Sunday, January 03, 2010

புத்தகத் திருவிழா 2010




சிறுவயதில், தீபாவளிக்கு முதல்நாள் பங்கு பிரித்துக் தரப்படும் பட்டாசுகளைப் பார்க்கும் போது உண்டாகுமே, அதே போன்றதொரு உவகை நேற்று புத்தக சாலையிலிருந்து வாங்கிவந்த புத்தகங்களைப் பார்த்தபோது உண்டானது. பெரிதாக பட்டியல் எதுவும் தயாரித்துக்கொண்டு செல்லவில்லை. எனினும் வெவ்வேறு சமயங்களில், படிக்கவேண்டும்(Must Read) என்று மனது குறித்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இந்த வருடத்திற்கான புத்தக கோட்டா கிட்டத்தட்ட பூர்த்தியாகிவிட்டது. விடுபட்ட ஓரிரு புத்தகங்களை வாங்க அடுத்த வாரம் செல்ல வேண்டும். இனி புத்தகப் பட்டியல்..


1) India After Gandhi - Ramachandra Guha

இந்த வருடத்திற்குள் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தாலே என்னளவில் அது சாதனை தான். (900 பக்கங்கள்).


2) ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா

ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. சாவியில் அவர் எழுதிய கதைகளைத் தவிர்த்து மற்றவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன்.


3)அரசூர் வம்சம் - இரா.முருகன் (நாவல்)

இதற்கு வந்த விமர்சனக்கட்டுரைகளை படித்ததற்கு பதில் இந்த

புத்தகத்தைப் படிக்கத்துவங்கியிருந்தால், இவ்வளவு நேரம் பாதி புத்தகத்தைத் தாண்டியிருப்பேன். மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் நாவல்.


4) நவீனன் டைரி - நகுலன் (நாவல்)


5) நிழல்கள் - ஹரன் பிரசன்னா (கவிதைத்தொகுப்பு)

6) பேசாத பேச்செல்லாம் - ச.தமிழ்ச்செல்வன் (கட்டுரைகள்)

7) கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி (நாவல்)

8) இடாகினி பேய்களும் – கோபி கிருஷ்ணன் (நாவல்)

9) அகி – முகுந்த் நாகராஜன் (கவிதைகள்)

10) நினைவோடை - அசோக மித்ரன் (27 கட்டுரைகள்)

11) காக்டெய்ல் – சுதேசமித்ரன் (நாவல்)

12) லண்டன் டைரி - இரா.முருகன் (பயணக்குறிப்புகள்)

13) பென்சில் படங்கள் – ஞானக்கூத்தன் (கவிதைகள்)

14) நாலு மூலை – ரா.கி.ரங்கராஜன் (கட்டுரைகள்).



3 comments:

Gopalan Ramasubbu said...

நன்றி பரத் :)

உங்க லிஸ்டல இருக்கும் முதல் இரண்டு புத்தகங்களைப் படித்துவிட்டேன். மூன்றாவது புத்தகம் படிக்க ஆரம்பிக்கனும். அசோகமித்திரனின் முழுகட்டுரைத்தொகுப்பும் பிரிக்காமல் அப்படியே இருக்கு.ச.தமிழ்ச்செல்வனின் கட்டுரைகள் படிச்சுட்டு விமர்சனம் எழுதுங்க. கட்டாயம் வாங்கிப்படிக்கனும்..மற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகளைப்பற்றியும் எழுதுங்க.ரொம்பவும் சின்னப் பையனாக இருப்பதால், பெரும்பாலான கவிதைகள் எவ்வளவு முயற்சித்தாலும் எனக்குப்புரிவதில்லை ;).

Mottai said...

Add 'Mister Vedantham' by Devan too. Your book is your book and my book is your book, id est, once I finish reading :)

பரத் said...

கோபாலன்,
பெரிய கட்டுரைத்தொகுப்புகளைப் பார்க்கும் போது அயற்சி ஏற்படுகிறது, அதனால் தான் சிறு புத்தகங்களை வாங்குகிறேன். வாசித்து முடித்ததும் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கோகுல்,
இந்த டீல் நல்லாயிருக்கே :-))