Friday, June 13, 2008

தசாவதாரம் விமர்சனம்(without spoilers)




டிஸ்கி:நான் without spoilers போட்டதுக்கு காரணம் என் பெருந்தன்மை அல்ல.கதையை சொல்வது அவ்வளவு கடினம்.ஒரு பயணம் போல நீளமாக செல்லும் இந்த திரைக்கதையை இரண்டு வரிகளில் சொல்லலாம் அல்லது கமல் போல மூன்று மணிநேரத்தில்(3.10) சொல்லலாம்.ஆனால் சஸ்பென்சை உடைக்கிறேன் என்று யாரும் உங்களை ஏமாற்ற முடியாது.அதனால் தைரியமாக படியுங்கள்.


படம் மிக நன்றாக இருக்கிறது.சற்றே நீளமாக இருந்தாலும் Worth watching.கமல் தனது இரண்டு வருட உழைப்பிற்கு நியாயம் செய்திருப்பதாகவே உணர்கிறேன்.வெவ்வேறு அவதாரங்களில் படம் முழுவதும் கமல் வியாபித்திருக்கிறார்.நான் வெவ்வேறு அவதாரங்கள் எனக்குறிப்பிட்டதில் கமலின் எழுத்தாள,நாத்திக அவதாரங்களும் அடங்கும்.

"கிறித்துவமும்,இஸ்லாமும் இந்தியாவிற்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத 12ஆம் நூற்றாண்டில்,விஷ்ணுவும் சிவனும் தங்கள் பக்தர்கள் வாயிலாக மோதிக்கொண்ட தமிழகத்தில்...." என கமலின் கனமான narrationனுடன் படம் துவங்குகிறது.படம் முழுவதும் கமலின் வசனங்கள் அசத்தல்(எனது வோட்டு கமலின் இந்த எழுத்தாள அவதாரத்துக்குத்தான்).


படத்தின் கிராபிக்ஸ் இந்திய திரைப்படங்களின் தரத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது.அதற்காக MATRIX ரேஞ்சுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் சாரி...அதற்கும் இன்னும் தொலைவு(சற்று) இருக்கிறது.பட்த்தின் மிகமுக்கிய அம்சமான மேக்-அப் அருமையாக இருக்கிறது.பூவராகன்,பல்ராம் நாயுடு,ஜப்பானிய கமல்(சுத்தமக அடையாளம் தெரியாது) இவற்றின் மேக்-அப் உறுத்தாமல் சிறப்பாக வந்திருக்கின்றன.மோசமாக வந்திருப்பது வில்லன் கமல்.தொலைவுக் காட்சிகளில் அவ்வளவு நன்றாக இல்லாத புஷ் கமல், close up காட்சிகளில் மிரட்டலாக இருக்கிறார்.அமெரிக்க கமல் பேசும் வசனங்கள் யாவும் ஹாலிவுட் பாணியில் எழுதியிருப்பது புத்திசாலித்தனம்.அமெரிக்க கமலும்,ஜப்பானிய கமலும் மோதிக்கொள்ளும் ஒரு காட்சியில்

அமெரிக்கன்: You remember Hiroshima?

ஜப்பானியன்: you remember pearl harbour?

தசா அவதரத்தில் கலக்கலான அவதாரம் தெலுங்கு-தமிழ் பேசும் பல்ராம் நாயுடுதான்.தெலுங்கு காரர்களை ஒட்டு ஓட்டு என்று ஓட்டித் தள்ளியிருக்கிறார்(He speaks many languages,He speaks 5 languages in Telugu).அதேசமயம் "ஏன்யா,நான் தெலுங்கு,நான் தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ் கத்துகிட்டு தமிழ் பேசரேன்,தஞ்சாவூர்காரன் நீ என்கிட்ட இங்லீஷ்ல பேசற" என்று பீட்டர் தமிழர்களை ஒரு பிடி பிடிக்கிறார்.தலித்தின மக்களின் பிரதிநிதியாக வரும் பூவராகன் கேரக்க்டரும் அருமை.தெற்கத்திய ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் விதமும்,விஷயமும் பராட்டப் படவேண்டியவை.


இரண்டு மூன்று கமல்களாவது அந்தரத்தில் தொங்குகிறார்கள்.குறிப்பாக அந்த நெட்டைக் கமலும் அவதார் சிங்கும் படத்திற்கு வேகத்தடை.படம் நீளம் என்று யாரும் சொன்னால் இவர்கள் தலையில் கைவைக்கலாம்.முகுந்தா தவிர பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை(ரஹ்மான் இசையமைத்திருக்கலாமென்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவிலை)அதேபோல மல்லிகா ஷெராவத்தின் பாடலும் அநாவசியம்.மடிசார் கட்டிவரும் 12ஆம் நூற்றாண்டு அசினைவிட தாவணியில் வரும் அசின் சற்று மனதில் பதிகிறார்.அவ்வபோது சிரிக்க வைக்கிறார் கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார்(அசினை விட ஜெயப்பிரதா அழகாகத்தெரிகிறார் என்று சொன்னால் அசின் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு வருமோ?).Branded கமல்-கிரெஸி மோகன் வகை காமெடியும் படம்முழுவதும் அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. நாகேஷ் , K.R.விஜயா, ரேக்கா,பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.


கமல் தன் அப்பா பெயர் ராமசாமி நாயக்கன் என்கிறார்.படம் முழுவதும் நாத்திக கருத்துக்களை ஒளித்து வைத்திருக்கிறார்("மடம் ன்னா உள்ள கிரிமினல்கள் இருக்கக்கூடாதா?"- பல்ராம் நாயுடு).படத்தில் ஜெயலலிதாவும் வருகிறார்,கருணாநிதியும்(போலி) வருகிறார்.யாருடைய ஆட்சி காலத்தில் படம் வெளிவரும் என்ற நிச்சயமின்மை காரணமாக இருந்திருக்கலாம்.


இவ்வளவு கடினமான விஷயத்தை(10 roles concept) திட்டமிட்டு அதனை வரலாற்று நிகழ்வுடன் தொடர்பு படுத்தி எடுத்திருப்பது அபாரம்.கமலை திட்டவும் குற்றம் கண்டுபிடிக்கவும் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.ஆனால் படம் நன்றாக இல்லை என்று கமலைப் பிடிக்காதவர்களால் கூட சொல்லமுடியாது.


இவ்வளவு பெரிய விமர்சனத்தை படிக்க பொறுமை இல்லாமல் கடைசி வரிக்கு தாவியவர்களுக்கு: படம் அருமையாக இருக்கிறது .தியேட்டருக்குப் போய் பாருங்கள்.கமல் மற்றும் குழுவினருக்கு "சல்யூட்".

22 comments:

வந்தியத்தேவன் said...

ஜெயலலிதா வரும் காலம் சுனாமிகாலம் அந்த வேளையில் அவர் தான் ஆட்சியில் இருந்தார்.
எதற்காக ஹிமேசை வைத்து இசை அமைத்தார்கள். இசைஞானி, இசைப்புயல்கள் பிசியாக இருந்திருந்தால் யுவன் அல்லது ஹாரிஸ் ஜெயராஜை அணுகியிருக்கலாம். ஆனாலும் பின்னணி இசையில் தேவி ஸ்ரீ பிரசாத் அசத்தியுள்ளார்.

பரத் said...

//ஜெயலலிதா வரும் காலம் சுனாமிகாலம் அந்த வேளையில் அவர் தான் ஆட்சியில் இருந்தார்.//

தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

ஆம் பின்னணி இசை நன்றாக இருந்த்தது.குறிப்பிட மறந்து விட்டேன்.பல விஷயங்களைக் குறிப்பிடாதது போல தோன்றுகிறது.

Athisha said...

படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டிவிட்டீர்கள்

Unknown said...

படம் நல்லா இல்லைனா உன்ன தேடி பிடித்து உதைப்பேன் ok.

சின்னப் பையன் said...

//படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டிவிட்டீர்கள்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பரத் said...

அதிஷா,
:)
நன்றி அதிஷா

jaisankar jaganathan,

படம் நல்லா இருந்தா,என்னை தேடி பிடித்து பணம் எதுவும் கொடுக்க போறீங்களா?

போற போக்குல சொல்லிட்டு போறதுதான் :)))))

பரத் said...

ச்சின்னப் பையன்,

வாங்க சின்ன பையன்.

Jackiesekar said...

மிக அற்புதமான விமர்சனம்

Anonymous said...

தெளிவா, அழகா சொல்லியிருக்கீங்க !!

பரத் said...

jackiesekar,
சேவியர்,

நன்றிகள் _/\_

Gopalan Ramasubbu said...

Going to the movie tomorrow..Thanks for the review,Bharath :)

பரத் said...

Gopalan Ramasubbu,

படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் :)

Anonymous said...

கமர்ஷியலாக படம் எண்டர்டெயினிங்காக இருந்தாலும் எல்லாரும் ஆஹா ஓஹோ என்று புகழுமட்டும் இருக்காது என்பது தான் என் ஊகம், TOI, மற்றும் SIFY - விமர்சனங்கள் தான் திரைப்படத்தை நடுநிலமையான கண்ணோட்டத்தோடு பார்த்த படத்தின் குறைகளை சொல்ல முற்படுகிறது.. மற்றவை எல்லாம் பெரும்பாலும் கமலின் 4 மணிநேர மேக்கப் போடும் உழைப்பில் மயங்கி one-sided ஆக புகழ்வதாகவே தோன்றுகிறது..

நாத்திகம் பேசும் கமல் இதை விட கொடுமையான முறையில் முஸ்லீம் சுல்தான்களின் படையெடுப்பில் அழிந்த, கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை காட்டி இருக்கலாமே. அதை செய்யும் தைரியமும் துணிவும் நாத்திகம் பேசும் கமல் போன்றவர்களுக்கு பொதுவே கிடையாது..அவர்களின் நாத்திகமெல்லாம் ஹிந்துக்களுக்கும் ஹிந்துத்துவத்தையும் கிண்டல் செய்து கொண்டு தான்..ஏதோ நம்பியின் பாத்திரப்படைப்பு கதைக்கு மிகவும் தேவையானது என்பதுபோல் பேசி இருந்தார்கள்.. இதுவரை எந்த விமர்சனத்திலும் இந்த நிகழ்ச்சிகளுக்கும் கதைக்கும் எந்த தவிர்க்கமுடியாத தொடர்பும் உள்ளதாகக் கூறப்படவில்லை..இது வெறுமனே திணிக்கப்பட்டது..கமலஹாசன் என்ற நாத்திகனின் ஹிப்போகிரசியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றே தோன்றுகிறது.. மற்றவை படம் பார்த்தபின்.
-ஸ்ரீனி

Unknown said...

//நாத்திகம் பேசும் கமல் இதை விட கொடுமையான முறையில் முஸ்லீம் சுல்தான்களின் படையெடுப்பில் அழிந்த, கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை காட்டி இருக்கலாமே. அதை செய்யும் தைரியமும் துணிவும் நாத்திகம் பேசும் கமல் போன்றவர்களுக்கு பொதுவே கிடையாது..//

முற்றிலும் உண்மை ஸ்ரீனி
உங்களுடைய வார்த்தை

Unknown said...

//படம் நல்லா இருந்தா,என்னை தேடி பிடித்து பணம் எதுவும் கொடுக்க போறீங்களா? //

கண்டிப்பா. உங்களுக்கு இல்லாததா

Unknown said...

படம் நல்லா இல்லை. உன் மேல வழக்கா போட முடியும். enjoy தலைவா.

Gopalan Ramasubbu said...

//படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் :)//

கருத்துச்சொல்லும் அளவிற்கு படம் எனக்குப் பிடிக்கவில்லை பரத்..கமலிடம் ரொம்ப எதிர்பார்த்தேன்.இப்படி படம் எடுத்து சம்பாதிதால்தான "அன்பே சிவம்" போல படம் எடுக்க காசு சேர்க்க முடியும் என்று மனசை தேத்திக்க வேண்டியதுதான் :)

பரத் said...

//நாத்திகம் பேசும் கமல் இதை விட கொடுமையான முறையில் முஸ்லீம் சுல்தான்களின் படையெடுப்பில் அழிந்த, கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை காட்டி இருக்கலாமே. //
மருதநாயகம் அது தொடர்பான ஒருகதைதான் என்று நினைவு.மேலும் இது படைப்பளியின் தனிப்பட்ட உரிமை.படம் பார்க்காமலேயே முன்முடிவுகளுடன் கமல்மீது பாய்வது, அது கமல் என்பதாலேயேதானோ?

jaisankar jaganathan,
:))

பரத் said...

Gopalan Ramasubbu,
இதனை கமலின் தரமான படங்களின் வரிசையில் சேர்க்கமுடியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் நல்ல entertainer என்று தோன்றியது.Again perspective differs ;)
//இப்படி படம் எடுத்து சம்பாதிதால்தான "அன்பே சிவம்" போல படம் எடுக்க காசு சேர்க்க முடியும் என்று மனசை தேத்திக்க வேண்டியதுதான் :)
//
உண்மை.மர்மயோகி அப்படி ஒரு நல்ல படைப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Unknown said...

//படம் பார்க்காமலேயே முன்முடிவுகளுடன் கமல்மீது பாய்வது, அது கமல் என்பதாலேயேதானோ//

ஆமாம். கமலுக்கும் எனக்கும் பங்காளி பிரச்சனை

Unknown said...

//மருதநாயகம் அது தொடர்பான ஒருகதைதான் என்று நினைவு//

மருதநாயகம் வெள்ளையர்களை எதிர்த்த மதுரை கதை அது

Anonymous said...

இன்றைய இணைய உலகதில் இருக்கும் நீங்கள் படத்தை பற்றி விமர்சனம் செய்யலாம்! தவரில்லை. ஆனால் இப்படி செய்திருக்கலாமெ அப்படி செய்திருக்கலாமெ என்று ஒரு படைப்பாளியின் சுதந்திரதில் தலையிடுவது எந்த விதத்தில் சிறந்தது என்பதே என் தாழ்மையான கருத்து. இத்திரைப்படதில் செருகப்பட்டிருக்கும் chaos theory and butterfly effectபற்றி எந்த வலை தலமும் விமர்சனம் செய்யவில்லை. இரண்டரை வருட உழைப்பை ஒரு படைப்பாளனின் திறனை ஆராயமல் மேம்பொக்காக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம். தவறு இருந்தால் மன்னிக்கவும்.