Thursday, August 17, 2006

ஐபெல் டவர்(Eiffel Tower) -விற்பனைக்கு!




"உண்மை பலநேரங்களில் கற்பனையைவிட சுவாரஸியமானது"

ஐபெல் டவரை(Eiffel Tower) ஒருவர் இரண்டுமுறை விற்றிருக்கிறார் என்று படித்தபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. LIC கட்டிடத்தை விற்பதாக திரைப்படங்களில் நகைச்சுவைக்காட்சிகள் வந்தபோது கூட இந்த கோணத்தில் சிந்திததில்லை."King of all con men " என்று அழைக்கப்படும் Victor Lustig என்பவர் தான் அந்த மகாஎத்தன்.

1890-ல் செக்கோஸ்லுவாக்கியாவில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர் Victor Lustig .சிறுவயதிலேயெ பல மொழிகளைப் பேசக் கற்றுக்கொண்ட Lustig சக மனிதர்களின் பழக்கவழக்கங்களையும்,பல்வீனங்களையும் எளிதில் கிரகிக்கும் திறன் கொண்டிருந்தார்.தனது 20வது வயதில் ஒரு சிறந்த கான் ஆர்டிஸ்டாக(Con-Artist) மலர்ந்த அவர் தன் 30வது வயதில் போலீஸால் பெரிதும் தேடப்படுபவராக(Most wanted) தேர்ந்திருந்தார்(!).

சில்லறை பித்தலாட்டங்களில் போரடித்துப்போன Lustig புதியதிட்டம் ஒன்றை தீட்டினார்.அத்ற்காக அவ்ர் கண்டறிந்ததுதான் Money Printing Machine.அந்த எந்திரத்தில் 100$-ஐ வைத்தால் 6 மணி நேரத்தில் மற்றுமொரு புதிய 100$ நோட்டினை(வேறு சீரியல் நம்பர்களுடன்)வெளித்தள்ளும்.இதனை 50,000$ வரை விற்றிருக்கிறார்.விற்ற 12 மணிநேரத்திற்குப்பிறகு அந்த டுபாகூர் எந்திரம் தன் வேலையைக் காட்டத்துவங்கிற்று.அதாவது வெறும் வெள்ளைத்தாளை கக்கத்த் தொடங்கியது.வாங்கியவர்கள் Victor Lustig-ன் கடையை முற்றுகை இடத்துவங்கினார்கள்.அச்சமயத்தில் அவர் வேறொரு தேசத்தில் பறந்து கொண்டிருந்தார்.

1925-ல், முதலாம் உலக யுத்ததிற்கு பிறகு பிரான்சில் தொழிற்புரட்சி ஏற்பத்துவங்கியிருந்த காலமது.அப்போது அங்கு தங்கியிருந்த Lustig-ன் கவனத்தை கவர்ந்தது,அன்றைய நாளிதளில் வெளியாகியிருந்த செய்தி ஒன்று.அதன் தலைப்பு இது தான்

"Eiffel Tower in drastic need of renovation"
ஐபெல் டவரை பராமரிப்பதில் அரசிற்குண்டான கஷ்டங்களையும்,அது முழுமையாக புதுப்பிக்கபடவேண்டியதன் அவசியத்தையும் அக்கட்டுரை அலசியிருந்தது.டவரை அகற்றிவிட்டால் கூட பரவாயில்லை என்பதுபோன்ற செய்திகளை வெளியிட்டிருந்தது அப்பத்திரிக்கை.இதனைப் படிக்க படிக்க Lustig-ன் மனதில் ஒரு திட்டம் உருவானது.ஒருவேளை அரசு ஐபெல் டவரை விற்க நேர்ந்தால்!

Lustig உடனடியாக செயலில் இறங்கினார்.ஒரு அரசு அதிகாரின் உதவியுடன் அரசு முத்திரை இடப்பட்ட தாள்களைப்பெற்றார்.அதனைக் கொண்டு பிரான்சின் முன்னணி இரும்பு வியாபாரிகள் சிலருக்கு ரகசியக்கூட்டம் ஒன்றிற்கான அழைப்பை விடுத்தார்."Deputy director General of the Ministry of Mail and Telegraps" என்று ஒரு பதவியை தனக்குத்தானே அளித்துக்கொண்டார்.அவரது நண்பர் டாப்பர் டான் தான் அவரது Personal secretary.இந்த சந்திப்பினை பிரான்சின் மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்றான Crillonல் ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த ரகசிய சந்திப்பில்(!) ஐபெல் டவரினால் அரசிற்கு ஏற்படும் சங்கடங்களையும்,அரசு அதனை விற்க முன்வந்திருப்பதாகவும் சாதுர்யமாகப் பேசினார்.பெயர் பெற்ற,நேர்மையான வியாபாரிகளை மட்டுமே அரசு பேரத்திற்கு அழைத்திருப்பதாகக் கூறினார்.ஐபெல் டவரை விற்க மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவிப்பார்களென்பதால்,இந்த ஒப்பந்தமும்,வாங்குபவர் பற்றிய விபரங்களும் ரகசியம்மாக வைத்திருக்கப்படும் என்று உறுதி கூறினார்.இதில் Mr.Poisson என்பவர் ஆர்வமாக இருப்பதை உணர்ந்து கொண்ட Lustig,அவரைத்தனியாக அழைத்து ஒப்பந்தத்தை பேசி முடித்தார்.ஐபெல் டவரை ஒரு பெரிய தொகைக்கு விற்றார்.இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்ன தெரியுமா?தான் ஒரு அரசு அதிகாரி என்பதால் தன்க்கு சம்பளம் குறைவு என்றும் ,இந்த ஒப்பந்ததை அவர் பெயரில் முடிக்க தனக்கு லஞ்சம் வெண்டும் என்று ஒரு பெரிய தொகையும் Poisson-னிடமிருந்து பெற்று கொண்டு விட்டார்.பணத்தை வாங்கிக்கொண்டு வெளி நாட்டுக்குப் பறந்தவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பணத்தை ஏமந்தவர் போலீஸில் புகார் கொடுக்கவில்லை.தன் மானம் போய்விடும் என்று கருதி பேசாமல் இருந்து விட்டார்."அட இது நல்லயிருக்கே" என்று நினைத்தவர் மீண்டும் ஒருமுறை இதேபோன்று மற்றொரு நபரிடம் விற்றிருக்கிறார்.ஆனால் இம்முறை பணத்தை இழந்தவர் போலீஸில் புகார் செய்துவிட வேறு வழியில்லாம அமெரிக்காவிற்கு பறந்து விட்டார்.அதன் பிறகு அவர் பிரான்சுக்குத்திரும்பவே இல்லை.

அடுத்து Victor Lustig தன் கைவரிசையைக் காட்டியது பொது மக்களிடம் அல்ல,மாறாக அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் மிகப்பெரிய கிரிமினல்லாக இருந்த Al Capone னிடம்.அவரிடம் தனக்கு 500,000டாலர்களைத்தந்தால் ஒரு வணிகத்தின் மூலம் அறுபதே நாட்களில் இருமடங்காக்கித்தருவதாகக் கூறியிருக்கிறார்.இதற்கு ஒத்துக்கொண்ட Capone..ஏமாற்ற நினைத்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.பணத்தை ஒரு வங்கியில் பத்திரமாக பொட்டுவிட்டு Lustig ஹாயாக ஊர்சுர்றியிருக்கிறார்.60 நாட்களுக்குப்பின் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு Capone-ஐ சந்தித்திருக்கிறார்.தன் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்.ஆத்திரமடைந்த capone க்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார்.ஆம் அவரது 50,000 டாலர்களையும் திருப்பித் தந்திருக்கியிருக்கிறார்.இதனால் ஆசரியமடைந்த capone - இவரது நேர்மையை பாராட்டி 1000 டாலர்களை இவருக்கு பரிசளித்திருக்கிறார்.அவருக்கு வேண்டியதும் அதுதானே! தான் ஏமாற்றப்பட்டதைக்கூட உணராத Capone - ஐ பார்த்து புன்னகைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் Lustig.மனித உணர்வுகளைப்படிக்கத்தெரிந்த அவரது திறமைக்குக் கிடைத்த பரிசு அது.

அதன் பின் பல ஆண்டுகளுக்குப்பிறகு 1935 -ல் போலி டாலர்களைக் கைமாற்றும் போது போலீஸில் பிடிபட்ட Lustig, 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.தனது இறுதி காலத்தை 'அல்கார்ட்ஸ்' சிறையில் கழித்தார்.அங்கு தனது சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டு,பின் போலீஸாரால் வேறு ஒரு அறைக்கு அனுப்பப்பட்டார்.அந்த சககைதியின் பெயர் Al Capone !.

1947-ல் நிமோனியா காய்ச்சல் கண்டு சிறையிலேயே இறந்து போனார் Lustig.அவரது இறப்பு சான்றிதழ் படிவத்தை நிரப்பிக்கொண்டுவந்த அலுவலர் OCCUPATION என்ற கட்டத்தின் அருகில் சற்று நிறுத்தி,யோசித்தார்..பின்பு SALES MAN எனநிரப்பினார்.

"There's a suker born every minute"
-P.T.Barnum

13 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
aaradhana said...

நல்ல ஆனால் உண்மையான கதை???'சிரித்தேன்.

KK said...

super post! Good information!!!

You're tagged. Hope you dont mind.

Syam said...

interesting info barath, I remember Catch me if you can movie.. :-)

KK, panrathayum pannitu appuram enna dont-ta-dont mindu (gounder style padinga) :-)

கதிர் said...

வடிவேலு கதைதான் ஞாபகத்துக்கு வருது!! :-)

பரத் இந்தி பிரச்சினை எல்லாம் எப்டி போகுது?

அமிழ்து - Sathis M R said...

பரத்,

நல்லா எழுதுறீங்க...!

பிரசன்னா சொல்லித் தான் இது உங்களது வலைப்பூ என்று தெரியும்... அதற்கு முன்பு சில தடவை தங்களது பதிவுகளைப் படித்துள்ளதாக ஞாபகம்!

keep it up...!

சதீஸ்.

பரத் said...
This comment has been removed by a blog administrator.
அனுசுயா said...

இந்த கதைய முதல்லயே கேள்வி பட்டிருக்கேன் ஆனா இவ்வளவு விரிவா சரியான வருடத்துடன் படிக்கறது இதுதான் முதல் தடவை. அருமையா எழுதியிருக்கீங்க.

Pavithra said...

That was useful information !! Had a hearty laugh. Cinema paartha maathiri irunthuchu ..

மணியன் said...

பரத்,
இன்றுதான் உங்கள் பதிவுகளைக் கண்டேன். மிக சுவையான செய்திகளை பதிகிறீர்கள். வாழ்த்துக்கள்!

மணியன் said...

பரத்,
இன்றுதான் உங்கள் பதிவுகளைக் கண்டேன். மிக சுவையான செய்திகளை பதிகிறீர்கள். வாழ்த்துக்கள்!

பரத் said...

Aaradhanaa,
நன்றி

KK
நன்றி
மாட்டிவிட்டுடீங்களே
எழுதிடுவோம் :)

Syam
நன்றி
//KK, panrathayum pannitu appuram enna dont-ta-dont mindu (gounder style padinga) :-)
//
ROTFL :))

thambi
//பரத் இந்தி பிரச்சினை எல்லாம் எப்டி போகுது? //

சரியில்லைங்க...அந்த மொழியே சரியில்ல."நேற்று" க்கு ஹிந்தில என்னனா "கல்"ங்கறாங்க.சரி "நாளை"க்கு என்னடான்னா அதுவும் "கல்"ங்கறாங்க.அந்த மொழியே எனக்க்கு புடிக்கலைங்க
(ஆடத் தெரியதவன்......ஹீ ஹீ)


சதீஷ்,
முதல் வருகைக்கு நன்றி சதீஷ்

Anusuya,
நன்றி

Pavithra,
நன்றி

மணியன்
முதல் வருகைக்கு நன்றி மணியன் சார்

பரத் said...

நன்றி சந்திர சேகர்..
நீங்களும் எழுத ஆரம்பிக்கலாமே