Wednesday, June 07, 2006

புனேயில் ஒரு மழைக்காலம்

இந்த ஒரு வார மழையில் பூனவின் அடயாளங்கள் கொஞ்ஜம் மாறித்தான்ப்போயிருக்கிறது..இல்லை தன் நிஜ அடயாளத்தை பெற்றிருக்கிறது.ஏனெனில் பூனாவில் மழைக்காலம் சற்று நீண்டதாக இருக்கும்(அருகில் உள்ள லோனாவாலா இந்தியாவின் அதிக மழை பொழிவைப் பெறும் இடங்களில் ஒன்று).

கடந்த இரண்டு மாதங்களாக சுட்டெரித்து overtime பார்த்து வந்த சூரியன் இப்போது ஓய்வில் இருக்கிறது.தூக்கம் கலைந்த பின்னும் போர்வைக்குள்ளிருந்து வர மறுக்கும் schoolபையன் போல காலை 10 மணிக்குக்கூட மேகத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வெளியெ வர மறுக்கிறது. மாலை நேரம் குளிர்ச்௪¢யாக ரம்மியமானதாக இருக்கிறது.அவ்வேளைகளில் பால்கனியில் உட்கார்ந்துகொண்டு ,காப்பி குடித்துக்கொண்டே மழையை ரசித்தால்...கவிதயெல்லாம் எழுதத்தோணும்...பயப்படவேண்டாம்...கவிதயெல்லம் எழுதி பயமுறுத்த மாட்டேன்.மழயைப் பற்றிய(மனுஷ்ய புத்திரனின்) இந்த கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

5 comments:

அனுசுயா said...

//பயப்படவேண்டாம்...கவிதயெல்லம் எழுதி பயமுறுத்த மாட்டேன்//
தப்பிச்சோம் :)

பரத் said...

:-(
நான் தமிழ்ல எழுதறதே ஒரு வகையான பயமுறுத்தல்தானே???
Thanks for visiting my blog

Ms Congeniality said...

Very true..mazhai kaalam naale romba pleasant aa irukum :-)

Gopalan Ramasubbu said...

//தூக்கம் கலைந்த பின்னும் போர்வைக்குள்ளிருந்து வர மறுக்கும் schoolபையன் போல //

என்னையெல்லாம் பார்த்தா உங்களுக்கு ஸ்கூல் பையன் மாதிரி தெரியுதா? Grrrr. ;)

Good post.

பரத் said...

Ms.Congeniality,
:)

gop,
Neengalum appdithaana???
:D