Sunday, April 13, 2008

கருத்து கந்த்ஸாமி

நேற்று காலையில், முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக செய்திச்சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தபோது,ஒன்றில் Breaking News ஓடிக்கொண்டிருந்தது.ஆஜ் தக் என்று நினைவு.என்ன செய்தி? சாயஃப் அலிகானை காண்பிக்கிறார்கள்.அவரது கழுத்துக்கு ஒரு close-up.அங்கு ஒரு நகக் கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.பிறகு கரீனா கபூர்,அவரது கைக்கு ஒரு close-up.அவருக்கும் நகக்கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.இருவரும் டேட்டிங் செய்கிறார்களாம்.இதனால் சகலமானவர்களுக்கும் இந்த சேனல் சொல்ல விழைவது.....த்தூ...தொலைக்காட்சியை அணைத்துவிட்டேன்.இதைவிட கீழ்தரமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தால் செய்தி வழங்கமுடியாது.அதுவும் அனைவரும் செய்திகளைப்பார்க்கும் காலைவேளையில்.ஆஜ்தக் என்றில்லை ஸ்டார் நியூஸ்,இண்டியா டிவி,டைம்ஸ்,ஸீ என வரிசையாக பெரும்பாலான செய்தி சேனல்கள் இதையே தான் செய்கின்றன.இவற்றோடு ஒப்பிட்டால் NDTV.IBN Live பரவாயில்லை.சினிமா செய்திகளைக்கொடுக்க M,V என ஆயிரம் சேனல்கள் இருக்க இவர்களும் ஏன் இதையே செய்கிறார்கள் என்பது புரியவில்லை.விதர்பாவில் இந்தவாரம் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இன்றோடு 9 ஆக உயர்ந்துள்ளது.2008ல் மட்டும் 256 பேர்.2005லிருந்து இன்றுவரை மொத்தம் 1500 பேர்.சத்தமின்றி ஒரு இனப் படுகொலையே நடந்து கொண்டிருக்கிறது,ஆனால் மக்களுக்கு இத்தகைய செய்திகளைக் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்தி ஊடகங்கள் சாயஃப் அலிகானின் கழுத்துக் காயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.


உண்ணாவிரதக் கூட்டத்தில் சத்ய ராஜ் முஷ்டியை மடக்கி உணர்ச்சிமயமாகப் பேசியதைப்பார்க்க காமெடியாக இருந்தது.திரைத்துறையின்றரின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வெட்டி வேலை.அவரது 'தீப்பொறி ஆறுமுகம்' வகைப்பேச்சில் கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்ததில் ஆச்சரியமேதுமில்லை.ஆனால் அவர் ரஜினியைப்பற்றி சொன்னவை அனாவசியம் என்று தோன்றுகிறது.கன்னடரான(அல்லது மராட்டியரான) ரஜினி இவ்விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் கடமையைச் சரியாகவே செய்திருக்கிறார்.சத்யராஜுக்கு அவர்மேல் பல நாள் வெறுப்பு இருந்திருக்க வேண்டும் .இதுதான் சமயம் என்று சீண்டிப்பார்த்திருக்கிறார். எனக்கு 'விஜயகாந்த் படம் பார்த்து விட்டு,அகப்பட்ட நோஞ்சானை குத்துவிடும்' என்ற வலையுலக க்ளிஷேதான் நினைவுக்கு வருகிறது.


கமலின் தமிழ் பேட்டிகளைப் புரிந்துகொள்வதில் தான் சிறிது சிரமம் உள்ளது.ஆங்கிலப் பேட்டிகள் தெளிவாகப் புரிகின்றன.ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கமல் அளித்த சிறுபேட்டி அண்மையில் நான் படித்த பேட்டிகளில் சிறந்தது எனலாம்.மாதிரிக்கு..

ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்

My politics is private like sex. I don'twant to spoil the fun by talking about it.

Q:Both the times when you separated from your wives, there was another woman involved. Sarika led to your split with Vani and Simran caused a rift between Sarika and you.

கமல்: Unless it's a gay marriage, there's always another woman involved.


தூம்- 2 பார்த்தபோது வந்த அதே தலைவலி 'ரேஸ்' பார்த்தபோதும் வந்தது.படத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருவர் இறந்து போகிறார்.10நிமிடங்களில் திரும்பி வந்துவிடுகிறார்.பர்முடெஷன் காம்பினேஷனில் நாயகர்கள்,நாயகிகள் ஜோடி மாறுகிறார்கள்.சோகப்பாட்டோ,சந்தோஷமான பாட்டோ அதிஃப் மூக்கால் அழுகிறார்.ஆனால் எப்படியோ இந்த படங்களும் பாடல்களும் ஹிட் ஆகிவிடுகின்றன.சொத்தைக் கடலையை சாப்பிட்டால்,வேறு ஒரு நல்ல கடலையைச் சாப்பிடும் வரை வாய் உவ்வே..என்றிருக்கும் அதுபோலதான் திரைப்படங்களும்.நல்ல வேளையாக ரேஸ் படத்திறு பிறகு ஷெளரியா(தீரம்) பார்க்கக்கிடைத்தது.ராகுல் போஸ்,K.K.மேனன்,ஜாவித் ஜாவ்ரி நடித்திருக்கும் இந்தப் படம் ராணுவ வழக்கு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. இது "A few Good Men"படத்தின் அப்பட்டமான காப்பி என்று கேள்விப்பட்டேன்.நல்ல வேளையாக அந்த ஆங்கிலப் படம் பார்க்காததால்,ஷெளரியாவை ரசிக்க முடிந்தது.ரீமேக் என்ற சொல்லமுடியாத படிக்கு நம் நாட்டுக்கு நெருக்கமானதொரு பிரச்சனையை கையாள்கிறது படம்.வேறெதற்காக இல்லாவிட்டாலும் K.K.மேனனின் அனாயாசமான நடிப்புக்காகவாவது படத்தப் பார்க்கலாம்.

2 comments:

TBCD said...

படத்தின் கிரிட்டிஸில் "A few good men" தழுவியது என்றுச் சொல்லுறாங்களா...?

எதுக்கும் ஒரு முறை Jack Nicholson நடிப்பை பார்த்துட்டுச் சொல்லுங்க...

பரத் said...

tbcd,
ஆமாம்,இது "A few good men" படக்தின் தழுவல் என்றுதான் எல்லா விமர்சனங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

//எதுக்கும் ஒரு முறை Jack Nicholson நடிப்பை பார்த்துட்டுச் சொல்லுங்க//

எனக்கு இந்த படம் பார்த்ததிலிருந்து "A Few good men"பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது
கருத்துக்களுக்கு நன்றி TBCD