Thursday, April 20, 2006
அன்பே சிவம்
கடந்த வாரம்,அன்பே சிவம் படத்தை மீண்டும்(6வது முறையாக) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலின் எல்லா படஙளும் எனக்கு பிடிக்கும் என்றாலும்,இந்த படம் எனக்கு மிகப் பிடித்த (டாப் டென்) படங்களில் ஒன்று.
அண்மையில் கம்யூனிசம் பற்றி பேசும் எந்த தமிழ்படமும் வந்ததாக நினைவிலை.எந்த முன்னனி ஹீரோவும் ஏற்க தயங்கும் விகாரமான ரோலில் கமல் பின்னியெடுத்திருப்பார்.படதின் ஹைலைட்டே கமலுக்கும் மாதவனுக்கும் நடக்கும் conversations தான்(வசனம்:மதன்).
கமலுக்கு இணையான ரோல் மதவனுக்கு.மேடி கலக்கியிருப்பார். கமலின் இம்சை தாங்க முடியாமல் Give me a break man என புலம்புவது அழகு.freek out!
இந்தப் படத்தில் கமலின் நரம்புகள் கூட நடித்திருக்கும்.பெரிய சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு..ஒருமாதிரி இழுத்து,இழுத்து பேசுவார்.இதை படம் முழுவதும் ஒரேமாதிரியாக செய்திருப்பார்.gr8! (Flash backil அழகான கமலை ரசிக்கலாம்).
பாடல்களும் இப்படத்திற்கு plus(இசை விதயாசாகர்).குறிப்பக மது பாலகிருஷ்ணன் பாடிய "பூவாசம் புறப்படும் பெண்ணே" பாடல் அருமையாக இருக்கும்.படத்தில் சேர்க்கப்படாத SPB பாடல் ஒன்று இருக்கிறது."மெளனமே"எனத்துவங்கும் அப்பாடல் அக்மார்க் SPB மெலடி.
ஐந்தே நிமிடஙள் வந்தாலும் யூ.கி.சேது பட்டையை கிளப்பியிருப்பார்.
குறையே இல்லை என்று சொல்லமுடியாது.ஹீரோ வில்லன் மகளைக் காதலிப்பது,ஹீரொ 10 பேரை தனி ஆளாக நின்று பந்தாடுவது போன்ற தமிழ்படதுக்கே உரிய அபத்தங்கள் இதிலும் உண்டு.அதையெல்லாம் தாண்டி இப்படம் ஒரு வித்யாசமன முயற்சி.
கடைசிக்காட்சியில்,சந்தான பாரதி கமலை கொல்வதற்காக வந்துவிட்டு மனம் திருந்தி கொல்லாமல் விட்டுவிடுவார்.பின்பு கமலிடம்"திரும்பி வந்து என் பொழப்பில் மண்ணள்ளி போட்றாதீங்க "என்பார்.அதற்கு கமல் "பொழப்ப கெடுக்கமாட்டேன்..பொழச்சு போங்க " என்று சொல்லி சிரிப்பாரே.....Class
பி.கு:கமல் இந்த படத்திற்காக செலவழித்தது 12 கோடி.திரும்பக் கிடைத்தது 7கோடி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
one of my fav movies...too mature for our crowd i guess...
Yeah..you are correct.
(valakkam pola)innum konja naal kalichu vanthirukkalamo nnu thonuthu!!
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. எனக்கு எப்போழுதெல்லாம் மனசு சரியில்லையோ அப்பொழுதெல்லாம் பார்ப்பேன். ஒரு மாதத்திற்கு இரு முறையாவது. இத்தனை அருமையாக வாழ்வியலை சொல்லும் படம் தமிழில் குறைவு.
Post a Comment