Sunday, June 10, 2007

உருக்குலைந்து வரும் உன்னதக் கலைகள்


சமீபத்தில் 'வாஷிங்டன் போஸ்டில்' வெளியாகியிருந்த,நசிந்து வரும் இந்திய பட்டு நெசவு பற்றிய கட்டுரை(Emily Wax) கவனத்தைக் கவர்ந்தது.இந்தியா வளர்ந்துவிட்டதோ? என சந்தேகிக்கும்,கிலிகொள்ளும் தருணங்களில் அதன் ரணங்களைத் தேடிப்பிடித்து ஆசுவாசம் கொள்ளும் அமெரிக்கர்களின் நோக்கம் இக்கட்டுரையிலும் தெரிகிறது.என்றாலும் ஆய்வு செய்தோ,செய்யாமலோ எழுதப்பட்ட இந்த கட்டுரையின் உண்மை நம்மை சுடாமலில்லை.அதில்,

"The new India is home to smooth highways and shiny high-rises, all the accouterments of the developed world. But millions of craftsmen, manual laborers and rural workers are being left out of the economic boom. Nearly 70 percent of India's population lives on less than $2 a day, and with more than 40 percent of its young malnourished, India is worse off than Africa in terms of children's health, according to the United Nations"

என்கிறார்கள்.மேலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் சேரும் அவசரகதியில் ஆதார தொழில் செய்யும் உழவர்களையும்,நெசவாளர்களையும் நிர்கதியாக விட்டுச்செல்வதாக மன்மோகன் சிங்கை சாடுகிறார்கள்.
இந்தியா வளர்கிறது,மிளிர்கிறது என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.நாட்டின் வளர்ச்சியென்பது அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியேயன்றி ஓரிரு துறைகளை மட்டும் சார்ந்ததன்று.இதுநாள்வரையில் நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலாக கருதப்பட்டு வந்த நெசவுத்தொழில் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.மலிவு விலை துணிநெய்யும் இயந்திரங்களும்,தளர்த்தப்பட்ட அந்நிய முதலீட்டுக் கொள்கைகளுமே இதற்குக் காரணம்.நாமும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விடுத்து,'நெசவாளர்கள் தற்கொலை' பற்றிய செய்திகளை குற்ற உணர்வின்றி தாண்டிச்செல்ல பழகிக்கொண்டுள்ளோம்.உண்மையில்,ஓரிரு துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான வளர்ச்சியும் பாராட்டுக்குரியதல்ல.காரணம் சமூகத்தில் மேல்தட்டு ,கீழ்தட்டுக் கிடையேயான வர்க்க இடைவெளியை இது அதிகப்படுத்தியுள்ளது.

கட்டுரையிலிருந்து சில பகுதிகள்,

"This is the ugly, painful side of globalization. It's a real crisis. If India is booming, you don't see it among weavers or farmers or other rural laborers, which is to say most of the country," said Lenin Raghuvanshi, head of the People's Vigilance Committee for Human Rights, an aid group here. "Helping those left behind is India's greatest challenge."

Despite the boom in many information technology hubs in southern Indian cities, Varanasi's weaver quarters look like a ghetto, with men sleeping under broken-down looms strung with cobwebs, rutted streets with trash fuming at every turn and donkeys hauling in water for cooking and bathing, tugged along by barefoot urchins.

"I hardly care about booming India when I have no food or money," said Poochland Dash, 60, a white-haired grandfather and a once-wealthy weaver who said through tears that he is considering suicide. He is trying to sell the house he built during the golden years of the sari-weaving industry, with his saris featuring embroidery of men atop animals in rich indigos and reds.
"If a buyer insults me with a too-low price, I swear I will kill myself," Dash said.
Listening nearby, his wife started crying. "If he takes his life, I will take my life, too," she said, staring at the ground.

KFC-யில் பர்கர் சாப்பிட்டு விட்டு,பரிஸ்தாவில் காப்பி குடித்துவிட்டு அப்படியே மல்டிப்ளக்ஸில் கொஞ்சமே புரிகிற ஹிந்திபடம் பார்க்க போக நேரமாகிவிட்டதால் நலிந்தோர் குறித்து கவலைப்படும் இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

5 comments:

Anonymous said...

This is really a bad condition for India.

The Government of India is ruled by a group of ruthless stinking pigs. Only if the political gutter is cleared and we bring fearless educated people to rule the nation, this problem can be solved.

Depending on a single entity like Info. Technology or any other booming entity is totally useless.
If the poverty increases in those rural areas, this will be reflected in the increase in crime rate, rich/poor difference.

Literacy and Fearless leadership for the country is the only way to bring these suffering people to a good position in their life.

Anonymous said...

This is really a bad condition for India.

The Government of India is ruled by a group of ruthless stinking pigs. Only if the political gutter is cleared and we bring fearless educated people to rule the nation, this problem can be solved.

Depending on a single entity like Info. Technology or any other booming entity is totally useless.
If the poverty increases in those rural areas, this will be reflected in the increase in crime rate, rich/poor difference.

Literacy and Fearless leadership for the country is the only way to bring these suffering people to a good position in their life.

பரத் said...

Vijay,
Thanks for sharing your views
Keep reading

a.rajaramkumar@gmail.com said...

இப்படி ஒரு கட்டுரையை வெளியிடுவதில் அமெரிக்கப் பத்திரிக்கையின் அரசியல் ஒரு பக்கமிருக்கட்டும். அவர்கள் சொல்கிற மாதிரி, மன்மோகனின் தாராளமயமாக்கம் எல்லாத் தரப்பு மக்களையும் முன்னேற்றிவிடவில்லை. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கப்பதில்லை என்று அழுகிறார்கள். நெசவாளர்கள், பாவம், கடைசி மூச்சை கஷ்டப்பட்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த நாடு அடையும் வளர்ச்சிதான் வளர்ச்சி. சில துறைகள் மட்டுமே வளர்ந்தால் அது முழுமையான வளர்ச்சி ஆகாது.

பரத் said...

//ஒட்டு மொத்த நாடு அடையும் வளர்ச்சிதான் வளர்ச்சி. சில துறைகள் மட்டுமே வளர்ந்தால் அது முழுமையான வளர்ச்சி ஆகாது.
//
உண்மை
கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சம்சாரி