Wednesday, July 04, 2007

கடவுளின் பள்ளத்தாக்கு



மலையேறுபவர்களின் சொர்கபுரி என்றே அழைக்கலாம் பூனாவை(Pune).கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மலைமீதமைந்த கோட்டைகள் பூனா,மும்பையைச் சுற்றி அமைந்துள்ளன.இவற்றில் சில சிவாஜியால் நிர்மாணிக்கப் பட்டவை,பல இவரால் கையகப்படுத்தப்பட்டவை.இவரது கொரில்லா யுத்தயுக்தியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இக்கோட்டைகளின் அமைப்பே.ஆண்டுமுழுவதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போகிறார்கள் என்றாலும் மழைக்கால துவக்கத்திலும்,இறுதியிலும் கூட்டம் சற்று அதிகம்.காரணம் பரவசமூட்டும் பசுமையும்,மழைக்கால அருவிகளும்தான்.

கீழுள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது இப்படிபட்ட மலைக்கோட்டை ஒன்றைத்தான்.இதன் பெயர் ஷிவ்னேரி(சிவனேரி).புனேவிலிருந்து சுமார் 90Km தொலைவில் உள்ளது இம்மலை.மற்ற எந்த கோட்டைக்கும் இல்லாத பெருமை இந்தக் கோட்டைக்கு உண்டு.மராட்டிய மாவீரன் சத்ரபதி ஷிவாஜி பிறந்த இடம் இது என்பதாகும்.
ஷிவாஜியின் தந்தை ஷாகாஜிக்கு அரசியல் எதிரிகள் அதிகம்.அவர்களிடமிருந்து கர்பவதியான தன் மனைவியைக் காப்பாற்ற அவர் தேடிக்கண்டுபிடித்த கோட்டைதான் இது.இதனை நேரில் பார்த்தபோது ஷாகாஜின் தேர்வு எவ்வளவு சரியென்று புரிந்தது.எவரும் எளிதில் ஏறிவிட முடியாதபடி வழுக்குப்பாறைகளாலானது இந்த மலை.மலை உச்சியை அடைய இருக்கும் ஒரே வழிக்கு ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் ஏழு கோட்டை வாசல்கள்.
நானும் என் நண்பனும் மலை அடிவாரத்தை அடைந்து சில கிராமவாசிகளிடம் விசாரித்தோம்.அவர்கள் உச்சியை அடைய மற்றொரு வழி இருப்பதாகச்சொன்னார்கள்.மொகலாயர்கள் அல்லது பேஷ்வாக்களின் காலத்தில் போடப்பட்டிருக்கலாம்.அதாவது கரடுமுரடான காட்டுப்பாதையில் போய் 70% உயரத்தைத் தாண்டினால் 'சாக்கடு தண்டா' என்ற பாதை வரும் அதில் போய் பாறைகளை தாண்டிவிடலாம்.இது கோட்டையின் பின்புற வாயிலுக்குக் கூட்டிச்செல்லும்.மேலும் இவ்வழியில் போனால் தான் மலைக்குகைகளைப் பார்க்கலாம் என்றார்கள்(மொத்தம் 64 குககள் இருக்கிறதாம்).நாங்களும் ஒரு அசட்டு தைரியத்தில் ஏறத்துவங்கினோம்.சற்றே நெட்டுக்குத்தலாக இருந்ததால் விரைவில் சோர்ந்தோம்.இடையில் சில குகைகளைப் பார்த்தோம்.அந்தகுகைகளில்,அப்படியே திருச்சி மலைக்கோட்டையில் இருப்பதுபோன்று சதுர வடிவ கீழ்நோக்கிச்செல்லும் சுரங்கப்பாதைகள்.யார் இருந்தார்கள்,என்ன செய்தார்கள் விவரமில்லை.இவை சாத்வாகனர்கள் காலத்தில் புனையப்பட்டவை என்ற தகவல்கள் மட்டும் உள்ளன.

ஒருவழியாக முக்கால்வாசிமலையைத் தாண்டிவிட்டோம்(45நிமிடங்கள்).பின் பெரிய பெரிய பாறைகளாக இருந்தன.அதில் படிகள் செதுக்கியிருந்தார்கள்.படிகள் என்றால் ஒரு பாதத்தைக்கூட ஒருசமயத்தில் முழுமையாக வைக்கமுடியாத அளவுக்குக் குறுகியவை.அருகில் 'ழ' போல வளைந்த கம்பிகள்,எனக்கென்ன என்பதுபோல நின்றிருந்தன.இதுதான் சாக்கடு தண்டாவாம் !சாக்கடுதண்டா என்றால் என்ன என்று நண்பனிடம் வினவினேன்.குத்து மதிப்பாக சங்கிலிப் பாதை என்றான்.அடிமேல் அடிவைத்து உச்சியை அடைந்தோம்.பச்சைபசேலென்ற புல்வெளியும்,மெல்லிய தூறலும் எங்களை வரவேற்றன.நண்பன் உற்சாகத்தில்"சொர்க்கம் போல இருக்கிறது" என்று கூவினான்.சங்கிலிப்பாதையிலிருந்து நழுவியிருந்தால் அங்கதான் போயிருப்போம் என்றேன்.


இனி படங்கள்....
போகும் வழி











எஞ்சியிருக்கும் அரண்மனையின் சொச்ச மிச்சங்கள்
பிரதான அரண்மனையின் மாடம்



ஷிவாஜி ஜென்மஸ்தானம்
பதாமி நீர் தொட்டி



அம்பர்கானா தானிய செமிப்புக் கிடங்கு

கடேலாட்
கைதிகளை இங்கிருந்து கீழே தள்ளிவிட்டுக் மரணதண்டனையை நிறைவேற்றுவார்களாம்.அதளபாதாளம்..பிழைக்க வாய்ப்பே இல்லை



ஏழு கோட்டைக் கதவுகளில் ஒன்று
புகழ்பெற்ற அஷ்ட்ட வினாயகர் திருத்தலங்களில் ஒன்றான ஓஸர் விக்னேஷ்வர் திருக்கோயில்.இது சிவனேரியிலிருந்து 5 Km தொலைவில் உள்ளது.
உச்சியிலிருந்து காணக் கிடைக்கும் காட்சிகள்
(கண்டிப்பாக enlarge செய்து பாருங்கள்)









8 comments:

Anonymous said...

This is a great experience.
Whene we reach the heights, we feel like flying, we have a seperate world for us, no worries, no commitments, no pollution. Our mind and soul urge to settle here. The kiss of the clouds is really exciting!!.
It was a place where Sivaji lived.
If you involve in the environment, sivaji walks near u. We can here the cries of prisoners who were murdered brutally. The sadness, braveness, the nature everything pierces the bone if you absorb the ambience of the place.

Really a great trek barath!!

Regards,
Vijay Chandran.R

பரத் said...

Vijay,
Thanks for sharing your views

Unknown said...

Bharath
The photo are simply superb. Breath taking.
Would like to see them my self
But can i at 60?
Good effort.
Can you send the as printed ones to me Iam Adhi"s Dad.
VRajaraman

பரத் said...

Hello sir,I do read your interesting comments in Adhu's blog.
Yeah, the way we took to reach the top was quite risky. But there is one proper tar road which leads you to the fort.
So definitely you can visit this place. I will send those pics to you as early as possible.
Thanks for visiting my blog !

Mottai said...

Am in !

You brothers didn't even care to tell that you are available in web :)

Nice reading, bring them on !

பரத் said...

Hi Gokul,
Cool...You got it!!
Wanted to keep it as a surprise...nothing else :)
Thanks for visiting...keep reading

ashok said...

lovely snaps..tanx for sharing

பரத் said...

Ashok...

Welcome back :)