அழகு அந்நியாயத்திற்கு ரிலேடிவ் டெர்ம்.எனக்கு அழகாய்த்தோன்றும் ஒரு விஷயம் உங்களுக்கும் அப்படியே தோன்ற வெண்டிய அவசியமில்லை.அதே போல இது காலத்தைப் பொருத்தும் ரிலேடிவ்.எனக்கு ஒருசமயத்தில் அழகாய்த்தோன்றும் விஷயம் எல்லாசமயங்களிலும் அப்படியே தோன்றவெண்டியதுமில்லை.எப்போதும் ரம்மியமாய்,அழகாய்த்தோன்றும் அதிகாலை வானம் பரீட்சை நாட்களில் மட்டும் கொடூரமாய்த்தோன்றுவது ஒரு உதாரணம்.
ஆக universal அழகு என்று எதுவுமில்லை.இடம்,பொருள்,ஏவல் என எல்லாம் சரியாக அமையும் பொழுது நம் மனதுக்கு பிடித்துப் போகிற விஷயம் தான் இந்த "அழகு" என்று தோன்றுகிறது.எனக்குப் பிடித்த,நான் அழகு எனக்கருதுகிற சில விஷயங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.
தேர்
எங்கள் கிராமத்துத் திருவிழாவில் ,வடம் பிடித்து இழுக்காமல் ஆட்களால் சுமந்து வரப்படும் பனையுயர தேரும் அப்போது ஊரெங்கும் பரவும் மரிக்கொழுந்து வாசமும்.
மழை
பூனேயில் பெய்கிற ஆளை அடிக்காத ஜூன் மாதத்து மழை.ஊர் முழுவதையும் நனைத்து பச்சையாக்கியபின் ,மெதுவாக மனதுக்குள்ளும் மழை பெய்யத்துவங்கும் அந்த தருணங்கள்.
வீடு
"உலகத்துல இத விட அழகான இடம் இருக்கான்னு தெரியல,தெரிஞ்சுகர ஆசையும் இல்ல" என்று காக்க காக்க ஜோதிகா சொல்வது போல அவரவர்க்கு அவரவர் வீடு அழகு.எனக்கும் எங்கள் வீடு...
அமைதியான பெண்கள்
இது ஆக்ஸிமோரன்(Oxymoron) போல தோன்றினாலும் அபூர்வமாக சில சாந்தமான பெண்களைப் பார்க்க நேர்ந்ததுண்டு :)
புத்தகக்கடை
என்ன வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும்,வழியில் புத்தகக் கடையைப் பார்த்தால் உள்ளே புகுந்து விடுவேன்.வஞ்சனையின்றி எல்லா புத்தகங்களையும் மேய்ந்து விட்டு இருப்பதிலேயே ஒல்லியாக ஒரு புத்தகத்தையோ சில சமயங்களில் வெறுங்கையுடனோ வந்து விடுவேன்.புத்தகக் கடைகள் எப்போதும் அழகானவை,கவர்ச்சியானவை.
என்னை விளையாட்டுக்கு சேர்த்துக்கொண்ட ப்ரசன்னாவிற்கு நன்றி.இந்தப் பதிவைப் படிக்கும் அனைவரையும் சங்கிலியைத்தொடருமாறு பணிக்கிறேன்.
2 comments:
//அமைதியான பெண்கள்
இது ஆக்ஸிமோரன்(Oxymoron) போல தோன்றினாலும் அபூர்வமாக சில சாந்தமான பெண்களைப் பார்க்க நேர்ந்ததுண்டு :)//
அப்ப மத்த பெண்களெல்லாம்(அமைதியாக இல்லாத பெண்கள்) அழகற்றவர்கள்னு சொல்றீங்க..இருந்தாலும் உங்க தைரியத்தைப் பாராட்டியே ஆகனும் .:P.
நல்ல பதிவு பரத். :)
Gops,
அய்யோ...அழகற்றவர்கள்னு எப்போ சொன்னேன்.நல்லா கோத்துவிட்றீங்களே.நான் ஆடிக்கு ஒரு பதிவும் அமாவசைக்கு ஒரு பதிவுமா போட்டு கடையை நடத்திகிட்டு இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா! :))
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கோபாலன்
Post a Comment