Tuesday, August 29, 2006

புத்தகங்கள்

Tagged by KK

One book that changed my life

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூவினால் எழுதப்பட்ட இருத்தலியல்(Existentialism) பற்றிய "The Stranger"(L'Étranger) என்ற நாவல்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.என் வாழ்க்கையில் என்று சொல்வதைக்காட்டிலும் என் மனப்போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
தனக்கு ஏற்படும் சுகதுக்கங்களை ஒரு வெளிமனிதனாக விலகி நின்று உற்றுநோக்கும் அதன் கதாநாயகனின்(Meursault) மனப்பங்கு என்னை மிகவும் கவர்ந்தது.
அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள இருத்தலியல் பற்றிய கருத்துகள் என்ன்னுள் பல வினாக்களை எழுப்பின.ஆல்பர்ட் காம்யூ, தான் ஒரு எக்ஸிஸ்டன்ஷியலிஸ்ட்டாக அடையாளம் காட்டப்படுவதை விரும்பாவிட்டாலும், எக்ஸிஸ்டன்ஷியலிசம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் நூல் "L'Étranger"
நிற்க...

இப்படியெல்லாம் எழுத இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் படித்திருக்க வேண்டும்.ஆனால் என் வாசிப்பு குமுதம்,விகடன்..இத்தோடு சரி ஹீ...ஹீ
இதுவரை..அப்படிப்பட்ட வாழ்வை மாற்றக்கூடிய புத்தகங்கள் எதையும் நான் படிக்கவில்லை.

The book you have read more than once

ஜேஜே சில குறிப்புகள் - சுந்திர ராமசாமி
முதல் வாசிப்பில் நிறைய புரியவில்லை என்பதால் மீண்டும் படித்தேன்.இன்னமும் அந்த புத்தகத்தில் எனக்கு புரியாத பகுதிகள் நிறைய உண்டு.சு.ரா வின் பாஷையிலேயே சொல்ல வேண்டும் என்றால்..ஒரு வேட்டை நாயின் தீவிரத்துடன் அவரது எழுத்துக்களை பிந்தொடர்ந்து...பாதிவழியில் மூச்சிரைத்து நின்று விட்டேன்.

துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
வாழ்வின் எதார்த்தங்களையும்,சிக்கல்களையும்,அழகினையும் தன் பயணத்தினூடாக விளக்க்கியிருப்பார்.உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தை எத்தனைமுறைவேண்டுமானாலும் படிக்கலாம்.

One book you would want on dessert island

ஆதவனின் சிறுகதைத்தொகுப்பு
(or)
அசோகமித்ரனின் கட்டுரைகள்(தொகுப்பு)
(or)
இரண்டும் :)

One book that made you laugh

ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா

one book that made me cry

இதுவரை அப்படி ஒரு புத்தகத்தைப் படிக்கவில்லை(மோசமாக எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களைப் படிக்கும்போது அழுகைவருவது வேறுவிஷயம்)

One book you wish you had written

சுஜாதாவின் படைப்புகள் அனைத்தையும்

One book that you wish had never been written

ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
புரியவில்லை என்பதும் ஒரு காரணம்....
(சு.ரா: புரியாத எழுத்துகளில் இரண்டுவகை உண்டு.முதலாவது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது.பின்னது அதன் எதிமறை)

சாருவின் இந்த புத்தகம் இரண்டாவது வகை என நினைக்கிறேன்

One book you are currently reading

ஒன்றல்ல மூன்று புத்தகங்கள்
1) கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதாசுஜாதாவின் கட்டுரைகளைத் தொகுத்திருப்பது தேசிகன்
2)என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன்
Sample கவிதை:

பாபருக்கு
வேண்டும் மசூதி

ராமருக்கு
வேண்டும் கோவில்

ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகள்
3)Bhagavat Gita -A rational enquiry
Prof Veerabathrappa

One book you have been meaning to read
லா.சா.ரா , பிரமிள், மெளனி,வண்ண நிலவன்,வண்ணதாசன்,காப்கா,தஸ்தோவெஸ்கி,எரிக்கா ஜங்,ஜேம்ஸ் தர் பர்,புதுமைப் பித்தன்...
இவர்களின் புத்தகங்களில் தலைக்கு ஒன்றாவது படித்துவிட வேண்டும்.

Tagging anusuya to write 'book post'

10 comments:

Anonymous said...

//ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகள்//

ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகளேனும்

அனுசுயா said...

//முதலில் பரிந்துரைக்கப்படும் நூல் "L'Étranger"//

என்ன புரியாத பேரெல்லாம் ‍சொல்லறீங்க. ஏனுங்க இந்த அம்புலி மாமா, லயன் காமிக்ஸ் இ‍தெல்லாம் பத்தி எழுத கூடாதுங்களா (எனக்கு புரியறா மாதிரி) ?

பரத் said...

Prakash,
2003ல் வெளிவந்திருக்கும் எ.ப.யா.ஒ மறுபதிப்பில்
//ஜனங்களுக்கு
வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகள்//
என்றுதான் அச்சிடப்பட்டுள்ளது.
இப்பதிப்பின் முன்னுரையில் ஆசிரியர்"சில கவிதைகளின் வரிகள் மாற்றப்பட்டுள்ளன"என்று குறிப்பிட்டுள்ளார்.மாற்றப்பட்ட வரிகளில் இதுவும் அடங்குமா என்பது தெரியவில்லை.

சுஜாதா "சாவியில்"(1997) எழுதிய கட்டுரை ஒன்றில் இக்கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில்
//கழிப்பறைகளேனும்//
என்று உள்ளது.

கில்லியில் பரிந்துரைத்தமைக்கு நன்றி

பரத் said...

அனுசுயா,
சும்மா...ஒரு பந்தா தான்
:))

வேதா
இதெல்லாம்(Stranger) படிச்சிருந்தா எங்கயோ இருந்திருப்பேனே!
//குமுதத்தில் இப்பொழுது கோணல் பக்கங்கள் எழுதுகிறார்.

நானும் படித்தேன் உண்மையிலேயே கோணல் பக்கங்கள் தான்

Syam said...

படிக்க ஆரம்பிச்ச உடனே ஒரு நிமிஷம் பயந்து போய்டேன்..

//இப்படியெல்லாம் எழுத இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் படித்திருக்க வேண்டும்.ஆனால் என் வாசிப்பு குமுதம்,விகடன்..இத்தோடு சரி ஹீ...ஹீ
//

இத படிச்ச அப்புறம் தான் அப்பாடானு இருந்தது....ROTFL :-)

கதிர் said...

பரத்,

நீங்க குறிப்பிடும் புத்தகங்களின் அட்டைகளை கூட பார்த்ததில்லை. சுஜாதா சில கதைகளையும், ராமகிருஷ்ணனின் பல கட்டுரைகளையும் படிச்சிருக்கேன். உங்களுக்கு நிறைய வாசிப்பு அனுபவம் இருக்கும் போல இருக்கு. எங்க ஊர் நூலகத்தில் அதிகமாக நான் எடுத்து படித்த புத்தகங்கள் சாண்டில்யன் எழுதியது மட்டுமே. மற்ற புத்தகங்களையும் படிச்சிருக்கேன் நினைவில் நிற்பவர் சாண்டில்யன் மட்டுமே. சமீப காலமாக நான் அனுபவித்து படிப்பது ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள்தாம். ஏனென்றால் பயணம் எனக்கு பிடிக்கும்.

நிறைய எழுதுங்கள்!!

அன்புடன்
தம்பி

Gopalan Ramasubbu said...

//இப்படியெல்லாம் எழுத இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் படித்திருக்க வேண்டும்.ஆனால் என் வாசிப்பு குமுதம்,விகடன்..இத்தோடு சரி ஹீ...ஹீ
//

ROFTL:)

I'm reading Sujatha's Puranannodu .It's really interesting.

KK said...

First neenga romba padichavarunu ninaichen appuram than itha padichapuram koncham moochu vanthuthu :)

//இப்படியெல்லாம் எழுத இது போன்ற பெரிய பெரிய புத்தகங்களையெல்லாம் படித்திருக்க வேண்டும்.ஆனால் என் வாசிப்பு குமுதம்,விகடன்..இத்தோடு சரி ஹீ...ஹீ
//

Irunthalum neenga niraya padipeenga pola irukku... :)

பரத் said...

சியாம்,
நன்றி :))

தம்பி,
//சமீப காலமாக நான் அனுபவித்து படிப்பது ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள்தாம்.//
எனக்கும் ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் பிடிக்கும்


கோபாலன் ராமசுப்பு,
//I'm reading Sujatha's Puranannodu //
நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் இந்தப் புத்தகத்தைப் பற்றி

கேகே,
நன்றி
(ஒரு விளம்பரம் தான்)

Anonymous said...

If possible try ramesh-prem's sol endroru sol.