Thursday, May 04, 2006

கண்டிப்பா பயப்படணும் (அல்லது) பயப்படுவது மிகவும் அவசியம்



தலைப்பைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்."டர் நா ஸரூரி ஹை" படத்தோட Translation தான் அது.எப்டி கலக்கறோமா! சரி மேட்டருக்கு வருவோம்.கடந்த வாரம் மேற்சொன்ன இந்த (அபத்தமான)படத்தை பார்க்க நேர்ந்தது.படத்தின் 6 கதைகளையும் 6 வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.ராம் கோபால்வர்மாவின் கற்பனை கிணரு வற்றிவிட்டது போலும்..குமுததில் வரும் ஒருபக்கக்கதை போல 6 கதைகளை சேர்த்து முழு நீள படமொன்றை எடுத்துவிட்டார்.இதுபோல கதைகளை சேர்த்து எடுப்பது நல்ல உத்தி தான் என்றாலும் தேர்ந்தெடுத்த கதைகள் எல்லாம் பழசு, நாம் ஏற்கனவே அறிந்தது.அதனால் சுவாரசியம் ஏற்படவில்லை.
6 கதைகளில் அர்ஜுன் ராம்பால் வரும் கதை மட்டும் தேறுகிறது..அமிதாப் பச்சனை வீணடித்திருக்கிறார்கள்.
வழக்கம் போல பயமுறுத்துவதற்கு இந்த படத்திலும்இசையை தான் நம்பியிருக்கிறார்.இசையமைப்பாளரும் வாங்கிய காசுக்கு நன்றாக அடித்திருக்கிறார்.
ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது....அமிதாப் திரையில் தோன்றும் முதல் காட்சியில்,திரையரங்கில் யாருமே கைதட்டவில்லை...அட ஒரு விசில் கூட இல்லை.இதற்கும் படம் ரிலீஸான இரண்டாம் நாள் சென்றுள்ளேன்.வட இந்தியாவின் Super starக்கே இந்த நிலமைதான்.காரணம்...

1)வட இந்தியர்கள் நம்மைப்போல் சினிமாகாரர்களை கொண்டாடுவதில்லை.சினிமாவை சினிமாவாகப்பார்கிறார்கள்.
2)ரிலீஸாகும் 75% படஙளில் அமிதாப் இருக்கிறார்.

(Assistant Dir:சார்,இந்த படத்தில் அமிதாப் பண்ற மாதிரி ரோல் ஒண்ணுமில்லை.
Director:அப்டீன்னா..ஒரு சீன்ல மட்டும் வர்ற அந்த Post man characterஐ பண்ண சொல்லு.)
Default actor!!

படத்தின் முதல் காட்சியில் ,ஒருவர் "டர் னா மான ஹை" பார்த்துவிட்டு தியேட்டர் காரரிடம் சென்று ராம்கோபால் வர்மாவின் address கேட்பார்.தியேட்டர் காரர் எதற்கெனக்கேட்பார்.அத்ற்கு இந்த முதல் ஆசாமி காசை திருப்பி வாஙணும் என்பார்.
படம் முடிந்து வெளியெ வரும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.