Saturday, January 06, 2007

படித்ததில் பிடித்தது(3)

பொதுவாக, எதுவும் எழுதத் தோன்றாதபோது(வராதபோது) மற்றவர்களின் கவிதையையோ,கதையையோ போட்டு ஒப்பேற்றுவது வழக்கம்.என் 75% பதிவுகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.அந்த வரிசையில் சுஜாதா சொன்ன 'நபகோவின்' சிறுகதை ஒன்றையும் கல்யாண்ஜியின் கவிதை ஒன்றையும் இப்பதிவில் தருகிறேன்.

இனி...

நாபகோவ்(Nabakov) 'லோலிடா' எழுதிப் பெயர் அடைந்தவர்.கொஞ்சம் ஆபாசமான விஷயத்தை மிக அருமையான வசன நடையில் எழுதித் தப்பித்தவர்.இவரது சிறுகதை ஒன்று என் ஞாபகத்திலிருந்து சொல்கிறேன்:-

ஒரு அப்பா,ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்.ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது!

பெற்றோர்களுக்கு ஒருதினம் ஆஸ்பத்திரியிலிருந்து போன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும் உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்.அதற்குள் என்ன நேர்ந்து விடுமோ என்று கவலைகடலில் இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது:-

டெலிபோன் மணி அடிக்கிறது.பதற்றத்துடன் பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

"ஹென்றி இருக்கிறானா?" என்கிறது ஒரு பெண்குரல்.

"ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை,தப்பு நம்பர்" என்று வைத்து விடுகிறார்.

மறுபடி சில நிமிஷம் கழித்து டெலிபோன் மணி அடிக்கிறது.

"ஹென்றி இருக்கிறானா" அதே பெண்.

"மிஸ்,உனக்கு என்ன நம்பர் வேண்டும்?

"5365849"

"என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச்சுழற்றுகிறாய் போலிருக்கிறது"

"ரொம்ப தாங்க்ஸ்" என்று அந்தப் பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒருவரிதான் இருக்கிறது.

சிலநிமிஷ்ம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நபகோவின் புத்திசாலித்தனம்! புரிகிறதா?

- சுஜாதா,1966


************

நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்குபோல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக்கொண்டது முற்றிலும்
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்துவிட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக் குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.

-கல்யாண்ஜி,அந்நியமற்ற நதி


அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

19 comments:

கார்மேகராஜா said...

முதல் கதையின் அர்த்தம் சரியாக விளங்கவில்லையே!

Gopalan Ramasubbu said...

//நபகோவின் புத்திசாலித்தனம்! புரிகிறதா?//

புரியலையே :(

//2006 -ல் தமிழ்வலைப்பதிவுகளில் அதிகம் போணியான தலைப்புகள் இவைதான்.சும்மா ஒரு பரபரப்புக்காக போட்டிருக்கிறேன்.//

எதுக்கு ராசா இந்த வம்பு வேலையெல்லாம்? நல்லாதான இருந்தீங்கோ? என்ன ஆச்சு திடீர்னு? :)

எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

மாசிலா said...

எங்களை புத்திசாலிகள் என் நினைக்கும் உங்கள் நடத்தையை வன்மையுடன் கண்டிக்கிறேன்.
"ஒங்க 0-9 கத அர்த்தம் வெளங்கல சாமியோவ்!"

Anonymous said...

கதை கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கிறது. இதை எல்லாரும் படிக்கனும்கிறதுக்காக பார்ப்பன நாய்களை திட்டத்தான் வேணுமா?

பரத் said...

கார்மேகராஜா,கோபாலன்,

கொஞ்சம் wait பண்ணி பார்ப்போம்,யாருக்காவது புரிந்திருக்கிறதா என

கோபலன்,
ஹீ ஹீ...ஒரு விளம்பரம்...

மாசிலா,
இக்கதையின் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் பதிந்திருக்கிறேன் என்று எண்ணும் உங்கள் மனப்போக்கை நான் வன்மையுடன் கண்டிக்கிறேன். :))

கதிர் said...

அதான பார்த்தேன்! தலைப்பு ஒரு டைப்பா இருக்குதேன்னு. உள்ளடக்கத்தில் இல்லாத ஒன்று தலைப்பில் மட்டும் வைக்கும் போக்கை வன்மையாக கண்னடிக்கிறேன்.

ஒண்ணுமே புரியலிங்க பரத்,
கவிதைகளே புரிய மாட்டேங்குது. இதுல இது வேறயா?

நீங்களே சொல்லிடுங்க

அனுசுயா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் பரத்.

புத்தாண்டுல ஒரு முடிவோடதான் தலைப்பு வெச்சிருக்கீங்க. எதுக்கு வம்பு விலைக்கு வாங்கறீங்க. அப்புறம் கதைக்கு வருவோம் எனக்கு புரிஞ்சவரைக்கும் கடைசி போன் அவங்க பையன பத்தியதாயிருக்கு வாய்ப்பு அதிகம் ஏன்னா முதல் ரெண்டு போனுக்கும் தெளிவா விளக்கம் சொல்லிட்டாங்க அதனால அடுத்தது ராங் நம்பராயிருக்க வாய்ப்பு இல்ல.
ஏதோ என்னால முடிஞ்ச அளவு குழப்பிட்டேன். யாராவது கொஞ்சம் தெளிவு படுத்துங்க. :))

Anonymous said...

signs and symbols by vladimir nobakov. பற்றிச் சொல்கிறீர்கள்.

கதையின் கருத்தே அது தான். கடைசி வரியில் சொல்லப்படும் இந்த டெலிபோன் மணி அடிப்பது மகனின் மரணச் செய்தியோ என்ற கேள்வியை எழுப்பும்.

அல்லது மகனின் மரணம் பற்றிச் சொல்ல விழையும் நர்ஸ் பெற்றோரின் நிலையை அறிய இந்த விளையாட்டை விளையாடியிருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது.

-ஒரு பார்ப்பான நாய்.

பரத் said...

தம்பி,
தலைப்பு தப்புதான் :(
அனுசுயவும்,அனானியும் சரியாகவே விளக்கியிருக்காங்க.

அனுசுயா,
//எதுக்கு வம்பு விலைக்கு வாங்கறீங்க//
விதியாசமா முயற்சி பண்ணலாமேன்னு நெனச்சு...

நீங்க கொழப்பல்ல..சரிதான்.


அனானி,
கலக்கிடீங்க...
//signs and symbols by vladimir nobakov. பற்றிச் சொல்கிறீர்கள்//
தகவலுக்கு மிக்க நன்றி

இக்கதையின் ஆங்கில மூலத்தை படிக்க
http://www.angelynngrant.com/nabokov.html இங்கு செல்லுங்கள்

கேட்க்க இங்கு செல்லுங்கள்
http://users.adelphia.net/~scoot99/VladimirNabokov-SignsandSymbols.mp3

கடைசி போன் கால் என்னவாக இருக்கும் என்று பலவாறாக யோசிக்க வைப்பதுதான் நபகோவின் புத்திசாலித்தனம்(அப்படித்தான் நெனைக்கிறேன்)

அமலசிங் said...

நல்ல நகைச்சுவை. அதே நேரத்தில் நாங்கள் செய்யும் சமூக சீர்திருத்தப்பணிகளை நீர்மைப்படுத்தவும் செய்கிறது.

Syam said...

Barath,

Wish you a Wonderful New Year!!!

Syam said...

தலைப்ப பார்த்த உடனே ஒரு நிமிசம் கிறுகிறுத்து போச்சு...என்னமோ போங்க....அந்த டெலிபோன் மேட்டர்ல என்ன ஆச்சுனு சொல்லாம விட்டுடீங்களே :-)

கோபிநாத் said...

வணக்கம் பரத்
கவிதை அருமையாருக்கு...கதையும் அருமை தான்.

\\பொதுவாக, எதுவும் எழுதத் தோன்றாதபோது(வராதபோது) மற்றவர்களின் கவிதையையோ,கதையையோ போட்டு ஒப்பேற்றுவது வழக்கம்.என் 75% பதிவுகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.\\

அடா...நானும் தான்..

Anonymous said...

If possible try ramesh-prem's sol endroru sol.

பரத் said...

Syam,
Thanks and wish you the same
//தலைப்ப பார்த்த உடனே ஒரு நிமிசம் கிறுகிறுத்து போச்சு//
:))

Gopi,
Thanks...
ada neengalumaa!!

Anonymous,
Will try

Princess said...

அழகான கதை மற்றும் கவிதை.

Ms Congeniality said...

Enakum andha telephone conv puriyala..

ashok said...

wats happening barath?

பரத் said...

Princess
Thanks for visiting my blog

MS.Congeniality
comments padichu paarunga

Ashok,
Just a short Break.
Now Im back :)