Thursday, July 26, 2007

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ-எனது நிலைப்பாடுகள்





அய்யனார் தமது பதிவில் குறிப்பிடிருப்பது போல,ஓஷோவின் தியான முறைகள் யாவும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு உலக அளவில் பெரும் வெற்றி கண்டவை.கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓஷோ ஆசிரமதிற்கு வருவோரின் எண்ணிக்கை இருமடங்காகப் பெருகியுள்ளது.

ஆனால்...

ஓஷோ மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவரா..Medium தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டவரா என்பதை அறிய கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பதும் அவசியமாகிறது.


* ஓஷோ என்ற தனி நபருக்கு 93 Rolls-Royce கார்கள் சொந்தமாக இருந்திருக்கின்றன.அதுபோக விலைஉயர்ந்த கற்கள் பதிக்கப் பட்ட ladies watch களின் தொகுப்பும் உண்டு.
"My religion is the only religion." என்று பெருமையாகக் குறிப்பிடும் ஓஷோவிற்கு எளிமையை போதிக்காத எந்த மதமும் நிலைத்திருக்கமுடியாது என்பது புரியாமல் போனது ஏனோ?

(1985ல் immigration fraud காரணமாக கைதாகி கார்கள் ,சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு நாடுகடத்தப்பட்டார்.பார்க்க படம்)








* 20ம் நூற்றாண்டி அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரே ஒரு Bio-Terror attack ஓஷோ பக்தர்களால் நிகழ்த்தப்பட்டது.ஓஷோ அமெரிக்காவில் ஆசிரமமைத்துத் தங்கியிருந்தபோது,அவரது மடத்தில் இருந்த சன்யாசிகள் அருகில் இருந்த ஹோட்டல்களில் மித அபாய விஷத்தைக் கலந்துள்ளனர்.உணவை உண்ட 700க்கும் அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்(உயிரிழப்பில்லை).

இவை ஓஷோ சொல்லித்தான் செய்யப்பட்டது என்று சொல்லவில்லை.ஆனால் 'அடுத்த உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது தவறு'என்கிறஆதார தத்துவத்தைக் கூட சீடர்களுக்கு விளங்கவைக்காதது தவறில்லயா?


* அவரது பல நல்ல கருத்துக்களை விட்டு விட்டு செக்ஸ் பற்றியவற்றை மட்டும் பிடித்துக்கொண்டு "செக்ஸ் சாமியார்" என்று முத்திரை குத்துவது தவறு.அதே சமயம் "Open Sex" பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் ஆகாது இல்லயா?தியானம் மட்டும் செய்ய வருகிறார்கள் என்றால் அங்கு சேருவதற்கு கட்டாய HIV Test ஏனோ?அருகில் அமர்ந்து தியானம் செய்வதால் எய்ட்ஸ் பரவுமா?

துவக்கத்தில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்(அனுமதிக்கப்பட்ட அளவு) வாலியமும்,நைட்ரஸ் ஆக்ஸைடும் உட்கொள்ளத் துவங்கி பின் அதுவே எல்லை மீறிஅதற்கு அடிமையும் ஆனார்.பின்"Actually oxygen and nitrogen are basic elements of existence. They can be of much use, but for reasons the politicians have been against chemicals of all kinds, all drugs." என்று சொல்லுமளவிற்கு போனது இப்பதிவிற்கு சம்பந்தமில்லாதது என்பதால் விட்டு விடுவோம்.


இன்றைய நவயுக சாமியார்கள் யாவரும் ஓஷோவின் கருத்துக்களை பயன்படுத்துகிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.சிலர் அப்படிச் செய்வதில்லை.அதிருஷ்ட வசமாக ஓஷோவும் முதல் வகையினரிலேயே சேர்கிறார்.அதாவதுஓஷோ அதிக அளவில் சரதுஸ்திராவின் கருத்துக்களை ப்ரதிபலிக்கிறார்.பல இடங்களில் புத்தரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுகிறார்.அதனால் அவர்களை இவர் காப்பி அடிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?ஓஷோ சரதுஸ்ராவின் கருத்துக்களை காப்பியடிக்கிறார் என்பது அவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் மற்றவர்கள் அவரைக் காப்பியடிக்கிறார்கள் என்பதும்.

"No Saint comes to the world with a new teaching or philosophy;
he brings the same ancient wisdom"
என்பதுதான் உண்மை.
சரதுஸ்த்ரா,ஓஷோ உருவ ஒற்றுமை



ஓஷோ ஒரு சிறந்த சிந்தனாவாதி.அவரது புத்தகங்கள் போற்றப் படவேண்டியவை,தியான முறைகள் கொண்டாடப் பட வேண்டியவை.மற்றபடி அவர் சர்வ பலவீனங்களும் கொண்ட சாதாரணர்.என்னைக் கேட்டால் ரெண்டு அவுன்ஸ் எக்ஸ்ட்ரா சாதாரணர்.எல்லா சாமியார்களைப் போல அவரது வீழ்ச்சியும் தனிமனிதத் துதியை ஆதரிப்பதில் தான் துவங்கியது.

"Rich men's Guru" என்று செல்லமாக அழைக்கப்படும் ஓஷோ சமூகத்தில் அடைந்திருக்கும் இந்த பிம்பம் சரியானதா,தவறானதா என்று தெரியவில்லை.ஆனால் போதுமானது என்றே தோன்றுகிறது.

"OSHO. Never Born, Never Died.
Only Visited this Planet Earth between Dec 11 1931 – Jan 19 1990"

தலைமயிர் நீளமாக வைத்துக் கொண்டு,ஒரு கையில் சிகரட்டும் மறுகையில் கேர்ல் பிரண்டுமாக கொரேகான் பார்க்கில்(புனே) திரியும் வெளி நாட்டவரை வேண்டுமானால் இந்த சினிமாத்தனமான வசனங்கள் கவரலாம்.
நம்மள இல்லீங்கோ!!!!

Wednesday, July 04, 2007

கடவுளின் பள்ளத்தாக்கு



மலையேறுபவர்களின் சொர்கபுரி என்றே அழைக்கலாம் பூனாவை(Pune).கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மலைமீதமைந்த கோட்டைகள் பூனா,மும்பையைச் சுற்றி அமைந்துள்ளன.இவற்றில் சில சிவாஜியால் நிர்மாணிக்கப் பட்டவை,பல இவரால் கையகப்படுத்தப்பட்டவை.இவரது கொரில்லா யுத்தயுக்தியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இக்கோட்டைகளின் அமைப்பே.ஆண்டுமுழுவதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து போகிறார்கள் என்றாலும் மழைக்கால துவக்கத்திலும்,இறுதியிலும் கூட்டம் சற்று அதிகம்.காரணம் பரவசமூட்டும் பசுமையும்,மழைக்கால அருவிகளும்தான்.

கீழுள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது இப்படிபட்ட மலைக்கோட்டை ஒன்றைத்தான்.இதன் பெயர் ஷிவ்னேரி(சிவனேரி).புனேவிலிருந்து சுமார் 90Km தொலைவில் உள்ளது இம்மலை.மற்ற எந்த கோட்டைக்கும் இல்லாத பெருமை இந்தக் கோட்டைக்கு உண்டு.மராட்டிய மாவீரன் சத்ரபதி ஷிவாஜி பிறந்த இடம் இது என்பதாகும்.
ஷிவாஜியின் தந்தை ஷாகாஜிக்கு அரசியல் எதிரிகள் அதிகம்.அவர்களிடமிருந்து கர்பவதியான தன் மனைவியைக் காப்பாற்ற அவர் தேடிக்கண்டுபிடித்த கோட்டைதான் இது.இதனை நேரில் பார்த்தபோது ஷாகாஜின் தேர்வு எவ்வளவு சரியென்று புரிந்தது.எவரும் எளிதில் ஏறிவிட முடியாதபடி வழுக்குப்பாறைகளாலானது இந்த மலை.மலை உச்சியை அடைய இருக்கும் ஒரே வழிக்கு ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் ஏழு கோட்டை வாசல்கள்.
நானும் என் நண்பனும் மலை அடிவாரத்தை அடைந்து சில கிராமவாசிகளிடம் விசாரித்தோம்.அவர்கள் உச்சியை அடைய மற்றொரு வழி இருப்பதாகச்சொன்னார்கள்.மொகலாயர்கள் அல்லது பேஷ்வாக்களின் காலத்தில் போடப்பட்டிருக்கலாம்.அதாவது கரடுமுரடான காட்டுப்பாதையில் போய் 70% உயரத்தைத் தாண்டினால் 'சாக்கடு தண்டா' என்ற பாதை வரும் அதில் போய் பாறைகளை தாண்டிவிடலாம்.இது கோட்டையின் பின்புற வாயிலுக்குக் கூட்டிச்செல்லும்.மேலும் இவ்வழியில் போனால் தான் மலைக்குகைகளைப் பார்க்கலாம் என்றார்கள்(மொத்தம் 64 குககள் இருக்கிறதாம்).நாங்களும் ஒரு அசட்டு தைரியத்தில் ஏறத்துவங்கினோம்.சற்றே நெட்டுக்குத்தலாக இருந்ததால் விரைவில் சோர்ந்தோம்.இடையில் சில குகைகளைப் பார்த்தோம்.அந்தகுகைகளில்,அப்படியே திருச்சி மலைக்கோட்டையில் இருப்பதுபோன்று சதுர வடிவ கீழ்நோக்கிச்செல்லும் சுரங்கப்பாதைகள்.யார் இருந்தார்கள்,என்ன செய்தார்கள் விவரமில்லை.இவை சாத்வாகனர்கள் காலத்தில் புனையப்பட்டவை என்ற தகவல்கள் மட்டும் உள்ளன.

ஒருவழியாக முக்கால்வாசிமலையைத் தாண்டிவிட்டோம்(45நிமிடங்கள்).பின் பெரிய பெரிய பாறைகளாக இருந்தன.அதில் படிகள் செதுக்கியிருந்தார்கள்.படிகள் என்றால் ஒரு பாதத்தைக்கூட ஒருசமயத்தில் முழுமையாக வைக்கமுடியாத அளவுக்குக் குறுகியவை.அருகில் 'ழ' போல வளைந்த கம்பிகள்,எனக்கென்ன என்பதுபோல நின்றிருந்தன.இதுதான் சாக்கடு தண்டாவாம் !சாக்கடுதண்டா என்றால் என்ன என்று நண்பனிடம் வினவினேன்.குத்து மதிப்பாக சங்கிலிப் பாதை என்றான்.அடிமேல் அடிவைத்து உச்சியை அடைந்தோம்.பச்சைபசேலென்ற புல்வெளியும்,மெல்லிய தூறலும் எங்களை வரவேற்றன.நண்பன் உற்சாகத்தில்"சொர்க்கம் போல இருக்கிறது" என்று கூவினான்.சங்கிலிப்பாதையிலிருந்து நழுவியிருந்தால் அங்கதான் போயிருப்போம் என்றேன்.


இனி படங்கள்....
போகும் வழி











எஞ்சியிருக்கும் அரண்மனையின் சொச்ச மிச்சங்கள்
பிரதான அரண்மனையின் மாடம்



ஷிவாஜி ஜென்மஸ்தானம்
பதாமி நீர் தொட்டி



அம்பர்கானா தானிய செமிப்புக் கிடங்கு

கடேலாட்
கைதிகளை இங்கிருந்து கீழே தள்ளிவிட்டுக் மரணதண்டனையை நிறைவேற்றுவார்களாம்.அதளபாதாளம்..பிழைக்க வாய்ப்பே இல்லை



ஏழு கோட்டைக் கதவுகளில் ஒன்று
புகழ்பெற்ற அஷ்ட்ட வினாயகர் திருத்தலங்களில் ஒன்றான ஓஸர் விக்னேஷ்வர் திருக்கோயில்.இது சிவனேரியிலிருந்து 5 Km தொலைவில் உள்ளது.
உச்சியிலிருந்து காணக் கிடைக்கும் காட்சிகள்
(கண்டிப்பாக enlarge செய்து பாருங்கள்)