Saturday, December 01, 2012
"தலாஷ்" - ஒரு பார்வை (Spoiler இன்றி ரத்தமின்றி)
கமல் மற்றும் அமிர் கான் படங்களை வெளியான முதல் சில தினங்களுக்குள் பார்ப்பதை வழக்கமாக்கி சில காலம் ஆகிறது. படம் நன்றாக இல்லையென்றாலும் அதை நாமே பார்த்துதான் முடிவு செய்யவேண்டும். இல்லையெனில் இணைய உலாவரும்போது விமர்சங்கள் கண்ணில்பட்டு, முன்தீர்மானங்களுடன் படம் பார்க்க நேரிடும். ஆக, நாம் முதலில் படத்தை பார்த்துவிட்டு மற்றவர்களுக்குத் தீர்மானங்களை வழங்கலாம் :)
* தலாஷை எந்தஅளவுக்கு இருண்மை(Noir)வகைத்திரைப்படமாக வகைப்படுத்தலாமோ அதே அளவுக்கு எமோஷனல் ட்ராமாவாகவும் வகைப்படுத்தலாம்.
* தலாஷ் அதன் சஸ்பென்சால் அல்ல, நடிகர்களின் தேர்ந்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறது.
* மனோரமா சிக்ஸ் ஃபீட் அன்டர்,ஷாங்காய் போன்ற மெதுவாகச் செல்லும் த்ரில்லர் பட்ங்கள் பிடித்தவர்களுக்கு தலாஷும் பிடிக்கும்.
* க்ளைமாக்ஸ் திருப்பம் குறித்து புகாரில்லை என்றாலும் அதை இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பாக சொல்லியிருக்கலாம். முடிந்தால் Lays வாங்கிச்செல்லவும்.
* அமிர்கான், நவாஸுதின் சித்திக், கரீனா கபூர், ராணிமுகர்ஜி ஆகியோர் இதே வரிசையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
* நடந்து முடிந்த அசம்பாவிதம் ஒன்றை எப்படியெல்லாம் தடுத்திருக்கலாம் என மனதில் ஓட்டிப்பார்க்கும் காட்சி ஃபரானோ, ஸோயாவோ, ஆமிரோ இல்லை ரீமாவோ யாருடைய உருவாக்கமாக இருந்தாலும் அவருக்கு பாராட்டுக்கள்.
* 'பார்த்த ஞாபகம் இல்லையோ'வை நினைவுபடுத்தும் 'முஸ்கானே ஜூட்டீ ஹை' பாடலும், 'ஜீலே ஸரா'வும் இன்னும் கொஞ்ச நாட்களுக்குக் ஒலித்துக்கொண்டிருக்கும்.(இசை:சம்பத்)
* என்னளவில், தலாஷ் ஆகா ஓகோவெல்லாம் இல்லையென்றாலும் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம், அமிர்கானுக்காகவாவது...
Saturday, July 02, 2011
டெல்லி பெல்லி சில்லி!!
டெல்லி பெல்லி ஒரு திராபை. ஆமிர்கான் பேனராயிற்றே என்று நம்ம்பி போனால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைகிறார், அதுவும் 90 நிமிடங்களும் வைகிறார்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக திரையில் காட்டப்படும் அசிங்கங்களால் நகைச்சுவையுணர்வைத் தூண்டமுடியாது என்ற அடிப்படை, கானுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். படத்தில் கெட்டவார்த்தைகள் போக மீதமுள்ள வசனங்களை ஒரு பஸ்டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம்(க்ளிஷெ..க்ளிஷே).கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை, அது இல்லாமலேயே துரத்தல் -ஆள்மாறாட்ட வகை படங்களை சிறப்பாக எடுக்கமுடியும்.ஆனால்,ஆயத்தகாட்சிகள் முடிந்து சுவாரசியம் தொடங்கும்போது படம் முடிந்துவிடுகிறது. படத்தில் வரும் "ஆய்" காட்சிகள் சிரிப்புக்குபதில் அருவெறுப்பைத்தான் தருகின்றன(இந்த சமயத்தில், பேசும் படத்தில் கமல் "ஆய்" காமெடியை 'கையாண்ட' விதத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லை ;) )
எல்லா வாக்கியங்களையும் கெட்ட வார்த்தைகளுடன் துவங்கி முடிக்கும் நிறைய வட இந்திய இளைஞர்களை சந்த்திருக்கிறேன், அவர்கள் இந்தப்படத்தைக் கொண்டாடப்போவது உறுதி.
Shit happens,,,,,Oh yeah!!
Saturday, March 27, 2010
அங்காடித் தெரு

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களின் விலை சொல்லும் சிறுமி, ஹோட்டலில் தண்ணீர் வைக்கும் சிறுவன், சிக்னலில் டிவி கவர் வாங்கசொல்லி நச்சரிக்கும் சிறுவன் இவர்களைப்பார்க்கும் போதெல்லாம் , ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று தோன்றும். வாழ சரியான வாய்ப்புகள் வழங்கப்படாத இவர்களின் எதிர்காலம் என்ன என்ற அச்சமும், குற்றவுணர்வும் தோன்றும். அதுபோன்ற சமயங்களில் சட்டென்று கவனத்தைக் கலைத்துக் கொண்டு சொந்தவேலைகளில் மூழ்கிப்போவேன்(வோம்). இவர்களின் வாழ்க்கையை வலியுடன் திரையில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார் வசந்தபாலன். குறைகளென்று தேடிச்சொல்ல நிறைய இருந்தாலும், மிகச்சிறந்த படங்களின் வரிசையில் சந்தேகத்திற்கிடமின்றி இடம் பிடிக்கிறது ’அங்காடித்தெரு’. படம் பற்றிய எண்ணங்கள் மனதை அலைக்கழிப்பதால் “கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்” என்பதை மட்டும் சொல்லி பதிவை முடிக்கிறேன்.
Sunday, March 21, 2010
Love Sex Aur Dhokha(no spoilers)

கொஞ்ச நாட்களுக்கு முன்பு “Paranormal Activity” என்று ஒரு படம் பார்த்தேன். நான் பார்த்த பேய்ப்படங்களில் மிகச்சிறந்தது என அப்படத்தை சொல்லலாம்; சிறந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிவந்திருக்கும் பேய்படங்களின் தரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. ஏனென்றால் பயம் என்பது காதல், காமம், நகைச்சுவை போலவே ஒரு உணர்வு. அதீத ஒப்பனையாலோ, எதிர்பாராத சமயத்தில் எழுப்பப்படும் உரத்த ஒலியினாலோ பயம் வருவதில்லை.அது வெறும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும். மாறாக, இந்தப் படம் ஊசியிலுள்ள மருந்தை உடம்பில் ஏற்றுவதைப்போல பார்வையாளனுக்குள் மெதுவாக பயத்தை ஏற்றுவதாக இருந்தது. இதற்கு அடிப்படையாக அமைவது video footage உத்தி. அதாவது படம் முழுமையையுமே ஒரு கதாபாத்திரம் ஹேண்டி கேமில்(Handy cam) எடுத்த காட்சிகளின் கோர்வையாகக் காட்டுவது. இது பார்வையாளனுக்கு முதலில் தான் சினிமா பார்க்கிறோம் என்ற எண்ணத்தைக் குறைக்கும்; சகஜ நிலையை ஏற்படுத்தும். பின் இயக்குனர் சொல்ல நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் , மங்கூஸ் மட்டையின் மைய்யத்தில் பட்ட பந்துபோல சிக்ஸர்தான். இந்த வீடியோஃபூட்டேஜ் உத்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல்(முழுநீள)ப்படம் 'Love Sex Aur Dhokha' (விருமாண்டியின் முதல் பத்து நிமிடங்கள் நினைவிருக்கலாம்).
திபாகர் பானர்ஜியின் முதல் இரண்டு படங்களைப்போலவே(Khosla ka Ghosla, Oye Lucky! Lucky Oye!), இதுவும் அசலான படைப்பு. முறையே காதல்,காமம் மற்றும் துரோகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மூன்று சிறுகதைகளை மூன்று பகுதிகளாக எடுத்திருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் இம்மூன்று அம்சங்களும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்திருப்பது சிறப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் , கேமரா என்ற உபகரணம் எடுத்திருக்கும் விஸ்வரூபமும், அதனால் நாம் ப்ரைவஸி இழந்து அம்மணமாக்கப்பட்டிருப்பதும் உணர்த்தப்படுகிறது. எனினும், இவை அம்பலப்படுத்தும் உண்மைகளும் முக்கியமானவையே. குறிப்பாக நாம் ’நித்யானந்தமாக’ இருக்கும் இந்தசமயத்தில், இப்படத்தை நன்கு தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது.
படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் இவர்களைவிடவும் அதிகம் பாராட்டப்படவேண்டியவர்கள் இப்படத்தின் நடிகர்களே. ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான எந்த நடிகரையும் இந்த படத்தில் நடிக்கவைக்க முடியாது. ஆக, எல்லாரும் முதல்முறை நடிகர்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த எல்லாரும் கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாமல், இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் குறைகளென்று பார்த்தால், ஆங்காங்கே தலை தூக்கும் பாலிவுட்தனமான வசனங்கள், அவசரகதியில் எடுக்கப்பட்டது போன்ற உணர்வைத்தரும் கடைசி கதை இவற்றை சொல்லலாம். மற்றபடி இது மிக புத்திசாலித்தனமான,தைரியமான படம் என்பதை பல இடங்களில் உணர வைக்கிறார் இயக்குனர். முதல் கதையில் எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்த்தப்படும் வன்முறை இதற்கு ஒரு உதாரணம். மூன்றாம் தர இயக்குனர்களிடம் சிக்கி சீரழிவதற்குமுன் இந்தப்படத்தைத் தமிழில் யாராவது எடுக்கலாம்.
3.5/5
Wednesday, March 17, 2010
Crazy Heart - திரைப் பார்வை

’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்
ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.
இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blake என்ற (57 வயது) குடிகார பாடகன்(Country Singer) கதாபாத்திரம். ஒரு காலத்தில் புகழுடன் இருந்து, பின்பு நொடித்துப் போய், தெருவோர பார்களில் பாடிக்கொண்டிருப்பவர். இவருடன் இணைந்து முன்பு பாடிக்கொண்டிருந்த டாமி, இப்போது பெரிய நட்சத்திரம். திருமண வாழ்வில் தொடர் தோல்விகள், இசை உலகில் வீழ்ச்சி, தீராத குடிப்பழக்கம் என அழுகிக்கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை. இந்நிலையில், பத்திரிக்கைக்காக தன்னை பேட்டி காண வரும் ஜீன் என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். ஜீனும் அவளது ஐந்து வயது மகனும் அவரது வாழ்வில் நம்பிக்கைகான ஒளியைத் தருகிறார்கள். இவர்களை பற்றுக்கொடியாகக் கொண்டு எப்படியாவது மீண்டுவரத் துடிக்கிறார். பெரும்பாலும் ஊகித்துவிடக் கூடிய தட்டையான கதையமைப்பு. எனினும்,இந்தப் படத்தை முக்கியமான படங்களின் வரிசையில் சேர்ப்பது ஜெஃப் ப்ரிட்ஜஸின் நடிப்பும், மென்மையான இசையும் தான்.
ப்ரிட்ஜஸின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்(திரை ஆளுமை!) அலாதியானது. நடை, உடை, கையசைவு, சிறு செருமல், சோர்வு என நுணுக்கமான விவரங்களுக்கும் முக்கியதுவம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தோல்வியுற்ற பாடகனை கண்முன் கொண்டுவருகிறார். விஸ்கியில் தோய்ந்த குரலில்அவர் பாடல்களைப் பாடும் போது ஜெஃப் ப்ரிட்ஜஸ் என்ற நடிகன் முழுமையாக மறைந்து Bad Blake என்ற பாடகன் உருக்கொள்கிறான். இதை விட ஒரு நடிகனுக்கு மகத்தான வெற்றி வேறென்ன இருக்க முடியும்?
இதற்கும் 'சென்ட் ஆஃப் அ வுமன்' படத்தில் அல்பசீனோவுக்கு
கிடைத்தது போல ஆளுமையை விவரிக்கும் பிரத்தியேக காட்சிகள் எதுவும் கிடையாது.கதையின் ஓட்டத்தில் முழுமையாகக் கரைந்து பல இடங்களில் அன்டர் ப்ளே(under play) செய்திருக்கிறார். ஜீனாக வரும் மேகி கில்லெனால், ராபர்ட் டூவெல், காலின் ஃபேரல் ஆகியோர் கன கச்சிதமாக அவரவர் கதாபாத்திரங்களில் பொருந்திப் போகிறார்கள். படத்தில் ஆங்காஙே வரும் கவிதுவமான வசனங்கள் புன்னகைக்க வைக்கின்றன.
(Jean: “Where’d all those songs come from?”
Bad Blake:“Life, unfortunately.” )
படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு அம்சம் இசை.பொதுவாக ஆங்கில பாடல்களைக் கேட்க்கும் வழக்கமில்லாத எனக்கே பாடல்களை திரையில் கேட்க இனிமையாக இருந்தன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டி-போன் பர்னெட் மற்றும் (late) ஸ்டீஃபன் ப்ரூட்டன் அருமையான பாடல்களைத்
தந்திருக்கிறார்கள். குறிப்பாக "Weary kind" பாடல் இந்த முறை சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதைப் வென்றிருக்கிறது.கேட்டுப் பாருங்கள்.
இயக்குனர் ஸ்காட் கூப்பர் பல தொலைக்காட்சி தொடர்களை எடுத்திருந்தாலும் இதுவே அவருக்கு முதல் படம்.திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும், போரடிக்காமல் செல்கிறது. ஜெஃப் ப்ரிட்ஜஸிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்காக இவரைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். ஜெஃப் ப்ரிட்ஜஸின் ஆகச்சிறந்க்ட நடிப்பாக 'பிக் லெபோஸ்கி'(Big lebowski) என்ற படத்தில் நடித்ததைக் குறிப்பிடுவார்கள். இந்த படத்திற்குபபின் அது மாறலாம்.
Congratz Dude!!
Friday, June 13, 2008
தசாவதாரம் விமர்சனம்(without spoilers)

டிஸ்கி:நான் without spoilers போட்டதுக்கு காரணம் என் பெருந்தன்மை அல்ல.கதையை சொல்வது அவ்வளவு கடினம்.ஒரு பயணம் போல நீளமாக செல்லும் இந்த திரைக்கதையை இரண்டு வரிகளில் சொல்லலாம் அல்லது கமல் போல மூன்று மணிநேரத்தில்(3.10) சொல்லலாம்.ஆனால் சஸ்பென்சை உடைக்கிறேன் என்று யாரும் உங்களை ஏமாற்ற முடியாது.அதனால் தைரியமாக படியுங்கள்.
படம் மிக நன்றாக இருக்கிறது.சற்றே நீளமாக இருந்தாலும் Worth watching.கமல் தனது இரண்டு வருட உழைப்பிற்கு நியாயம் செய்திருப்பதாகவே உணர்கிறேன்.வெவ்வேறு அவதாரங்களில் படம் முழுவதும் கமல் வியாபித்திருக்கிறார்.நான் வெவ்வேறு அவதாரங்கள் எனக்குறிப்பிட்டதில் கமலின் எழுத்தாள,நாத்திக அவதாரங்களும் அடங்கும்.
இரண்டு மூன்று கமல்களாவது அந்தரத்தில் தொங்குகிறார்கள்.குறிப்பாக அந்த நெட்டைக் கமலும் அவதார் சிங்கும் படத்திற்கு வேகத்தடை.படம் நீளம் என்று யாரும் சொன்னால் இவர்கள் தலையில் கைவைக்கலாம்.முகுந்தா தவிர பாடல்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை(ரஹ்மான் இசையமைத்திருக்கலாமென்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவிலை)அதேபோல மல்லிகா ஷெராவத்தின் பாடலும் அநாவசியம்.மடிசார் கட்டிவரும் 12ஆம் நூற்றாண்டு அசினைவிட தாவணியில் வரும் அசின் சற்று மனதில் பதிகிறார்.அவ்வபோது சிரிக்க வைக்கிறார் கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார்(அசினை விட ஜெயப்பிரதா அழகாகத்தெரிகிறார் என்று சொன்னால் அசின் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு வருமோ?).Branded கமல்-கிரெஸி மோகன் வகை காமெடியும் படம்முழுவதும் அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. நாகேஷ் , K.R.விஜயா, ரேக்கா,பாஸ்கர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கமல் தன் அப்பா பெயர் ராமசாமி நாயக்கன் என்கிறார்.படம் முழுவதும் நாத்திக கருத்துக்களை ஒளித்து வைத்திருக்கிறார்("மடம் ன்னா உள்ள கிரிமினல்கள் இருக்கக்கூடாதா?"- பல்ராம் நாயுடு).படத்தில் ஜெயலலிதாவும் வருகிறார்,கருணாநிதியும்(போலி) வருகிறார்.யாருடைய ஆட்சி காலத்தில் படம் வெளிவரும் என்ற நிச்சயமின்மை காரணமாக இருந்திருக்கலாம்.
இவ்வளவு கடினமான விஷயத்தை(10 roles concept) திட்டமிட்டு அதனை வரலாற்று நிகழ்வுடன் தொடர்பு படுத்தி எடுத்திருப்பது அபாரம்.கமலை திட்டவும் குற்றம் கண்டுபிடிக்கவும் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.ஆனால் படம் நன்றாக இல்லை என்று கமலைப் பிடிக்காதவர்களால் கூட சொல்லமுடியாது.
இவ்வளவு பெரிய விமர்சனத்தை படிக்க பொறுமை இல்லாமல் கடைசி வரிக்கு தாவியவர்களுக்கு: படம் அருமையாக இருக்கிறது .தியேட்டருக்குப் போய் பாருங்கள்.கமல் மற்றும் குழுவினருக்கு "சல்யூட்".
Sunday, April 13, 2008
கருத்து கந்த்ஸாமி
நேற்று காலையில், முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக செய்திச்சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தபோது,ஒன்றில் Breaking News ஓடிக்கொண்டிருந்தது.ஆஜ் தக் என்று நினைவு.என்ன செய்தி? சாயஃப் அலிகானை காண்பிக்கிறார்கள்.அவரது கழுத்துக்கு ஒரு close-up.அங்கு ஒரு நகக் கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.பிறகு கரீனா கபூர்,அவரது கைக்கு ஒரு close-up.அவருக்கும் நகக்கீறல் ஏற்பட்டிருக்கிறதாம்.இருவரும் டேட்டிங் செய்கிறார்களாம்.இதனால் சகலமானவர்களுக்கும் இந்த சேனல் சொல்ல விழைவது.....த்தூ...தொலைக்காட்சியை அணைத்துவிட்டேன்.இதைவிட கீழ்தரமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தால் செய்தி வழங்கமுடியாது.அதுவும் அனைவரும் செய்திகளைப்பார்க்கும் காலைவேளையில்.ஆஜ்தக் என்றில்லை ஸ்டார் நியூஸ்,இண்டியா டிவி,டைம்ஸ்,ஸீ என வரிசையாக பெரும்பாலான செய்தி சேனல்கள் இதையே தான் செய்கின்றன.இவற்றோடு ஒப்பிட்டால் NDTV.IBN Live பரவாயில்லை.சினிமா செய்திகளைக்கொடுக்க M,V என ஆயிரம் சேனல்கள் இருக்க இவர்களும் ஏன் இதையே செய்கிறார்கள் என்பது புரியவில்லை.விதர்பாவில் இந்தவாரம் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இன்றோடு 9 ஆக உயர்ந்துள்ளது.2008ல் மட்டும் 256 பேர்.2005லிருந்து இன்றுவரை மொத்தம் 1500 பேர்.சத்தமின்றி ஒரு இனப் படுகொலையே நடந்து கொண்டிருக்கிறது,ஆனால் மக்களுக்கு இத்தகைய செய்திகளைக் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்தி ஊடகங்கள் சாயஃப் அலிகானின் கழுத்துக் காயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.
உண்ணாவிரதக் கூட்டத்தில் சத்ய ராஜ் முஷ்டியை மடக்கி உணர்ச்சிமயமாகப் பேசியதைப்பார்க்க காமெடியாக இருந்தது.திரைத்துறையின்றரின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒரு வெட்டி வேலை.அவரது 'தீப்பொறி ஆறுமுகம்' வகைப்பேச்சில் கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்ததில் ஆச்சரியமேதுமில்லை.ஆனால் அவர் ரஜினியைப்பற்றி சொன்னவை அனாவசியம் என்று தோன்றுகிறது.கன்னடரான(அல்லது மராட்டியரான) ரஜினி இவ்விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் கடமையைச் சரியாகவே செய்திருக்கிறார்.சத்யராஜுக்கு அவர்மேல் பல நாள் வெறுப்பு இருந்திருக்க வேண்டும் .இதுதான் சமயம் என்று சீண்டிப்பார்த்திருக்கிறார். எனக்கு 'விஜயகாந்த் படம் பார்த்து விட்டு,அகப்பட்ட நோஞ்சானை குத்துவிடும்' என்ற வலையுலக க்ளிஷேதான் நினைவுக்கு வருகிறது.
கமலின் தமிழ் பேட்டிகளைப் புரிந்துகொள்வதில் தான் சிறிது சிரமம் உள்ளது.ஆங்கிலப் பேட்டிகள் தெளிவாகப் புரிகின்றன.ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு கமல் அளித்த சிறுபேட்டி அண்மையில் நான் படித்த பேட்டிகளில் சிறந்தது எனலாம்.மாதிரிக்கு..
ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்
My politics is private like sex. I don'twant to spoil the fun by talking about it.
Q:Both the times when you separated from your wives, there was another woman involved. Sarika led to your split with Vani and Simran caused a rift between Sarika and you.
கமல்: Unless it's a gay marriage, there's always another woman involved.
தூம்- 2 பார்த்தபோது வந்த அதே தலைவலி 'ரேஸ்' பார்த்தபோதும் வந்தது.படத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருவர் இறந்து போகிறார்.10நிமிடங்களில் திரும்பி வந்துவிடுகிறார்.பர்முடெஷன் காம்பினேஷனில் நாயகர்கள்,நாயகிகள் ஜோடி மாறுகிறார்கள்.சோகப்பாட்டோ,சந்தோஷமான பாட்டோ அதிஃப் மூக்கால் அழுகிறார்.ஆனால் எப்படியோ இந்த படங்களும் பாடல்களும் ஹிட் ஆகிவிடுகின்றன.சொத்தைக் கடலையை சாப்பிட்டால்,வேறு ஒரு நல்ல கடலையைச் சாப்பிடும் வரை வாய் உவ்வே..என்றிருக்கும் அதுபோலதான் திரைப்படங்களும்.நல்ல வேளையாக ரேஸ் படத்திறு பிறகு ஷெளரியா(தீரம்) பார்க்கக்கிடைத்தது.ராகுல் போஸ்,K.K.மேனன்,ஜாவித் ஜாவ்ரி நடித்திருக்கும் இந்தப் படம் ராணுவ வழக்கு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. இது "A few Good Men"படத்தின் அப்பட்டமான காப்பி என்று கேள்விப்பட்டேன்.நல்ல வேளையாக அந்த ஆங்கிலப் படம் பார்க்காததால்,ஷெளரியாவை ரசிக்க முடிந்தது.ரீமேக் என்ற சொல்லமுடியாத படிக்கு நம் நாட்டுக்கு நெருக்கமானதொரு பிரச்சனையை கையாள்கிறது படம்.வேறெதற்காக இல்லாவிட்டாலும் K.K.மேனனின் அனாயாசமான நடிப்புக்காகவாவது படத்தப் பார்க்கலாம்.
Friday, October 05, 2007
திரை விமர்சனம்
நான்கு(மார்கெட் போன)கதாநாயகர்கள்.நான்கு பேரும் முட்டாள்கள்.இவர்களுக்கு வேலை வெட்டி இருக்காது.இவர்களை தூக்கி சாப்பிடும் விதமாக அடிமுட்டாளாக ஒரு வில்லன்.இவர்கள் எல்லாரும் பணத்தையோ பெண்ணையோ தேடி அலைய வேண்டும் + ஒரு மூட்டை பழைய ஜோக்குகள்(பீர்பால் நகச்சுவைகள்,தெனாலி ராமன் துணுக்குகள்,சர்தார்ஜி ஜோக்குகள்).
இது தான் பாலிவுட்டில் தற்போது எல்லா நகைச்சுவைப் படங்களும் இன்ஹெரிட் செய்யும் பொதுவான டெம்ப்ளேட்.
Director :Indra Kumar
Actors :Sanjay Dutt,Arshad Warsi,iJaved Jaffrey,
Ritesh Deshmukh, Aashish Chaudhary,Asrani
Music Director:Adnan Sami
சாகும் தருவாயில் பிரேம் சோப்ரா புதையல் பற்றிய ரகசியத்தை நான்கு பேரிடம் சொல்லிவிட்டு இறந்து போகிறார்.புதயலைத் தேடி வரும் (போலீஸ்)சஞ்சய்தத்துக்கும் இந்த நால்வருக்கும் நடக்கும் சண்டைகளும்,புதையலை அடைய ஒவ்வொருவரும் தனித்தனியே செய்யும் முயற்சிகளும் தான் கதை.இரண்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்து துணுக்கு மழை.ஆனால் எல்லாம் நாம் ஏற்கனவே கேட்டு சிரித்த பழைய ஜோக்குகள்.காதலா காதலாவில் இறந்தவர் வீட்டுக்குபோய் ஓவியம் விற்கும் காட்சியைக் கூட காப்பியடித்திருக்கிறார்கள்(காதலா காதலா ஒரிஜினலா??).அங்கங்கே சிரிப்பை வரவழைத்தாலும் மொத்ததில் படம் சுமார்.
மதிப்பெண்கள்: 1/5
டோல்(Dhol)

Director :Priya Darshan
Actors :Sharman Joshi,Tusshar Kapoor,Kunal Khemu,
Tanushree Datta,Rajpal Yadav,Om Puri
Music Director:Pritam chakraborty
நான்கு வெட்டி கதாநாயகர்கள்.எதிர் வீட்டுக்குக் குடிவரும் தனுஷ்ரீயை கவர நால்வரும் வித விதமாக முயற்சி செய்கிறார்கள் .தனுஷ்ரீ தத்தாவோ இறந்துபோன தன் அண்ணனின் சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று தோன்றியது.ராஜ்பால் யாதவ் "பக்கியா கல்டி மாரோ" என்று அலறிய போது மூளையில் பல்ப் எறிந்தது."கோபாலா பிச்சுக்கோ" ஞாபகம் இருக்கிறதா?.படம் பெயர் எம்.ஜி.ஆர் காலனி என்று நினைக்கிறேன்.ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்தது.இதன் மூலம்- "ஹரிஹர் நகர்"(மலையாளம்) .பிரியதர்ஷன் ஆனாலும் அர்த்தபழசுகளைக்கூட விடாமல் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்.முதல் பாதி அறுவை,இரண்டாவது பாதி தப்பிப்பிழைக்கிறது.
மதிப்பெண்கள்: 1/5
மனோரமா-Six Feet Under
Director :Navdeep Singh
Actors :Abhay Deol,Raima Sen,Gul Panag,Sarika,Vinay Pathak,Kulbhushan Kharbanda
MusicDirector: Jayesh Gandhi,Raiomond Mirza
வாரத்திற்கு ஐந்து ஆறு படங்கள் ரிலீஸாவதில் உள்ள சங்கடம் சில நல்ல முயற்சிகள் கவனம் பெறாமல் போவது தான்.நான் போனவாரம் பார்த்த மனோரமா-six feet under அப்படிப்பட்ட முயற்சி எனலாம்.ரோமன் பொலன்ஸ்கியின் "சைனா டவுன்" படத்தை லேஸாகத் தழுவி எடுக்கப் பட்டிருக்கிறது.ஜெய்பூர் அருகே வறசியான ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது.இரிகேஷன் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்க்கும் 'அபய் தியோல்' லஞ்ச ஊழல் காரண்மாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டில் இருப்பவர்.எழுத்து தான் இவருக்கு முதல் காதல்.துப்பறியும் கதைகள் எழுதிபெயர் பெறவிரும்பும் இவரின் முதல் கதையே படுதோல்வி.போததற்கு சதா தொணதொணக்கும் மனைவி.இந்நிலையில் ஒருநாள் இரவு இவரது வீட்டிற்கு வரும் சரிகா தன்னை மந்திரியின் மனைவியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.மந்திரிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும்,அவரை வேவு பார்க்கவேண்டும் என்றும் கூறி பெருந்தொகை ஒன்றைக்கொடுத்துச் செல்கிறார்.விளையாட்டாக 'அபை' இதில் இறங்க, அடுத்தடுத்து நிகழும் கொலைகளும்,விழும் முடிச்சுகளும் அவரை பெரும் சிக்கலில் மாட்டிவிடுகின்றன.சாகசங்கள் எதுவும் செய்யத்தெரியாத ஹீரோ இதனை எப்படி எதிர் கொள்கிறார் என்பது மீதிக்கதை.வித்தியாசமான கதையையும்,கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்காகவே அறிமுக இயக்குநர் 'நவ்தீப் சிங்கை' பாராட்டலாம்.மிக மெதுவாகவும்,இயல்பாகவும் பயணிப்பதே இப்படத்தின் பலம் மற்றும் பலவீனம்.பாலைவனத்தின் வெய்யில் அருமையாக சிறைபடுத்தப்பட்டிருக்கிறது கேமராவில்(அரவிந்த் கண்ணபிரான்).இப்படத்தின் ஹீரோ 'அபை தியோல்' எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.வழக்கமான மசாலா படங்களை ஒதுக்கி வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்(சோச் நா தா,ஆஹிஸ்தா ஆஹிஸ்தா,ஏக் சாலிஸ்..),இந்த படத்திலும் படு இயல்பாக நடித்திருக்கிறார்.கொஞ்ச நேரம் வந்தாலும் விநாயக் பதக்(பேஜா ஃரை) கலக்குகிறார்.கடைசி இருபது நிமிடங்களில் நிகழும் திரைக்கதைக் குழப்பங்கள் படத்திற்கு மைனஸ்.மொத்தத்தில் இது ஒரு Refreshing Movie.
Noir என்று சொல்லப்படும் Black Film வகையைச் சேர்ந்தது இந்தப்படம்.தமிழில் இவ்வகைப்படங்கள் உள்ளனவா?தெரிந்தவர்கள் குறிப்பிடலாம்.
மதிப்பெண்கள்: 3/5
ஜானி கத்தார்(Johny Gaddar)

Director :Sriram Raghavan
Actors :Neil Mukesh,Zakir Hussain,Dharmendra,Rimi Sen,Vinay Pathak
Music Director:Vishal Dadlani · Shekhar Ravjiani
"மனோரமா" விற்கு எதிர் மாறாக ஒரு த்ரில்லர்.படத்தின் முதல் பத்து பதினைந்து நிமிடங்களிலேயே யார் செய்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் ,இருந்தும் அடுத்து வரும் இரண்டுமணி நேரமும் உங்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர்.ஐந்து பிரதான கதாப்பாத்திரங்களைச் சுற்றி கதை சுழல்கிறது என்றாலும் படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான்.ஹாலிவுட் பாணியில் புத்திசாலித்தனமான படம் கொடுத்ததற்காக ஸ்ரீராம் ராகவனுக்கு(தமிழ்?) ஒரு "சபாஷ்".நடிகர்களின் நடிப்பு OK ரகம்.தர்மேந்திரா,விநாயக் பதக் நன்றாக நடித்திருக்கிறார்கள்.ஹீரோ அவ்வப்போது என்ன முகபாவம் கொடுப்பது என்று தெரியாமல் விழிக்கிறார்(அது கதைக்கு பொருத்தமாகவும் உள்ளது!).சின்ன சின்ன லாஜிக் வழுக்கல்கள் தவிர பெரிதாகக் குறிப்பிட குறைகளெதுவும் இல்லை.பின்னணி இசை கச்சிதம்.இரண்டு ஹிட் பாடல்கள்,இரண்டுமே திரையில் வராது.
பாக்கிய ராஜின் "விடியும் வரை காத்திரு" பார்த்திருக்கிறிர்களா?அந்த ஜாதிப் படம் இது.
மதிப்பெண்கள்: 3/5
Tuesday, August 07, 2007
"Gandhi My Father" - விமர்சனம்

யாரும் தொடத்தயங்கும்,யாரும் அறியாத காந்தியின் மறுபக்கத்தை படமாக்கத் துணிந்ததற்காக இயக்குனரையும்(Feroz Abbas Khan),தயாரிப்பாளரையும்(Anil Kapoor) பாராட்டியே ஆகவேண்டும்.அதுவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் அனில் கபூருக்கு இது முதல் படம்!
நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் கஸ்தூர்பா வாக வரும் ஷிவாலி சாயா.பெங்காலி நடிகைகளுக்கு நடிப்பு ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் போல.இவர் இந்த படத்திற்காக சில விருதுகளை எதிர்பார்க்கலாம்.பூமிகாவின் நடிப்பும் நிறைவாக இருக்கிறது.Saturday, March 31, 2007
The Namesake - விமர்சனம்
எவ்வளவு யோசித்தும் கதையை ஒரே பாராவில் சொல்வது எப்படி என விளங்கவில்லை.காரணம் அதிரடித் திருப்பங்களின்றி அதீத இயல்புத்தன்மையுடன் பயணிக்கிறது படம்(ஆதவன் கதை போல).எழுபதுகளின் துவக்கத்தில் நியூயார்க் சென்று குடியேறும் பெங்காலி குடும்பத்தைப் பற்றியது கதை.அங்கு பிறக்கும் அவர்களின் குழந்தைகள் சந்திக்கும் Cross-Culture குழப்பங்களையும்,Identity குறித்தான வினாக்களையும் எழுப்பிச்செல்கிறது படம்.
பெங்காலி தம்பதிகளாக இர்பான் கான்(Irfan Khan), தபு(Tabu) நடித்திருக்கிறார்கள் இல்லை வாழ்ந்திருக்கிறார்கள்.அதுவும் இர்பான் கானின் சின்ன சின்ன முகபாவ மாற்றங்கள் கூட அருமை(அட யாருப்பா அங்க,இவர தமிழுக்கு கூட்டீட்டு வாங்க).இவர்களின் மகனாக வரும் கால் பென்னும்(Kal Penn) நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்க வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை மிகைப்படுத்தி ஜல்லியடிக்கும் வழக்கமான 'இந்திய-ஆங்கில' படம் போலன்றி உள்ளபடி காட்டியதற்கு பாராட்டலாம்.அதே சமயம் அஷோக் கங்கூலி அனாமத்தாக இறந்துபோகும் போது சற்று கிலி ஏற்படுகிறது.குறிப்பாக அவர் இறந்து போவதை விஸ்தாரமாகக் காட்டாமல் ஒரு செய்தியாகக் குறிப்பிடுவது நிகழ்வின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது(சலாம் மீரா!).
வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.திருமணமாகி பலவருடங்கள் கழித்து தாஜ்மஹால் வருகிறார்கள் தபுவும் இர்பானும்,
இர்பான்:ரொம்ப நாளா கேக்கணும்னு நெனைசேன்.பொண்ணுபாக்க வந்தப்ப என்ன பிடிசிருக்குன்னு ஏன் சொன்ன?
தபு:என்ன பாக்க வந்தவங்கள்ள நீ தான் Best.ஒரு கை மட்டும் இருந்த கார்டூனிஸ்ட்,ரெண்டு குழந்தைங்களோட வந்த விடோவர் இவங்களுக்கு நீ பரவால்ல.அதுவும் நீ போட்டுகிட்டு வந்த அமெரிக்கன் ஷூ எனக்கு ரொம்ப பிடிசிருந்தது
(இர்பான் ஏமாற்றத்தோட பாக்க)
தபு:ஏன் அமெரிக்க காரங்க மாதிரி "I Love You" சொல்லுவேன்னு பாத்தியா?
3.5/5 . கண்டிப்பாகப் பார்க்கலாம்.குரூர மான சிந்தனைகளுக்கு விரட்டிச் செல்லாத சாதாரணமான அமைதியான விடுமுறை நாளை வேண்டுபவர்கள் பார்க்க நான் பரிந்துரைக்கும் மற்றொரு படம் "The Pursuit of happyness"
Sunday, November 19, 2006
The Departed - விமர்ஜனம்

ஆரம்பக் காட்சிகளில் ஜாக் நிகல்சன் "I don't wanna be a product of my environment, I want my environment to be a product of me"என்று கூறிப் புன்னகைக்கும்போதே தெரிந்துவிடுகிறது நின்று விளையாடப் போகிறார்கள் என்பது.இரவு தூக்கத்தைத் தியாகம் செய்து படம் பார்த்ததை, படம் நியாயப்படுத்தியது.
கதைக்களம்(spoiler warning)
தெற்கு பாஸ்டனில் உலாவரும் மாபியா தலைவன் பிராங்க் காஸ்டெல்லோ(ஜாக் நிக்கல்சன்).அவரது கண்காணிப்பில் வளரும் காலின் சல்லிவன்(மாட் டாமன்),வளர்ந்து போலீஸில் சேருகிறான்.சேர்ந்து காஸ்டெல்லோவின் உளவாளியாக செயல் படுகிறான்.
மோசமான குடும்ப பின்னணியிலிருந்து வளர்ந்து,கடின உழைப்பால் போலீஸில் சேரும் பில்லி காஸ்டிகன்(டி-கேப்ரியோ) காஸ்டெல்லோவின் கூட்டத்திற்கு அனுப்பப்படுகிறான் போலீஸின் ரகசிய உளவாளியாக செயல்பட.
ஒருகட்டத்தில் இரு குழுக்களும் தங்களுக்குள் ஒரு ஒற்றன் இருப்பதை உணர்கிறார்கள்.டிகேப்ரியோ,மாட் டாமன் இருவருக்குமே எதிர் உளவாளியைக் கண்டுபிடிப்பது வாழ்வா சாவா போராட்டம்.இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்.இப்படியாகச் செல்கிறது கதை.
----------------------------------------------------------------Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference?
--------------------------------------------------------------------------------------
ஒரு மசாலபடம் எடுப்பதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தும்,கண்னியமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் Martin Scorsese .இது "Infernal affairs"என்ற ஹாங்காங் படத்தின் தழுவல் தான் என்றாலும்,கட்சிகுக் காட்சி remake பண்ணாமல் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம்.
படத்தின் மிகப்பெரிய பலம் "நடிகர்கள்".நடிகர்கள் தேர்வு சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.ஜாக் நிகல்சன்,டிகேப்ரியோ,மாட் டாமன்,மார்க் வில்பர்க் என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.ஜாக் நிகல்சன் படம் முழுவதும் அனாயாசமாக வில்லத்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தன் மன உளைச்சலை வெளிப்படுத்தும் இடங்களிலும்,ஜாக் நிகல்சனுடனான உரையாடல்களின் போதும் டி-கேப்ரியோவின் நடிப்பு Class !
படத்தின் மற்றொரு பலம் 'வசனங்கள்'.Frank costello:When I was your age they used to say you could become cops or criminals. What I'm saying to you is this... When your facing a loaded gun, what's the difference? போன்ற வசனங்கள் கைத்தட்டலைப் பெறுகின்றன.ஆங்கிலப்படம் பார்க்கையில் எல்லாரும் சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கும் எனக்கே இப்படத்தின் வசனங்கள் புரிந்தன :)

சில குறைகள்:
*தமிழ்படங்கள் நிறைய பார்த்து பழக்கப்பட்டதாலோ என்னவோ படத்தின் முடிவு அவ்வளவு உடன்பாடுடையதாக இல்லை.படத்தின் முடிவில் Director ,லைட் பாய் தவிர மற்றெல்லாரையும் சுட்டு வீழ்த்திவிடுகிறார்கள்.
*படத்தில் நான்கெழுத்துக் கெட்டவார்த்தை வரும் நேரத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், படம் ஒன்றரை மணிநேரமாகச் சுருங்கிவிடும்.
* படத்தின் கதாநாயகி கதாப்பாத்திரம் சற்று முரண்பாடுடையதாக இருக்கிறது."Infernal Affairs" படத்தில் இரண்டு பெண்கள் செய்த தனித்தனி கேரக்டர்களை இதில் ஒரே பெண்செய்வது போலக் காட்டியிருப்பது ,திரையில் சரியாக வரவில்லை.
இந்தமுறை ஆஸ்கர் ரேஸில் நடிப்பு உட்பட சிலபிரிவுகளில் "The Departed" விருதுகளை அள்ளப்போவது உறுதி.
Friday, August 25, 2006
வேட்டையாடு விளையாடு Review(India Glitz)

There is a universal charm to a policeman in search of clues to crack a series of murders. Its attraction is almost primordial. And when you have somebody like Kamal who can get into the flesh of any character and Gautham Menon, who knows how to set up the right ambient mood and field, what you have is two and half hours of sustained and quality entertainment. Vettaiyaadu Vilaiyaadu is proof for that.
It is technically superior ----- the edges are pared down to give that steely and glassy Yankee feel. The lighting is moody and menacing in turns, just the backdrop for an urban thriller. The editing is cutting edge ---where events coalesce in easy and effective links. The way Gautham explores New York is something that even Woody Allen would have approved of.
The broad plot of a policeman trying to crack a case ---- a variation of a cat and mouse theme ---- gets the right backing from Gautham, who goes beyond Kaakha Kaakha where he showed what happens when a cop uses his brawn and pin-pointed aggression. Here he lets the man use his mental craft.
Gautham sets the mood right from the start as he introduces DCP Raghavan (Kamal Haasan) in typical style. Raghavan sets off on the trail of the killers of Rani, the daughter of Arogya Raj (Praksh Raj). Raghavan and Arogya Raj go back long way together. They share a unique relationship.
While Raghavan is stunned by the gut-wrenching morbidity in Rani’s killing, Arogya Raj and his family set off to New York to escape from the memories of their daughter. But there he is hacked and bumped off in the most violent of manners.
Raghavan is off to crack this perplexing mystery. In NY, he runs into Aradhana (Jyothika). Raghavan is a widower (his wife Kamalini is taken out by thugs) while Aradhana is trying to get out of a failed marriage. The two make a pair. And Raghavan gets down catching the killers with the help of American police.
It is slick and shiny all through with all the pauses and poise that such a script requires. Kamal’s acting need not be elaborated. He brings a sharp idiom to the role of a cop who has to hunt to some faceless killers.
Kamal’s strength is that he can shine in even lonely roles (even when he can’t feed off from somebody else’s intensity). Kamal understates and underplays the cop character with remarkable discernment. The narrative simply unfolds from him. Jyothika too is quiet and restrained. Kamalini is cute and plays a simple role with elegance. Prakash Raj is as ever bankable. This man never ceases to amaze us with his variety. Balaji as the villain fits the bill.
Harris Jeyaraj and Gautham share a unique rapport. Harris songs not only rock but the re-recording too is simply superb.
The other hero of the film is Ravi Varman, the camera man. He has given the entire flavor and feels to the movie. In a lesser craftsman’s hand, the film would not have got this polish and finesse. His visual metaphors are apt and the lighting is amazing. The angles too are novel and keep you interested all through.
Gautham knows how to let the story flow in trendy narratives. He has the feel for the medium as well he knows how to wrest good performances from his team. In the event, Vettaiyaadu Vilaiyaadu is a worthy successor to his Kaakha Kaakha.
Thanks: Indiaglitz.com
Wednesday, June 28, 2006
வீடு

"வீடு பட சிடி இருக்கா? "
அந்த (வாடகை)சிடி கடைக்காரர் ஏற இறங்கப் பார்த்தார். "இல்லைங்களே அடுத்தவாரம் சென்னை போகும்போது வாங்கிட்டு வறேன்" என்று சொல்லி பெயரைக்குறித்துக்கொண்டார்.
அருகில் இரு பெண்கள் கஜினி சிடி ரிட்டர்ன் செய்வதற்காக நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் என்னை ஒரு Intellectual என்று நினைத்திருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டு ஒரு look விட்டேன்(மேட்டுக்குடி படத்தில் கவுண்டமணி விடுவது போல).ஆனால் ஏதோ ஒரு ஜந்துவைப்பார்ப்பது போல அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.மெதுவாக அங்கிருந்து நடையைக்கட்டினேன் .
இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது,ஒருகாலத்தில் இந்தப்படத்தின் பெயரைக்கேட்டாலே தலைதெறிக்க ஓடுவேன்.நான் 2nd std அல்லது 3rd std படிக்கும் போது இந்தப்படம் வெளியானது என்று நினைக்கிறென்.தேசிய விருது வாங்கி சீக்கிரமே DDக்கு உடைமையாகிவிட்ட படமிது.பிராந்திய மொழிப்பட வரிசையிலும்,ஞாயிரு மாலைப் படவரிசையிலும் மாறி மாறி ஒளிபரப்பி இம்சித்தார்கள். அப்போதெல்லாம் (பெயர் தெரியாத படமாக இருந்தால் )Title போடும்போது உன்னிப்பாக கவனிப்பேன்.சண்டைப்பயிற்சி என்ற slide வந்தால் சரி இது பார்ப்பதற்கு உகந்த படம் என்று முடிவு செய்து விடுவேன்.படதில் இடம்பெற்றிருக்கும் மொத்த சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கையைக்கொண்டு தான் அதன் தரத்தை நிர்ணயிப்பேன்.அந்த அளவுகோலின் படி 'வீடு' நான் பார்ப்பதற்கு அருகதயற்ற படம்.அதுவும் இந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியோ,ஒரு நகைச்சுவைக்காட்சியோ கூடக்கிடையாது.அப்போது இந்தப்படத்தைப்பற்றிய என் கருத்து "இது மிகவும் மெதுவான படம்,எல்லாரும் மெதுவாகப் பேசுவார்கள்,மெதுவாக நடப்பார்கள்,அதுவும் அந்த தாத்தா ரொம்ப slow, அவ்வளவுதான்.
அப்போது மதியம் மாநில மொழிப்படங்களை Alphabetic ordaரில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்,அதாவது மராத்தி,ஒரியா,பஞ்ஜாபி,தமிழ்,தெலுகு என்று.இதில் தமிழும் தெலுங்கும் விதிவிலக்கு.தமிழும் தெலுங்கும் மாறி மாறி முதலில் வரும்.பெரும்பாலும் தமிழ் முதலில் வரும்.அந்தவாரம் என்ன படம் என்று ஞாயிரு காலை அறிவிப்புகளில் தான் தெரிய வரும்.அந்த வரிசயில் வீடு,சந்தியாராகம் இதெல்லாம் ஒளிபரப்பப்பட்டால்,பயங்கரமாகக்கோபம் வரும்.
ஆனால் இப்போது ரசனையெல்லாம் மாறி அல்லது மேம்பட்டு(கண்டுகாதீங்க!) மகேந்திரன்,பாலுமகேந்திரா படமெல்லாம் பார்க்கத்தோன்றுகிறது.1988-ல் வெளியான இந்தப்படம் பாலு மகேந்திராவின் masterpiece என்று வர்ணிக்கப்படுகிறது.படத்தின் கருவும்,காட்சியமைப்புகளும் நிஜத்திற்கு ஆருகில் இருந்தது என்று சொல்வதைக்காடிலும் நிஜமாக இருந்தது என்றே சொல்லாம்.வேலைக்குப்போகும் ஒரு Lower middle class பெண் வீடுகட்ட ஆசைப்பட்டு,அதற்காக அவள் படும் கஷ்ட்டங்களை மிக இயல்பாக விவரிக்கும் படம் .அர்ச்சனா,சொக்கலிங்க பாகவதரின் நடிப்புகள் சிறப்பாகப் பேசப்பட்டன.அர்ச்சனா சிறந்த நடிகைக்கான தெசிய விருதினை இந்தப்படத்தின் மூலம் பெற்றார்.இளையராஜாவின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதுவும் "How to name it" ஆல்பத்திலிருந்து சில பகுதிகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி இப்படத்தைப்பார்க்கும் ஆவலை மேலும் தூண்டுகிறது.பாலு மகேந்திரா commercial சமரசங்கள் (சில்க் dance)எதுவும் செய்துகொள்ளாமல் எடுத்த படமிது.
மீண்டும் ஒரு தரம் முதல் தடவையாக இந்தப்படத்தைப் பார்க்கப்போகிறேன்!!
Thursday, May 04, 2006
கண்டிப்பா பயப்படணும் (அல்லது) பயப்படுவது மிகவும் அவசியம்

தலைப்பைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்."டர் நா ஸரூரி ஹை" படத்தோட Translation தான் அது.எப்டி கலக்கறோமா! சரி மேட்டருக்கு வருவோம்.கடந்த வாரம் மேற்சொன்ன இந்த (அபத்தமான)படத்தை பார்க்க நேர்ந்தது.படத்தின் 6 கதைகளையும் 6 வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.ராம் கோபால்வர்மாவின் கற்பனை கிணரு வற்றிவிட்டது போலும்..குமுததில் வரும் ஒருபக்கக்கதை போல 6 கதைகளை சேர்த்து முழு நீள படமொன்றை எடுத்துவிட்டார்.இதுபோல கதைகளை சேர்த்து எடுப்பது நல்ல உத்தி தான் என்றாலும் தேர்ந்தெடுத்த கதைகள் எல்லாம் பழசு, நாம் ஏற்கனவே அறிந்தது.அதனால் சுவாரசியம் ஏற்படவில்லை.
6 கதைகளில் அர்ஜுன் ராம்பால் வரும் கதை மட்டும் தேறுகிறது..அமிதாப் பச்சனை வீணடித்திருக்கிறார்கள்.வழக்கம் போல பயமுறுத்துவதற்கு இந்த படத்திலும்இசையை தான் நம்பியிருக்கிறார்.இசையமைப்பாளரும் வாங்கிய காசுக்கு நன்றாக அடித்திருக்கிறார்.
ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது....அமிதாப் திரையில் தோன்றும் முதல் காட்சியில்,திரையரங்கில் யாருமே கைதட்டவில்லை...அட ஒரு விசில் கூட இல்லை.இதற்கும் படம் ரிலீஸான இரண்டாம் நாள் சென்றுள்ளேன்.வட இந்தியாவின் Super starக்கே இந்த நிலமைதான்.காரணம்...
1)வட இந்தியர்கள் நம்மைப்போல் சினிமாகாரர்களை கொண்டாடுவதில்லை.சினிமாவை சினிமாவாகப்பார்கிறார்கள்.
2)ரிலீஸாகும் 75% படஙளில் அமிதாப் இருக்கிறார்.
(Assistant Dir:சார்,இந்த படத்தில் அமிதாப் பண்ற மாதிரி ரோல் ஒண்ணுமில்லை.
Director:அப்டீன்னா..ஒரு சீன்ல மட்டும் வர்ற அந்த Post man characterஐ பண்ண சொல்லு.)
Default actor!!
படத்தின் முதல் காட்சியில் ,ஒருவர் "டர் னா மான ஹை" பார்த்துவிட்டு தியேட்டர் காரரிடம் சென்று ராம்கோபால் வர்மாவின் address கேட்பார்.தியேட்டர் காரர் எதற்கெனக்கேட்பார்.அத்ற்கு இந்த முதல் ஆசாமி காசை திருப்பி வாஙணும் என்பார்.
படம் முடிந்து வெளியெ வரும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
Thursday, April 20, 2006
அன்பே சிவம்

கடந்த வாரம்,அன்பே சிவம் படத்தை மீண்டும்(6வது முறையாக) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.கமலின் எல்லா படஙளும் எனக்கு பிடிக்கும் என்றாலும்,இந்த படம் எனக்கு மிகப் பிடித்த (டாப் டென்) படங்களில் ஒன்று.
அண்மையில் கம்யூனிசம் பற்றி பேசும் எந்த தமிழ்படமும் வந்ததாக நினைவிலை.எந்த முன்னனி ஹீரோவும் ஏற்க தயங்கும் விகாரமான ரோலில் கமல் பின்னியெடுத்திருப்பார்.படதின் ஹைலைட்டே கமலுக்கும் மாதவனுக்கும் நடக்கும் conversations தான்(வசனம்:மதன்).
கமலுக்கு இணையான ரோல் மதவனுக்கு.மேடி கலக்கியிருப்பார். கமலின் இம்சை தாங்க முடியாமல் Give me a break man என புலம்புவது அழகு.freek out!
இந்தப் படத்தில் கமலின் நரம்புகள் கூட நடித்திருக்கும்.பெரிய சோடாபுட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு..ஒருமாதிரி இழுத்து,இழுத்து பேசுவார்.இதை படம் முழுவதும் ஒரேமாதிரியாக செய்திருப்பார்.gr8! (Flash backil அழகான கமலை ரசிக்கலாம்).
பாடல்களும் இப்படத்திற்கு plus(இசை விதயாசாகர்).குறிப்பக மது பாலகிருஷ்ணன் பாடிய "பூவாசம் புறப்படும் பெண்ணே" பாடல் அருமையாக இருக்கும்.படத்தில் சேர்க்கப்படாத SPB பாடல் ஒன்று இருக்கிறது."மெளனமே"எனத்துவங்கும் அப்பாடல் அக்மார்க் SPB மெலடி.
ஐந்தே நிமிடஙள் வந்தாலும் யூ.கி.சேது பட்டையை கிளப்பியிருப்பார்.
குறையே இல்லை என்று சொல்லமுடியாது.ஹீரோ வில்லன் மகளைக் காதலிப்பது,ஹீரொ 10 பேரை தனி ஆளாக நின்று பந்தாடுவது போன்ற தமிழ்படதுக்கே உரிய அபத்தங்கள் இதிலும் உண்டு.அதையெல்லாம் தாண்டி இப்படம் ஒரு வித்யாசமன முயற்சி.
கடைசிக்காட்சியில்,சந்தான பாரதி கமலை கொல்வதற்காக வந்துவிட்டு மனம் திருந்தி கொல்லாமல் விட்டுவிடுவார்.பின்பு கமலிடம்"திரும்பி வந்து என் பொழப்பில் மண்ணள்ளி போட்றாதீங்க "என்பார்.அதற்கு கமல் "பொழப்ப கெடுக்கமாட்டேன்..பொழச்சு போங்க " என்று சொல்லி சிரிப்பாரே.....Class
பி.கு:கமல் இந்த படத்திற்காக செலவழித்தது 12 கோடி.திரும்பக் கிடைத்தது 7கோடி

