Saturday, June 17, 2006
என் கணவர்....
பாரதி, சுஜதா....
இவர்கள் இருவரிடமும் பெரிதாக ஒற்றுமைகள் எதுவும் இல்லை.இருவரும் பிரபலங்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் என்பதைத்தவிர....இருவரையும் ஒப்பிடவும் முடியாது.ஆனால் இவர்களின் மனைவிகள் இவர்களைப்பற்றி சொன்ன கருத்துக்களில் நிறைய ஒற்றுமை இருக்கிறது.செல்லம்மாள் பாரதிபற்றியும்,திருமதி சுஜாதா சுஜாதா பற்றியும் குறிப்பிட்டவற்றை இங்கு தந்துள்ளேன்.இருவரும் சராசரி வாழ்வுக்க்காக தவித்திருக்கிறார்கள் எனத்தெரிகிறது.பிரபலஙளின் மனைவி என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு வெண்டுமானால் பன்னீராக இருக்கலாம்...ஆனால் அவர்களுக்கு அது வெந்நீர் தான் போலும்.இதில் செல்லம்மாளின் பாடு ரொம்பவே திண்டாட்டம்.தமது கதைகளில் அல்ட்ரா மாடர்ன் பெண் கதாப்பாத்திரங்களை உலவ விடுபவர் சுஜாதா,அவரின் மனைவி இவ்வளவு கட்டுப்பட்டியானவர் என்பது ஆச்சரியம்.எனக்கும் பாரதிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது,அது கட்டுரையின் இறுதியில்....
பாரதிபற்றி செல்லம்மாள் ..
உலகத்தோடொட்டி வாழ வகையறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேனென்றால் உஙளுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்,ஆனால் கவிஞனின் மனைவியாயிருப்பது கஷ்டம் அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரெமாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.ஏகாந்த்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவருங்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும்,ஆனால் மனைத்தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலுறுக்கமுடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.கடவுளை பக்தி செய்யும் கவிஞன்,காவியம் எழுதும் கவிஞன்,இவர்களை புற உலக தொல்லைகள் சூழ இடமில்லை.எனது கணவரோ கற்பனைக்கவியாக மட்டுமில்லாமல் தேசியக்கவியாகவும் விளங்கியவர்.அதனால் நான் மிகவும் கஷ்ட்டப்பட்டேன்.கவிதை வெள்ளத்தை அணை போட்டு தடுத்தது அடக்குமுறை.குடும்பமே தொல்லைக்குள்ளாகியது.
காலையில் எழுந்ததும் கண்விழித்து,மேநிலைமேல் மேலைசுடர் வானை நோக்கி வீற்றிருப்பார்.ஸ்நானம் ஒவ்வொருநாள் ஒவ்வொரு விதத்தில் அமையும்.சூரியஸ்நானம்தான் அவருக்குப்பிடித்தமானது.வெளியிலே நின்று சூரியனை நிமிர்ந்து பார்ப்பது தான் வெய்யற்க்குளியல்.சூரியகிரகணம் கண்களில் உள்ள மாசுகளை நீக்கும் என்பது அவரது அபிப்பிராயம்.காலை காப்பி தோசை பிரதானமயிருக்கவேண்டும் அவருக்கு.தயிர்,நெய்,புது ஊறுகாய் இவைகளை தோசயின் மேல் பெய்து தின்பார்.அவருக்குப் பிரியமான பொருளை சேகரித்துக்கொடுத்தால்,அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தை புசித்து விடுவார்கள்.எதை வேண்டுமானால் பொருக்கமுடிய்ம் ஆனல் கொடுத்த உணவை தாம் உண்ணாமல் பறவைகளுக்கு பொட்டுவிட்டு நிற்கும் அவரது தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் பொறுக்கவே முடிந்ததில்லை.புதுவயில் தான் புதுமைகள் அதிகம் தோன்றின.புது முயற்சிகள் புது நாகரீகம்,புதுமை பெண் எழுச்சி,புதுக்கவிதை-இவைதோன்றின.இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நாந்தான் ஆராய்ச்சி பொருளாக அமைந்தேன்.பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்க வேண்டுமா? வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே,பெண்விடுதலை அவசியம் என்று முடிவு கண்டு,நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர்.இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் 'என் கணவர்' என்ற தலைப்பில் செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை)
சுஜாதா பற்றி திருமதி சுஜாதா .....
ஆபீஸ் முடிந்து வந்தால் கிடுகிடுன்னு எழுத உட்கார்ந்து விடுவார். ராத்திரிகளில் கூட அவர் எந்த நேரம் தூங்குவார்னு தெரியாது. ஒரு மணியோ, ரெண்டு மணியோ கூட ஆகும்.
பசங்க என்ன வகுப்பு படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, எப்போ பரீட்சை, எதுவுமே அவருக்குத் தெரியாது. நாங்க வெளியூர் போயிருந்தால் வீட்டை பூட்டிட்டு வெளியே போகணும்கிறது கூட அவருக்குத் தெரியாது. கிளம்பி போயிட்டே இருப்பார். சின்ன சின்ன ரெஃப்ரன்ஸ§க்குக் கூட கையில இருக்கிற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார். வீட்டுக்குன்னு, குழந்தைகளுக்குன்னு எதிர்கால திட்டம் எதுவும் அவருக்குக் கிடையாது. நல்லவேளை, எங்க வீட்ல பெண் குழந்தை இல்லாததால் இதெல்லாம் பெரிய விஷயமா தெரியலே!...
சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?... எனக்குத் தெரியலே! அவரோட ஐம்பது வயசுக்கு மேலத்தான் அந்த பயம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா போச்சு!
அதுவும் கூட அவருக்கு ஹார்ட் பிராப்ளம் மாதிரி சில உடல் பிரச்னைகள் வந்து, நான் அதிக நேரம் அவருடன் இருந்து பணிவிடை செய்ய ஆரம்பித்த பிறகுதான்.
இவருக்குப் பெண் ரசிகைகள் நிறைய உண்டு. இவர் ‘பீக்’ல இருந்தப்போ எல்லாம் லேடீஸ்கிட்டேயிருந்து மாத்தி மாத்தி போன் கால்ஸ் வந்துட்டே இருக்கும். அதுல சில பெண்கள் சாதாரணமா பேசிட்டு வச்சிடுவாங்க. சிலர், என் குரலைக் கேட்டவுடனே போனை வச்சுடுவாங்க. நான் இல்லாத நேரமா திருட்டுத்தனமா பேசுவாங்க. அப்போல்லாம் மனசுக்கு வருத்தமா இருக்கும். இவர் சாதாரணமா, புகழ் இல்லாத மனிதரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணும்!
எங்க ரெண்டு பேரோட இயல்புன்னு பார்த்தா நான் ஒரு துருவம்.... அவர் ஒரு துருவம்தான்! உறவினர்களோட பேசறது, வெளியே அவங்க வீட்டுக்குப் போறது, கோவிலுக்குப் போறது இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவருக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாது. படிக்கணும்.. படிக்கணும்.. அல்லது எழுதணும்... எழுதணும்!... உண்மையைச் சொன்னா எனக்குக் கதைகள் படிக்கிறதில் எப்போதுமே பெரிய ஆர்வம் இல்லே!... அதெல்லாம் கனவுலக சப்ஜெக்ட்னு தோணும்!...
(சிநேகிதி இதழுக்கு திருமதி சுஜாதா தந்த பேட்டியிலிருந்து)
பரத்-பாரதி ஒற்றுமை:எனக்கும் காலை உணவு தோசை,காப்பி தான் ரொம்ப பிடிக்கும்.ஹி..ஹி
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//பரத்-பாரதி ஒற்றுமை:எனக்கும் காலை உணவு தோசை,காப்பி தான் ரொம்ப பிடிக்கும்.ஹி..ஹி//
இது ரொம்ப டூ மச்....
நானும் ஏதோ பெரிய ஒற்றுமை இருக்கும்னு முழுசா படிச்சிட்டு வந்தேன். கடைசில இப்டி கவுத்திட்டீங்களே? :(
ஹி.. ஹி...
அத விடுங்க ,எனக்கும் சுஜாதாவுக்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்கு ,என்ன சொல்லுங்க!
அவரும் இப்பிடிதான் ஆரம்பத்தில கேள்வி கேட்டுட்டு....கடைசில பதில் சொல்வாரு..
3much!!!!!:D
பாரதி தினமும் குளிப்பாராம் நீங்க எப்படி :-)
//*பரத்-பாரதி ஒற்றுமை:எனக்கும் காலை உணவு தோசை,காப்பி தான் ரொம்ப பிடிக்கும்.ஹி..ஹி*//
romba too much thaan but still :))
Great people think alike!
Syam,
Bharathy maathiri வெய்யற்க்குளியல் illa...nijakkuliyal...nambunga!
Gop,
hee...hee..:)
shuba,
Neenga oruthar thaan correcta purunjukittu irukeenga
:))
:)
paavam chellammaal and Mrs. Sujatha :-(
//தயிர்,நெய்,புது ஊறுகாய் இவைகளை தோசயின் மேல் பெய்து தின்பார்//
ayyo enna combination!! Neengalum ippdi thaan saapduveengala?
Ashok,
:))
Ms.Congeniality,
Dosaiyoda ithellathayum thanith thaniya try pannirukken...onna try pannathilla....hee..hee
//மிகப் பெரிய படைப்பாளியான இவரும் ஒரு சராசரி இந்திய ஆண் என்றும், அவர் மனைவி எந்த அளவுக்கு 'identity crisis' ஆல் பாடுபட்டிருப்பார் என்றும் புரிந்தது.
//
Exactly...ithuthaan naan intha postla naan solla vanthathu.Thankx
I think, it needs a lot more maturity to be a celebrity's wife. Good that these people spoke the truth but I can never imagine a wife complaining abt her husband's inefficiencies publicly !!
Post a Comment