Monday, October 02, 2006

யாமறிந்த மொழிகளிலே....

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்கடியும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன்னே ரிலாத தமிழ்


மென்பொருள் துறையில் தென்னிந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது தெரிந்ததே.குறிப்பாக தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களின் எண்ணிக்கை அதிகம்.இதில் தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்
தெலுங்குதேசத்தவரின் எண்ணிக்கை சற்றே கூடுதல்
எனலாம்.குறைந்தபட்ஷம் ஒரு சிறு குழுவிற்கு(Team) ஒருவராவது இருப்பர்(இவர்களில் பெர்ம்பாலானவர்களின் வாழ்க்கை லட்சியம் அமெரிக்கா சென்று குடியேறுவதாகத்தான் இருக்கும்.நம்மவர்களுக்கும் இந்த ஆசை உண்டென்றாலும் ,தெலுங்கர்கள் இவ்விஷயத்தில் மிகத்தீவிரமாக இருப்பார்கள்).

உடன் பணிபுரியும் தெலுங்கு மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது,பேச்சு மொழியை நோக்கிச்சென்றது.தமிழ் தெலுங்கை விடத்தொன்மையானது என்ற என்வாதத்தை அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. ரங்கராஜுலு,வெஙட்ராமுலு என்று ஏதேதோ அறிஞர்களின் பெயர்களைச்சொல்லி,அவர்களெல்லாம் தெலுங்குதான் தென்னிந்திய மொழிகளில் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னார்கள்.பாதிவிவாதத்தில் என் விஷயஞானமின்மை காரணமாக நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டேன்.அவர்கள் சொல்வது தவறு என எனக்கு தெரிந்திருந்தும்,அதனை நிரூபிக்கத்தேவையான சரித்திரசான்றுகள் என்னிடமில்லை.சரி,இணையத்தில் ஏதாவது கிடைக்குமா என்று கூக்ளியதில் George L. Hart என்பவர் எழுதிய அருமையான ஒரு கட்டுரை கிடைத்தது.கட்டுரை கூட இல்லை,கடிதம்.தமிழை செம்மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அவர் எழுதிய கடிதம் அது.தமிழைப்பற்றி எழுதப்பட்ட சிறந்த கட்டுரைகளில் ஒன்றாகக்கொள்ளலாம் இதனை.ஒரு வார்த்தைகூட ,கூடுதலாகவோ,குறைவாகவோ இல்லாமல் நேர்த்தியான பாரதியின் கவிதை போல இருக்கிறது இக்கடிதம்.இலக்கிய நடையில் சொல்லவேண்டுமென்றால் "நறுக்குத் தெரித்தாற்போல்" இருக்கிறது ,பேச்சு நடையில் சொல்லவேண்டுமென்றால் "நெத்தியடி".

தமிழின் தொன்மையை சான்றுடன் விளக்கும் இக்கடிதம் அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று.கட்டுரையின் இறுதியில் Hart இவ்வாறு குறிப்பிடுகிறார்"தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி கட்டுரை எழுத வேண்டியுள்ளது வினோதமாக உள்ளது.இது எதனைப் போன்றுள்ளது என்றால் இந்தியாவை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்று என்றோ ,ஹிந்து மதத்தை உலகின் சிறந்த மதங்களில் ஒன்று என்றோ அறிவிக்கக் கோருவதைப்போல உள்ளது " .

அந்தக் கடிதத்தை உங்கள் பார்வைக்குத்தருகிறேன்.அதற்குமுன் Hart பற்றி ஒரு சிறுகுறிப்பு.

Hart கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.சம்ஸ்கிருதம்,லத்தீன்,கிரீக் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளில் மிகுந்த புலைமையுடையவர்.புறநானூறு,கம்பராமாயணம் போன்ற பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்.தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார்.இவரது மனைவியின் பெயர் கெளசல்யா.இவர் இக்கடிதத்தை எழுதிய ஆண்டு 2000.அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது 2004-ல்.

அக்கடிதத்தைக் காண Tamil as a Classical Language


George L. Hart

Hart உடனான சந்திப்பு தமிழில் சந்திப்பு 1
சந்திப்பு 2

(பின்குறிப்பு:தமிழறிந்த சான்றோர் பலருக்கு இது பழைய செய்தியாக இருக்கும் :)) )

11 comments:

கோவி.கண்ணன் [GK] said...

பரத் சுப்ரமணியன்...!

நல்ல பதிவு ...!

தெரிந்தை பகிர்ந்திருக்கிறீர்கள்... சிலருக்கும் பழையாதாக இருந்தால் என்ன ? தமிழைப் பொறுத்தவரை எல்லாமே இனிமைதான். தமிழ் பெருமை அறிந்தவர் மேலும் ஒருவர் இருக்கிறார் என்று தான் எல்லோரும் மகிழ்வுறுவர்.

Ms Congeniality said...

Thanks for this information!!Feel so proud of the language(even before..now all the more..)

கால்கரி சிவா said...

மிக நல்ல தகவல்கள்.

தொடரட்டும் உங்Kஅள் பணி

ஓகை said...

சிறந்த பதிவு. ஹார்ட் அவர்களின் கடிதம் படிக்கத் தந்தமைக்கு மிக நன்றி.

Syam said...

அருமையான பதிவு பரத்...ஆனால் தெலுங்கு மக்கள் சொன்னாதான் தமிழ் பழமையான மொழி என்று இல்லை...ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்தது இரண்டு விசயங்கள் 1.தெலுங்கு 2.டாலர், நானும் இங்க வந்த சமயத்தில் அவர்களுடன் argue பண்ணி வெறுத்து போய் இப்போல்லாம் அவங்க தெலுங்கு தான் பழமையான மொழி அப்படின்னு சொன்னா நானும் ஆமா ஆமா அதுதான் உலகத்திலேயே முதல் மொழி அப்படினு சொல்லிட்டு போய்டுவேன்...பூனை கண்ண மூடிக்கிட்டா உலகம் இருட்டுனு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது :-)

பரத் said...

கோவி.கண்ணன்,
தங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி கண்ணன்

Ms.Congeniality,
Thankx :)

கால்கரி சிவா ,
மிக்க நன்றி சிவா

ஓகை,
கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி

வேதா
:)

சியாம்

// நானும் ஆமா ஆமா அதுதான் உலகத்திலேயே முதல் மொழி அப்படினு சொல்லிட்டு போய்டுவேன்..//
:))
//பூனை கண்ண மூடிக்கிட்டா உலகம் இருட்டுனு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது //
சரியா சொல்லியிருக்கீங்க
கருத்துக்களுக்கு நன்றி சியாம்

KK said...

Bharath - Nice post! Avanga sonna sollitu poranga... vidunga... Namakku theriyum namma mozhiya pathi :)

பரத் said...

KK,
Thankx :)

Gopalan Ramasubbu said...

Good article bharath.have read this before.

பரத் said...

Thanks for your comments Gops

பரத் said...

Thanks and belated wishes