு போன்ற புத்தகத்தின் உரிமையைப் பெற்று வாரத்தொடராக வெளியிடக்கூடாதா?
இந்த விஷயத்தில் விகடன் கொஞ்சம் தேவலாம்.சிறுபத்திரிக்கை எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனை துணைஎழுத்து எழுதவைத்தார்கள்.ஏன் அது மிகப்பெரிய வெற்றி பெறவிலையா?அதன் வெற்றியைத்தொடர்ந்து அவர் இப்போது ரெகுலராக விகடனில் எழுதிவருகிறார்.

சாம்ராஜ்ஜியங்களையே சாய்க்கக்கூடிய வல்லமை எழுத்துக்கு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.
பி.கு:தீராநதி அவ்வளவு சுவாரஸ்யமாக எழுதப்படவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.காலசுவடு நன்றாகப்போய்க்கொண்டிருக்கிறது.

Syam,
ஜலஜாவின் படத்தை 10 பக்கங்களில் மட்டும் போட்டால் OK.
90 பக்கங்களிலும் போட்டால்??
உங்களுக்கு இதில் உடன்பாடா?

Syam said...

எனக்கு உடன்பாடு இல்லை தான் ஆனால் இதில் உடன்பாடு இருப்பவர்கள் அதிகம் என்று சொல்ல வருகிறேன் ஆகையால் பத்திரிக்கைகளும் வியாபார நோக்கத்துடன் ஜலஜா,கிரிஜா என்று செய்தி போட்டு மார்கெட் பன்றாங்க...அதனால் தான் இன்று ஏதாவது ஒரு அரசியல்வாதியிடம் அடி வாங்கினால் மட்டும் பத்திரிக்கை தர்மம் பற்றி பேசும் இந்த மீடியா மக்களுக்கு இது பத்திரிக்கை தர்மமா என்று எண்ண தோனவில்லை...

Syam said...

உஸ்...அப்பா இப்பவே கண்ண கட்டுதே...:-)

பரத் said...

Syam,
:))

பரத் said...

Anusuya,
ithu maathiri niraiya paththirikkai vanthukittu irukku.
kaalachuvadu,uirmai,solputhithu,
dheemtharikida...innum niraiya.
namakkuthaan theriyala

கார்த்திக் பிரபு said...

kallakalaan katurai..nall iruku sir..kumudham already neenga sonna indha listil iruku..anandha vikatanum andha listil idam pidiththdhu varuthamana vishyame..

appdiye numma pakkam vandhu parunga
padichitiu soolunga..vartaa

பரத் said...

Ramesh,
:)

Karthick Prabu,
Mikka Nandri.
Kandippaga varukiren

KK said...

super post...first time here...good job!

Pavithra said...

It was an excellent post .. thanks to Syam for getting me here !!

பரத் said...

KK,Pavithra

Thanks for your encouragement.
Thanks to syam for refering my blog

My days(Gops) said...

nalla soneenga bharath...
but, practical'a paartha..,

makkal idhai'thaan virumburaanganu ellorum solluraanga, adhuku NEENGA enna sollureenga?...

"adi pump'il thanni varavillai' endru kumudathu'la headline potta,evanaachum book'a vaaanguvaan?
ada, araicha maavu'nu makkal poikittey irruka maataanga?

sametime, actors and actress'ku enna pudikum/palaka valakangal idhelam BBC'la solluvaangala?
idhu maadhiri boooks'la thaan sollamudium.....

TV serials aandukittu irrukira indha kaalathula books padikiradhey perusu...enna sollureenga?

பரத் said...
This comment has been removed by a blog administrator.
பரத் said...

Veda,
/*இப்பொழுதெல்லாம்,தரம் என்ன விலை என கேட்கும் நிலை*/
உண்மைதான்.
/*குங்குமம் படிச்சிறிக்கீங்களா*/
அதை லிஸ்ட்லயே சேக்கல

My days(Gops),
/*makkal idhai'thaan virumburaanganu ellorum solluraanga*/
நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான்.ஆனால் 30 வருடங்களுக்கும் மேலாக இதேபோன்ற செய்திகளைப்பதிப்பித்தால்..மக்களின் மனநிலையும் இதற்குப்பழக்கப்பட்டுவிடும்.பத்திரிக்கைகள் நினைத்தால் இதனை மாற்றமுடியும்.
/*actors and actress'ku enna pudikum/palaka valakangal idhelam BBC'la solluvaangala?
idhu maadhiri boooks'la thaan sollamudium*/
எதுக்கு சொல்லணும்னு கேக்கறேன்.சதா படப்பிடிப்பு இடைவேளையில் யார் மடியில் படுத்துதூங்கினால் நமக்கென்னங்க??

/*TV serials aandukittu irrukira indha kaalathula books padikiradhey perusu...enna sollureenga?*/
இந்தமாதிரி டி.வி சீரியல்களுக்கும்,பத்திரிக்கைகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.மீடியாதான் வேற.
Thanks for visiting my blog

Sumithra said...

Hey Barath, that's a cool post. This is the main reason why I don't read anything prnited in tamil unless its at least 25 years old.. I hope the press gets this message.

பரத் said...

Thankx Sunshine
:)

My days(Gops) said...

trichy thaaan unga ooorum'a? native'a ?