Saturday, July 02, 2011

டெல்லி பெல்லி சில்லி!!


டெல்லி பெல்லி ஒரு திராபை. ஆமிர்கான் பேனராயிற்றே என்று நம்ம்பி போனால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைகிறார், அதுவும் 90 நிமிடங்களும் வைகிறார்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக திரையில் காட்டப்படும் அசிங்கங்களால் நகைச்சுவையுணர்வைத் தூண்டமுடியாது என்ற அடிப்படை, கானுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். படத்தில் கெட்டவார்த்தைகள் போக மீதமுள்ள வசனங்களை ஒரு பஸ்டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம்(க்ளிஷெ..க்ளிஷே).கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை, அது இல்லாமலேயே துரத்தல்‍‍‍‍‍‍‍‍‍‍ ‍-ஆள்மாறாட்ட வகை படங்களை சிறப்பாக எடுக்கமுடியும்.ஆனால்,ஆயத்தகாட்சிகள் முடிந்து சுவாரசியம் தொடங்கும்போது படம் முடிந்துவிடுகிறது. படத்தில் வரும் "ஆய்" காட்சிகள் சிரிப்புக்குபதில் அருவெறுப்பைத்தான் தருகின்றன(இந்த சமயத்தில், பேசும் படத்தில் கமல் "ஆய்" காமெடியை 'கையாண்ட' விதத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லை ;) )

எல்லா வாக்கியங்களையும் கெட்ட வார்த்தைகளுடன் துவங்கி முடிக்கும் நிறைய வட இந்திய இளைஞர்களை சந்த்திருக்கிறேன், ‍அவர்கள் இந்தப்படத்தைக் கொண்டாடப்போவது உறுதி.
Shit happens,,,,,Oh yeah!!

8 comments:

Barath said...

Hi
I was almost going to book tickets for this movie and gosh, I read your review. Guess it is worth waiting for DVD. All these bad remarks are of course kindling the urge to watch it, at least in thiruttu DVD :)

சாணக்கியன் said...

படம் நல்லாத்தான் இருக்கு... படம் பாக்க போறதுக்கு முன்னாடி அதப் பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சுட்டுப் போறது நல்லது. அப்பதான் அதப் பாக்கறதுக்கான சரியான மன நிலை நம்ம கிட்ட இருக்கும்...

சாணக்கியன் said...

படம் நல்லாதான் இருக்கு... நீங்க படத்தப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மன நிலை இருந்தாமட்டும்தான் போகனும் :)

பரத் said...

Thanks Barath :)
சாணக்கியன்,
அட இது நல்லாயிருக்கே!! இனிமேல் படத்தை பற்றி தெரிந்துகொண்டு, அதற்குத்தேவையான மனநிலையை உருவாக்கிக்கொண்டு/இருந்தா படம் பார்ர்க்கப் போகிறேன் ;)

ashok said...

i somehow enjoyed...it was different from the usual bollywood shit

பரத் said...

Hi Ashok,
Romba naal aache, how are you? :)

சமுத்ரா said...

hmmmmmmmm good one
(padam alla vimarsanam:)

ashok said...

iam fine...dont see u blog often now a days?