
நான் தங்கியிருக்கும் ஆக்ஸ்ஃபோர்ட்(Oxford) நகரில் ஜி.யு.போப்பின் கல்லறை இருக்கிறது என்று அறிந்தபோது அதனைப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஜி.யு.போப் என்ன செய்தார் என்பது தெரியாதவர்களுக்குக்கூட, அவர் தன் கல்லறை மீது "ஒரு தமிழ் மாணவன்" என்று எழுதச்சொன்னது தெரிந்திருக்கும். சமயப்பணி செய்வதற்காக 1841 வாக்கில் இந்தியா வந்து சேர்ந்த போது, ஜார்ஜ் க்ளோ போப்பின் வயது 17. வரும்போதே ஓரளவிற்கு தமிழ் பயின்று வந்திருந்தாலும் சென்னையின் நடைமுறைத் தமிழைக் கேட்டு அவருக்குப் பெரும் வியப்பு ஏற்பட்டது. தமிழை முழுமையாகக் கற்க வேண்டி அப்போது தமிழகத்திலிருந்த பெரும் பண்டிதர்களிடம் சென்று தமிழ் பயின்றார். தமிழ் மொழியின் தனித்தன்மையும்,ஆழமும் அதன்மீது பெரும் காதலை அவருக்கு ஏற்படுத்தின. அதன் பிறகு நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் தமிழகத்தில் அவர் தங்கியிருந்து
அதுவரை திருக்குறளின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலதில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தன. ஜி.யு போப் திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். Sacred Kural என்ற அவரது மொழியாக்கம் மிகச்சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. இது தவிர நாலடியார்(மொழிபெயர்ப்பு), தமிழ்-ஆங்கில அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.யு.போப் எழுதிய இலக்கண நூல்கள் தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்று பல பதிப்புகள் கண்டவை.
ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப் மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது. தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், " நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும்" என்று வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு போப் தனது முதுமையினைக் குறிப்பிட்டு, அது நீண்ட நெடிய பணி அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று நம்பிக்கையில்லை எனக் கூறியிருக்கிறார். அதற்கு போப்பின் நண்பர்" ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்டகாலம் வாழ்வதற்குண்டான வழி.நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்".அதன் பின்னர் மொழிபெயர்ப்பினை துவக்கிய போப் தனது எண்பதாவது வயதில் இப்பணியினை முடித்திருக்கிறார்.தனது 80ஆவது பிறந்தநாளன்று எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அதன்பின் ஜி.யு.போப் 1908-ல் தனது 88ஆவது வயதில் மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் என்றும் தனது கல்லறையின் மீது"A Student of Tamil" என்று செதுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒரு குளிர்கால மாலையில் செயின்ட் செபல்ச்ர் கல்லறைத் தோட்டத்தை அடைந்த போது வெளிச்சம் குறையத் துவங்கியிருந்தது. நல்ல வேளையாக கதவுகள் பூட்டியிருக்கவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் இக்கல்லறையை பார்வையிட வந்த ஒரு தமிழ் ஆர்வலரின் குறிப்புகள் தமிழ்நேஷன் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. கல்லறைக்கு செல்லும் வழி, அடையாளங்கள் ஆகியவை இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. வால்டன் தெருவைப்பற்றிய அடையாளங்கள் சற்று மாறியிருந்தாலும், கல்லறைத்தோட்டத்தில் போப்பின் கல்லறையை அடையாளம் காண இவை பேருதவி செய்தன. இக்குறிப்புகளின் உதவி இன்றி 4000 கல்லறைகளிலிருந்து போப்பின் கல்லறையை தேடிக்கண்டுபிடிப்பது அந்த மாலை வேளையில் சத்தியமற்றதாய் இருந்திருக்கும். நான் எதிர் பார்த்த அளவுக்கு புதர்கள் மண்டியிருக்கவில்லை. ஆனால் பாழடைந்த நிலையில் தான் இருக்கிறது.போப்பின் கல்லறைமீது கீழ்கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இக்கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிரபலமானவர்களின் பட்டியலில் கூட போப்பின் பெயர் இல்லாதது வருத்தமளிக்கிறது. ஆமாம், வெள்ளைக்காரர்களுக்கு என்ன வந்தது! கொண்டாட வேண்டியவர்கள் நாம்தானே? தமிழகத்தின் உயர்ந்த விருதுகள் எதுவும் ஜி.யு.போப்பிற்கு வழங்கப்பட்டதாக செய்தி இல்லை. 1968 உலகத்தமிழ் மாநாட்டில் நினைவுகூறப்பட்டிருக்கிறார்.அப்போது சிலை எழுப்பப்பட்டிருக்கிறது.வாழ்நாள் சாதனைக்காக தங்கப்பதக்கம் ஆங்கில அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அவரது இறுதி விருப்பத்தையாவது நிறைவேற்ற அரசு ஆவன செய்திருக்கலாம்.தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப், உ.வெ.சாமினாதனின் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர். உ.வெ.சா-வையே மறந்துவிட்ட நிலையில் ஜி.யு.போப்பிற்கு இடமில்லைதான்.கல்லறையை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். கல்லறையை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டபின் அங்கிருந்து நடக்கத்துவங்கினேன். கல்லறையை எழுப்பி நூறுவருடங்கள் ஆகிவிட்டநிலையில் அதன் மீதான எழுத்துக்கள் அழியத் துவங்கிவிட்டன. இன்னும் இருபது முப்பது வருடங்களில் இந்த எழுத்துக்கள் முழுமையாக அழிந்துவிடலாம்.அதுசரி, இன்னும் முப்பதாண்டுகள் கழித்து ஜி.யு.போப்பின் கல்லறையைத் தேடி யார் இங்கு வரப்போகிறார்கள்?

எனக்கு இனிப்புப் பண்டங்கள் என்றால் பிடிக்காது(ஒரு சிலவற்றைத் தவிர).அலுவலகத்தில் எங்கள் டீமில் பெங்காலி, மராட்டி, குஜராத்தி என பலமாநிலத்தவரும் உண்டு. ஒவ்வொருமுறை ஊருக்கு போய்விட்டு வரும்போது அவரவர் அந்தந்த மாநிலத்தின் புகழ் பெற்ற இனிப்புவகையினை வாங்கிவரவேண்டும். அந்தமதிரி இனிப்புகள் வரும் நாட்களில் "conference room"ல் அடிதடியே நடக்கும்.நான் இவற்றை பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். அதாவது மேசை, மார்க்கர் பேனா போல இனிப்பும் ஒரு வஸ்த்து அவ்வளவே. இனிப்பு பிரியரான என் பெங்காலி மேனேஜருக்கு என்னைப்பார்ர்து ஒரே ஆச்சரியம், என்னைத் தனியே அழைத்து 'இளம் வயதில் சர்ர்க்கரை நோய்வருவது இப்போதெல்லாம் சகஜம் தான். நன் உனக்கு "Sugar free "இனிப்புகள் வாங்கிவருகிறேன் என்றார்."யோவ் எனக்கு சர்க்கரை நோயெல்லாம் இல்லை" என்று சொன்னால் நம்ப மறுத்தார்கள். இப்படி இருக்கையில் ஒருநாள் "டீம் லஞ்சிற்கு" இங்கிருக்கும் ஒரு பிரபல உணவகத்திற்கு சென்றிருந்தோம். அங்கு மால்புவா என்ற ஒரு இனிப்புவகையை ஆர்டர் செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட நம்மவூர் அப்பம் போன்ற நிறத்தில் அதேசமயம் அவ்வளவு தடிமனாக இல்லாமல் மெல்லிய இழைபோல இருந்தது. ஜீராவில்ருந்து எடுத்து வைத்திருந்தார்கள். அருகே ஒருகின்ணத்தில் ரப்ரி என்று சொல்லப்படும் வெள்ளைநிற திரவமும் இருந்தது.பாசந்தியை மிதக்கவிடும் பால்கலந்த ஜீரா(?) போல இருந்தது. சாப்பிட ஆவலைத் தூண்டியதால் ஒரு விள்ளலை எடுத்து அந்த ரப்ரியில் முக்கி மெதுவாக வாயில் போட்டேன். ஆஹா!! மால்புவா ரப்ரியுடன் சேர்ந்து தொண்டையில் வழுக்கிக் கொண்டு போனபோது ஒரு பரவச நிலையை அடைந்தேன். சொர்க்கம் அருகில் தட்டுப்படுவது போன்ற ஒரு உணர்வு. இப்படி ஒரு சுவையான ஒரு பண்டத்தினை என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதே இல்லை விசாரித்ததில் இதன் பூர்வீகம் மேற்கு வங்கம் என அறிந்தேன். ரசகுல்லாவும் குலப் ஜாமுனும் இதன் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. அதன் பிறகு அந்த உணவகத்திற்கு அடிக்கடி செல்லத் துவங்கியுள்ளேன். இங்கு மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டால் எனது உள்ளாடை வரை கழற்றிக் கொடுக்க வேண்டும்(Costly) என்பதால் டீஜென்டாக மால்புவா மட்டும் சாப்பிட்டுவிட்டு அகன்றுவிடுவேன். இந்த உணவகத்தில் நடிகர் ஓம் புரி மற்றும் பாடகி ஆஷா போஸ்லே பொன்ற பிரபலங்களைச் சந்திது ஆட்டொகிராஃப் பெற்றது உபரி சந்தொஷம். 






Director :
Director :Navdeep Singh

