Sunday, September 17, 2006

லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?



இந்த ஓவியத்தை நன்றாகப் பாருங்கள்.ரவிவர்மாவின் ஓவியத்தைவிட சிறந்தது இது.பிகாஸோவின் ஓவியத்தைவிட விலைஉயர்ந்தது இது.இந்த ஓவியத்தை வரைந்த,இரண்டாம் வகுப்பு படிக்கும் மீனாட்சியை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?ஒருவேளை இவளது அன்னையைப் பார்த்திருக்கலாம்.இரவு நேரங்களில் புனாவின்(Poona) ஏதாவதொரு தெருமுனையில் நின்றுகொண்டிருப்பாள்.பொருந்தாத உதட்டுசாயதுடனும்,அதீத ஒப்பனையுடனும் நின்றிருக்கும் இவள்,நீங்கள் கடந்துபோகையில் உங்களைப் பார்த்து கண்சிமிட்டக் கூடும்.ஆம்,இந்தக் குழந்தையின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி.

அண்மையில்,'ஏகலைவ்ய நியாசா' என்ற தொண்டுஅமைப்பு (Pune)பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டியொன்றை நடத்தியது.அதில் அக்குழந்தைகள் வரைந்த ஓவியங்களை நான் பணிபுரியும் நிறுவனத்தில் விற்பனைக்காக வைத்திருந்தார்கள்.அக்கண்காட்சியில் நான் வாங்கிய ஓவியம் இது.

இந்தியாவின் மூன்றாவது பெரிய சிவப்பு விளக்குப்பகுதி புனாவில் உள்ளது."புத்வார் பேட்" என்றழைக்கப்படும் இப்பகுதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.மீனாட்சி போன்று இங்கு ஏராளமான குழந்தைகள் இருக்கின்றார்கள்.உலகி மிகக்கொடியது 'இளமையில் வறுமை' என்றாள் அவ்வை.அதனினும் கொடிது இங்குள்ள குழந்தைகளின் நிலைமை.மனித வாழ்க்கைக்கு சற்றும் அருகதையற்ற இப்பகுதிகளில் வசித்துவரும் இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு சமூகம் கொடுத்திருக்கும் அடையாளம் கொடுமையானது.
தங்கள் பெற்றோரைப் பற்றிய இக்குழந்தைகளின் புரிதல் என்னவாக இருக்கும் என்பது வருத்ததிற்குரிய கேள்வி.பொதுவாக இங்கு கணவன் - மனைவி உறவுசம்பிரதாயங்கள் அவ்வளவாகப் பின்பற்றப் படுவதில்லையாம்.எனவே,இவர்களில் எத்தனைபேரின் குழந்தைகளுக்கு தந்தை என்ற உறவு கிடைத்திருக்கிறது என்பது தெரியவில்லை.

இக்குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பல சேவை நிறுவனக்கள் போராடி வருகின்றன.இப்பகுதியில் இவர்களுக்காக நடத்தப்ப்டும் பிரத்தியேகப் பள்ளி,மற்றும் அரசு பள்ளிகளைத்தவிர மற்ற பள்ளிகளில் இக்குழந்தைகளுக்கு இடம் கிடைப்பது கடினமான காரியமாக உள்ளது என்று சேவைஅமைப்பைச்சேர்ந்த ஒரு நண்பர் குறிப்பிட்டார்.இந்த குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி,நல்ல கல்வியை இவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கும்.மாறாக இவர்களது கல்வி பாதியில் தடைபடுமானால்,இவர்களும் இதே படுகுழியில் விழாதிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

மீனட்சியின் ஓவியத்தில், நம் பாரதக் கொடி எப்படி பட்டொளி வீசிப்பறக்கிறது பாருங்கள் !

16 comments:

Hariharan # 03985177737685368452 said...

வெகு இயற்கையாய் நம்முள் வெகுதியானவர்களுக்குக் கிடைக்கும் தந்தை மாதிரியான உறவுகள் கூட தெரிந்தறியாத இம்மாதிரி குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பழகி புளித்துப்போன கலவித்தொழிலில் இருந்து மீளத் தேவையான உயர்கல்வி லிஃப்ட் கிடைக்கட்டும்.

எந்த ஒரு குழந்தையும் தவிர்க்கப்பட வேண்டிய சூழல்.

அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதிலும் இயல்பான நியதியான சூழலில் பிறந்து வளர்ந்து படித்து வாழ்தல் மிக அரிதானது.

மனதைப் பாரமாக்கும் கடினமான நிதர்சனம் பற்றிய பதிவு. அக்குழந்தை வரைந்த ஓவியம் வாங்கி ஊக்குவித்தமைக்கு நன்றிகள்!

அன்புடன்,
ஹரிஹரன்

பத்மா அர்விந்த் said...

மனதை தொடும் பதிவு. கல்வி மட்டுமே அவர்களுக்கு நல்ல வழி காட்டும். கூடுதலாக நல்ல சுகாதாரமும் நல்ல மருத்துவ வசதியும் தேவை. ஆரோக்கியமான சூழ்நிலை முக்கியம்

கதிர் said...

பரத்!

தந்தை யாருன்னே தெரியாமல் வளரும் பிஞ்சுகளை நினைத்தால் மனது வேதனையாக இருக்கிறது.

அனுசுயா said...

கட்டாயம் வாழ்க்கையில் லிப்ட் கிடைக்க வேண்டியது இவர்களுக்குதான். பெரியோர் செய்யும் தவறின் தண்டணையை இந்த பிஞ்சுகள் சுமக்க வேண்டியுள்ளது மிக கொடுமை.

KK said...

Very nice post Bala. Romba paavama irunthuchu meenakshi pola irukira kuzhanthaigala pathi padikrathukku... Neenga sona maathiri nalla kalvi than ivangala kaapatra mudiyum. Hope something is done on this.

Syam said...

கண்களில் நீரை வரவழைக்கும் பதிவு பரத்...அதுவும் அந்த குழந்தையின் ஓவியம் மிகவும் அருமை...இவங்களுக்கு ஏதாவது செய்யனும்....

பரத் said...

ஹரிஹரன்,
//எந்த ஒரு குழந்தையும் தவிர்க்கப்பட வேண்டிய சூழல்.

உண்மை ஹரிஹரன் சார்
வருகைக்கு நன்றி

பத்மா அர்விந்த்,
//நல்ல சுகாதாரமும் நல்ல மருத்துவ வசதியும் தேவை
கண்டிப்பாக..

வருகைக்கு நன்றி


தம்பி,
அனைவரும் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.
நன்றி

அனுசுயா,
//பெரியோர் செய்யும் தவறின் தண்டணையை இந்த பிஞ்சுகள் சுமக்க வேண்டியுள்ளது மிக கொடுமை. //
சரியாகச் சொன்னீர்கள்

கேகே,
//Hope something is done on this//
இதே எண்ணம் தான் எனக்கும் தோன்றியது
நன்றி கேகே.
(பேர மாத்திடீங்களே :))

வேதா
//மனோத்துவ பயிற்சியும் தேவை.
ஆம் வேதா,மனோதிடம் மிகவும் அவசியம்
நன்றி வேதா

சியாம்,
//இவங்களுக்கு ஏதாவது செய்யனும்.... //
கண்டிப்பா

நன்றி சியாம்


சந்திரசேகர்,
//வழி வகுக்குமா நமது சமுதாயம் ????
சமுதாயம் என்பது நாம் தானே ! நாம் நினைத்தால் கண்டிப்பாக முடியும்
நன்றி சந்திரசேகர்

KK said...

ithe peru thana irunthuchu :)

முரட்டுக்காளை said...

நல்ல கருத்துக்கள். எனக்குப் பிடித்தது...

பரத் said...

கேகே,
இது ரெம்ம்ப ஓவர்
:))

முரட்டுக்காளை,
தங்கள் விமர்சனம் படித்தேன். மிக்க நன்றி

ragasiyamaai said...

Great post man..... keep it up!
Ya, so sad to realise about these kids, there is a song by Metallica, called TURN THE PAGE, it says about the feeling of a whore, who says she is ready to take up any other decent job (turn the page in her life) if the society is ready to give her(and her daughter) the respect that normal people deserve.....
Are we(the society redy for that)?????
If this happens, Meenakshi will definitely have a lift.
Education is one thing, but social respect is more important to make the whores give up their humiliating profession, which is of prime concern for lifting the lives of Meenakshi and likes!

Iniyaal said...

Great post. Padikkumbothu manasukku romba kashtama irukku, but have to face the truth that this is how life treats many innocent unfortunate little kids.

"மீனட்சியின் ஓவியத்தில், நம் பாரதக் கொடி எப்படி பட்டொளி வீசிப்பறக்கிறது பாருங்கள் !"

Meenakshi nam naattin mel ithanai nambikkai vaithirukkaal. Hope India lives upto her expectations.

Pavithra said...

Education is important and their mothers should be bold enough to prevent their daughters from following their way. We have a long way to go before they all get a lift !!

பரத் said...

ராம்,
//social respect is more important to make the whores give up their humiliating profession//
உண்மைதான் ராம்
நன்றி

இனியாழ்,
//have to face the truth that this is how life treats many innocent unfortunate little kids//
ஏன் இப்படி என்பது விடையில்லா கேள்வி
கருத்துகளுக்கும்,வருகைக்கும் நன்றி

பவித்ரா,
//their mothers should be bold enough to prevent their daughters from following their way//
எந்தத் தாயும் தன் குழந்தையும் சீரழிந்து போவதை விரும்ப மாட்டாள்.அது தான் அக்குழந்தைகளின் ஒரே நம்பிக்கை

Gopalan Ramasubbu said...

மீனாட்சியைப் பற்றி வெளி உலகிற்கு உங்களைப் போன்றவர்கள் மூலம் தெரிய ஆரம்பித்திருப்பதே பாதி லிப்ட் கிடைத்ததைப் போல தான். நல்ல பதிவு பரத். வாழ்த்துக்கள் :)

பரத் said...

நன்றி Gops